சண்டையிட்டுக் கொண்டே


Img: Thanks Google
மனம்
நாட்கணக்காய் இப்படித்தான்
என்னுடன் சண்டையிட்டுக் கொண்டே


நான் இருக்கும் இடத்தில்
துடிக்கும் தருணத்தில்
இல்லாமல்
எங்கோ ஓடிக்கொண்டே
சொற்களாய் உணர்வுகளாய்
எண்ணமெங்கும்
இறக்கை கட்டிக்கொண்டு
பொறுமை பொறுமை என்றேன்
ஊடல் தான்
கைதிரட்டிக் கோர்க்கத் தொடங்க
அட அமைந்து விட்டதே
விரல்நுனியில்


Img:thanks Google




13 கருத்துகள்:

  1. அருமை துவங்கியதும் தொடர்ந்ததும் முடித்த விதமும்.

    பதிலளிநீக்கு
  2. ஆவலோடு எதிர்பார்க்கிறோம். தொடரட்டும் பதிவுகள்.

    பதிலளிநீக்கு
  3. ஹா ஹா ஹா அழகு கவிதை. சண்டையிட்டுக் கொண்டே மட்டும் அல்ல.. நாம் ஒரு நாட்டில் இருப்போம்ம்.. நம் மனமோ உலக நாடுகளை எல்லாம் ஒரு சுற்றுச் சுற்றி வரும்.. இடையிலதான் திடுக்கிட்டு சுயநினைவுக்கு வருவோம்:))

    பதிலளிநீக்கு
  4. வருக.. தேன்மதுரத்தமிழைத் தருக...

    பதிலளிநீக்கு
  5. உங்கள் விரல் நுனி இன்னும் பல கவிதைகள் சிந்தட்டும் Dear 💐

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

கிழக்கு பெட்டி ஆமை - கவிதை

   கிழக்கு பெட்டி ஆமை  கடப்பது என்ன அணில் குட்டியா? வேறுபட்டுத் தெரிகிறதே! வண்டியை நிறுத்திவிட்டேன் ஆகா! அணிலில்லை ஆமை! கடக்கட்டும் என நான் ...