பிங்கோ - தாயம் , பல்லாங்குழி போல உள்ளே விளையாடும் விளையாட்டு! விளையாடும் ஒவ்வொருவருக்கும் ஒரு அட்டையும் விளையாட நாணயங்களும் கொடுக்கப்படும். அட்டையில் B, I, N, G, O என்ற எழுத்துகளும் அவற்றின் கீழ் எண்களும் இருக்கும். நடுவராக இருக்கும் ஒருவர் ஏதாவது ஓர் எண்ணைச் சொல்ல, அது நம் அட்டையில் இருந்தால் அதன் மேல் ஒரு நாணயம் வைத்துக்கொள்ளவேண்டும். ஒருவருக்கு இடம்-வலமாக அல்லது மேல்-கீழாக ஒரே கோட்டில் ஐந்து எண்களும் அழைக்கப்பட்டுவிட்டால் அவர் "பிங்கோ" என்று சத்தமாகச் சொல்ல வேண்டும். அவரே வெற்றியாளர்! எண்ணைத் தேர்ந்தெடுத்து அழைக்க ஒரு டப்பாவும் இருக்கும்..அதைக் குலுக்கிச், சுற்றிவிட்டு வரும் எண்ணை எடுக்க வேண்டும். சரி, இப்பதிவின் நோக்கம் விளையாட்டைப் பற்றியது அல்ல. வாழ்க்கைப்பாடம், அனுபவம் பற்றியது..
எங்கள் சர்ச்சிலிருந்து முதியோர் இல்லத்திற்கு செல்வது வழக்கம். பலர் பல ஆண்டுகளாகச் செல்கின்றனர், நான் ஒருவருடமாகத்தான். அன்று பதின்பருவத்தினரை அழைத்துச் சென்று அங்கு இருக்கும் முதியவர்களுடன் பிங்கோ விளையாட ஏற்பாடு! பதின்பருவத்தினர் அவ்வப்பொழுது இப்படிப்பட்ட பல விசயங்களுக்குச் செல்வது அறிவேன். அதுதான் எனக்கு முதன்முறை! மூத்தவன் செல்லலாம் பிரச்சனை இல்லை. இளையவன் வயதுடையோர் பெரும்பாலும் அனுமதிக்கப்படுவதில்லையாம், ஆனால் நான் தன்னார்வப் பணியாளராகச் சென்றதால் சிறப்பு அனுமதி. எப்படியோ எனக்கு மகிழ்ச்சி, இருவரையும் அழைத்துக் கொண்டு சர்ச்சிற்குச் சென்று அங்கு திருப்பலி முடிந்தவுடன் புறப்பட்டோம் முதியோர் இல்லத்திற்கு.
ஒரு பெரிய கூடத்தில் மேசைகள் போடப்பட்டு விளையாட்டு அட்டைகளும் வைக்கப்பட்டிருந்தன. பின்னர் முதியவர் ஒவ்வொருவராக வந்தனர், இல்லை, அழைத்துவரப்பட்டனர். ஓரிருவரைத் தவிர அனைவரும் தள்ளு நாற்காலியில். ஒருவர் மூக்கில் சொருகப்பட்ட மூச்சுக் குழாயுடன். மேசைக்கு நான்கு பேர், ஒவ்வொருவருக்கும் ஒரு சிறியவர் என்று எங்கள் பிள்ளைகள் அமர்ந்துகொண்டனர். சில நிமிடங்கள் அளவளாவல்!
என் மூத்தவன் சேர்ந்து விளையாடியவர் பெயர் கேத்தி. (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அவருக்கு கண்பார்வை கிடையாது, வயது 96. தள்ளு நாற்காலியில்தான் வந்தார். அவருக்குத் தான் எத்துனை மகிழ்ச்சி! "அறையில் இருந்தேன், பிங்கோ விளையாட பிள்ளைகள் வந்திருக்கிறார்கள், விளையாட வேண்டுமா என்று கேட்டார்கள். துள்ளிக்குதித்து வந்துவிட்டேன், பிங்கோ விளையாட மிகவும் பிடிக்கும்", என்றார். வாயடைத்துப் போனேன்! என் மகனுடன் மகிழ்வாக அளவளாவிக் கொண்டிருந்தார். என்னிடம் கேட்டார், "உன் பேச்சு அசை அழுத்தம் (accent) வித்தியாசமாக இருக்கிறதே, நீ எந்த ஊர்?" நான் சொன்னவுடன், "இந்தியாவைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன், அழகான நாடு" என்றார். பின்னர் அவரிடம் விடைபெற்று இளையவன் சேர்ந்து விளையாட இன்னொரு முதியவரோடு நான் சென்றுவிட்டேன்.
