Image: Thanks Internet |
பூனை மிதித்து யானை மரித்ததாம்
பார்த்தவுடன் பகிர்ந்தேன்
பரவியது பகிரப்பட்டது பரவியது
யானைக்கெல்லாம் கோபம்
பூனை மேல்
யானையை விரும்பும் யாவர்க்கும் சினம்
பூனை மேல்
விதை விருட்சமானது
சிட்டுக்குருவிக்கு மட்டும் சிந்தனை
பூனை மிதித்து யானை?!?
குருவியைக் கேட்பாரில்லை
ஆனால் குருவி படம்போட்ட...!
முகம் பார்த்துப் பேசுவாரில்லை
ஆனால் முகமென்று பேர்கொண்ட ...!
நான் என்ன புதிதாய்ச் சொல்ல,
"எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு"
கேட்கக் காதுள்ளவன் கேட்கட்டும்
"எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு" திருக்குறள் 423
எதை யார் சொன்னாலும், பகிர்ந்தாலும், எங்கு படித்தாலும் கேட்டாலும் நாமே மெய்ப்பொருள் காண்போம்! திருக்குறள் என்று சொல்லி எண்ணும் கொடுத்துவிட்டேன். தேடித் படித்து உணர்ந்து தெரிந்துகொள்வீர்!
எதை யார் சொன்னாலும், பகிர்ந்தாலும்.... மெய்ப்பொருள் காண்போம்.
பதிலளிநீக்குநல்ல சிந்தனை.
பாராட்டுகள். நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்கள் பதிவுக்கு வருகிறேன்.
நன்றி அண்ணா
நீக்குஇடைவெளிக்குப் பிறகு தானே நானே எழுதுகிறேன் அண்ணா
வாவ்...கிரேட்
பதிலளிநீக்குநன்றி சகோ
நீக்குமெய்பொருள் காண்பதற்கு அறிவு வேணுமே? அது இல்லாததால்தான் இவ்வளவு பிரச்சனைகளும்
பதிலளிநீக்குஇருக்கிறவங்க பயன்படுத்தனும்னு சொல்லிட்டே இருக்கவேண்டியதுதான் சகோ
நீக்குஅருமை
பதிலளிநீக்குநன்றி அண்ணா
நீக்குநல்லதொரு பகிர்வு சகோ.
பதிலளிநீக்குநன்றி சகோ
நீக்குஅட....!
பதிலளிநீக்குஅருமை...
நன்றி அண்ணா
நீக்குநல்லதொரு எண்ணம்
பதிலளிநீக்குமெல்ல நாமுணர வைத்தீர்கள்
நன்றி ஐயா
நீக்குஉண்மைதான்.
பதிலளிநீக்குநன்றி ஐயா
நீக்குகண்டது கேட்டது இதன்பின் நன்றின்பால் துய்ப்பதுவும் அறிவே!
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி
நீக்குநன்று. வாட்ஸாப் மருத்துவ, தத்துவ பகிர்வுகளை நான் இதே போல நம்புவதில்லை.
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம். ஆமாம், நல்லது சகோ. நானும் அனைத்தையும் நம்புவதில்லை.
நீக்குகிரேஸ் உங்கள் புளொக் இன்றுதான் நீண்ட காலத்தின் பின் தூசு தட்டப்பட்டிருப்பதைப் பார்க்கிறேன் மிக்க மகிழ்ச்சி.. என்ன இருக்கு என வந்தால் ஹையோ ஆனை பூனை:) அதிலும் வென்றது பூஸார்ர்ர்:)) என் மகிழ்ச்சிக்கு அழவே இல்லை:))
பதிலளிநீக்குஅதிராஆஆ :) நல்லா இருக்கீங்களா? ஆமா ரொம்ப நாளா தூசி தட்ட மட்டுமே வந்தது போல இருக்கின்றது..இனி அப்டி இருக்கக் கூடாது.
நீக்குஹாஹா சரியா பூனை பதிவிற்கு வந்துட்டீங்களே :)
நன்றி தோழி, எனக்கும் மிக்க மகிழ்ச்சி!
கிரேஸ் இதை வாசித்ததும் (அன்றே வாசித்துவிட்டேன்...கருத்து இட முடியலை) எனக்கு உடன் நினைவுக்கு வந்தது பூஸார் தான்!!! ஆஹா அவர் இதை அறிந்தால் ஒரு குதியாட்டம் போட்டுவிட்டுப் போவாரே ஆனால் அவர் இத்தளம் அறிவாரோ என்று நினைத்தால் இப்போ தெரிகிரது பூசார் கால்தடம் பதியாத தளமே இல்லை என்று ஹா ஹா ஹா ஹா....
நீக்குகீதா
வணக்கம் கீதா.. ஹாஹா பூஸார் தடம் பதியாத்தளங்கள் கொடுத்துவைக்காதவை. :) அவர் பதிவுகளும் சரி, கருத்துகளும் சரி நம்மை மகிழ்விக்கும். இனிய தோழி அவர், உங்களைப் போல
நீக்குஅழகிய கவி.... நகைச்சுவை கலந்த உண்மை ..:)..
பதிலளிநீக்கு//நான் என்ன புதிதாய்ச் சொல்ல,
"எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு"
கேட்கக் காதுள்ளவன் கேட்கட்டும் //
அது என்னவாயினும் பூனையாரே ஜெயிச்சதாகவே மீயும் நம்பிட்டுப் போறேன்ன்:)) ஹா ஹா ஹா.
ஹாஹா
நீக்குவருகைக்கும் அன்பின் கருத்துரைக்கும் மிக்க நன்றி அதிரா
மகத்தான தத்துவத்தைப் போகிற போக்கில் நம் செல்லங்களின் வழி கவித்துவமாய்ச் சொல்லிவிட்டீர்கள். கிரேஸ்...அருமை...
பதிலளிநீக்குகீதா
மிக்க நன்றி கீதா
நீக்குமிகவும் அருமை பாராட்டுகள்
பதிலளிநீக்குமிக்க நன்றி
நீக்குகவிதை அருமை தோழி.
பதிலளிநீக்குநன்றி தோழி
நீக்கு