ஆனால் கேத்தி என் மனதில் ஆழப்பதிந்துவிட்டார். அழைக்கப்படும் எண் தன் அட்டையில் இருக்கிறதா இல்லையா என்று என் மகன் அவரிடம் சொல்லிக்கொண்டே விளையாடினான். கண் தெரியவில்லை, என்ன பிங்கோ என்று நானாயிருந்தால் சொல்லியிருப்பேனோ? ஐம்பது, அறுபதிலேயே வயதாகிவிட்டது என்று அலுத்துக்கொள்ளும் நம்மூர் பெரியவர்களும் நினைவிற்கு வந்தனர்.
என் மேசையில் இருந்தவர்களுக்கும் எண் இருக்கிறதா, எங்கு இருக்கிறது என்று கண்டுபிடிக்க உதவினோம். மகிழ்வாகப் பேசிக்கொண்டே விளையாடினர். ஒருவருக்கு நான்கு எண்கள் ஒரே வரிசையில் வந்தபிறகு, ஐந்தாவது வராமலே இருந்தது..ஒருவரும் வெற்றிபெறாமல் நீண்டுகொண்டிருக்க சுற்றி வந்த எங்களோடு வந்த ஒருவர், மெதுவாக அந்த எண்ணைப் பார்த்துச் சென்று நடுவரிடம் சொல்லி, அவரும் அதையே அழைக்க, என்ன ஒரு மகிழ்ச்சி அவருக்கு!
ஒரு மணி நேரம் விளையாடிவிட்டு மகிழ்வோடு புதிய அனுபவத்தோடு திரும்பினோம். ஒவ்வொருவரும் மகிழ்வையும் நன்றியையும் தெரியப்படுத்தினர்.
வயதாகிவிட்டது, சும்மா இரு என்று சொல்லாமல் அவர்களையும் புரிந்துகொண்டு பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற அழகான பாடம் இளையவர்களுக்கும். நம்மூரிலும் இப்படிச் செய்யவேண்டும் என்று ஆசை. நான் பார்த்த வரை தனிமையாக, சோகமாகப் படுத்திருப்பார்கள், உணவு கொடுத்துப் பேசியிருக்கிறேன், விளையாடியது இல்லை.

அசை அழுத்தம் - accent தமிழ்ச்சொல் தெரிந்து கொண்டேன்.
பதிலளிநீக்குவயதானவர்களுடனான அனுபவம் நல்ல அனுபவம். இந்த விளையாட்டு பற்றித் தெரியாது. சுஜாதா ஒரு தரம் வசந்த் சொல்வது போல பிங்கோ என்கிற வார்த்தையை உபயோகித்துக் கேட்டிருக்கிறேன், ஸாரி, படித்திருக்கிறேன்.
மகிழ்ச்சி ஸ்ரீராம்.
நீக்குஓ சுஜாதா தகவல் பரிமாற்றத்தில் வல்லவராச்சே ..ஆங்காங்கு இப்படி ஏதாவது தகவல் இருப்பதைப் பார்த்திருக்கிறேன்
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஸ்ரீராம்
நீக்குமகிழ்ச்சி அவர்களுக்கு மட்டுமல்ல இப்படி உதவி செய்துவிட்டு வந்த பின் நமக்கும் ஒரு விதமான மகிழ்ச்சி ஏற்படுவது இயற்கை
பதிலளிநீக்குஉண்மைதான் சகோ..வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
நீக்குஉண்மை வயதானவர்களின் உணர்வுகளை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.
பதிலளிநீக்குஆமாம் சகோ. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
நீக்குபுதுவிதமான விளையாட்டு... மகிழ்ச்சி...
பதிலளிநீக்குமகிழ்ச்சி அண்ணா..இங்கு பிரபலமான விளையாட்டு - பள்ளிகளிலும் விளையாடுவோம். வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அண்ணா.
நீக்குஇப்படி ஒரு விளையாட்டு உள்ளதோ?
பதிலளிநீக்குஆமாம் ஐயா. இங்கு பிரபலமான விளையாட்டு - பள்ளிகளிலும் விளையாடுவோம். வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஐயா
நீக்குநல்லதொரு அனுபவ பகிர்வு! பிங்கோ விளையாட்டு பற்றி தெரிந்து கொண்டேன்! நன்றி!
பதிலளிநீக்குநன்றியும் மகிழ்ச்சியும் சகோ
நீக்குசிந்திக்கவைக்கும் சிறப்புப் பதிவு
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஐயா
நீக்குஅசை அழுத்தம் - accent தமிழ்ச்சொல் தெரிந்து கொண்டோம்
பதிலளிநீக்குவயதானவர்களோடு நிறைய நேரம் செலவழித்தல் என்பதுதான் அதுவும் விளையாட்டு, செய்திகள் பரிமாறிக் கொளல், போன்ற அவர்கள் தனிமைப்படுத்தப்படவில்லை என்பதை அவர்கள் உணரச் செய்து மகிழ்வது அவர்களுக்கு மட்டுமல்ல நமக்கு மகிழ்ச்சி...பொதுவாக நான் அறிந்த வரை, வெளிநாட்டில் போல இங்கு வயதானவர்கள் ஒருகுறிப்பிட்ட வயது வந்ததும் தனிமையில்தான் அவர்களும் தங்களால் முடியாது என்பது போலும் ஆகிவிடுகின்றனர். ஆனால் இப்போது கொஞ்சம் அதிலும் மாற்றங்கள் இங்கும் வருகிறது என்று தோன்றுகிறது. கிரேஸ். நல்ல அனுபவம் உங்களுக்கு மட்டுமல்ல குழந்தைகளுக்கும்...
கீதா
நன்றி அன்பு கீதா. ஆமாம், நம்மூரில் பிள்ளைகள் வளர்ந்துவிட்டாலே இனி என்ன என்பது போல் உணர்வார்கள்.. அப்படியல்லாமல் நேர்மறையான மாற்றங்கள் மகிழ்வைத் தருகிறது.
நீக்குஆமாம் கீதா, பலவிதமான வாழ்க்கை அனுபவங்கள். இவற்றை எழுத வேண்டாம் என்று தான் நினைத்திருந்தேன்..ஏதோ நான் போவதைச் சொல்வது போல் இருக்கும் என்று. ஆனால் அனுபவங்களைப் பகிர்வதும் தேவையாக இருப்பதை உணர்ந்தேன். மிக்க நன்றி கீதா.
பிங்கோ விளையாட்டு தெரியும் எங்கள் வீட்டில் சுட்டிகள் விளையாடுவதுண்டு...அங்கிருந்து வரும் சுட்டிகளிடம் அறிந்தது...
பதிலளிநீக்குகீதா
மகிழ்ச்சி கீதா.. இனிய விளையாட்டு..பெரும்பாலும் பிள்ளைகளுக்குப் பிடித்திருக்கிறது. சில பல மாறுதல்களும் உண்டு.
நீக்குவருகைக்கும் கருத்திற்கும் நன்றி கீதா/துளசி அண்ணா
வயதாகிவிட்டது, சும்மா இரு என்று சொல்லாமல் அவர்களையும் புரிந்துகொண்டு பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற அழகான பாடம் இளையவர்களுக்கும்.
பதிலளிநீக்குஉண்மை சகோதரியாரே
உண்மை
பிங்கோ கேள்விப்பட்டதில்லை. கிட்டத்தட்ட இதே மாதிரிதான் தம்போலா என்றொரு விளையாட்டு. நாங்கள் சின்னப்பிள்ளைகளாக இருக்கும்போது பெரியவர்கள் விளையாடுவார்கள். கிட்டத்தட்ட சூதாட்டம் போல் என்பதால் எங்களுக்கு அனுமதி கிடையாது.
பதிலளிநீக்குகுழந்தைகளுக்கு முதியவர்களோடு சேர்ந்து விளையாடும் அனுபவங்கள் வாழ்க்கையில் என்றைக்கும் மறக்க முடியாது. நீங்கள் சொல்வது போல முதியவர்களும் முதுமையை உற்சாகமாக கொண்டாடுகிறார்கள். முடிந்தவரை எல்லா ஆக்டிவிடீஸ்களிலும் பங்கெடுத்துக் கொள்கிறார்கள். நாம் அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டியவை அநேகம் கிரேஸ்.
Tamil Us உங்கள் செய்திகளை, பதிவுகளை உடனுக்குடன் எமது திரட்டியிலும் பகிர்ந்து கொள்ளுங்கள். பலரைச் சென்றடையும்.
பதிலளிநீக்குவணக்கம்,
www.tamilus.com எனும் முகவரியில் புதிய திரட்டி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பல தமிழ் திரட்டிகளுக்கு பதிவர்களின் சரியான ஒத்துழைப்பு கிடைக்காததால் அவற்றினை மூட வேண்டிய தேவை ஏற்பட்டது. அந்த நிலையினை இத் திரட்டிக்கு கொண்டுவரமாட்டீர்கள் என்ற புதிய நம்பிக்கையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது தமிழ்US
உங்களது பதிவு பகிரப்பட்டுள்ள அதேவேளை உங்களின் பயனுள்ள இடுகைகள், ஆக்கங்கள், பதிவுகள் என்பவை பலரைச் சென்றடைய இத் திரட்டியில் பகிர்ந்து உங்களின் ஒத்துழைப்பை நல்குவீர்கள் என நம்புகிறோம்.
நன்றி..
Tamil Us
அருமையான பதிவு.
பதிலளிநீக்குமிகவும் நன்று ...