வலைத்தள நட்பின் விருது

தஞ்சையம்பதி தளத்தில் எழுதிவரும் திரு.துரை செல்வராஜு ஐயா அவர்கள் 'versatile blogger' என்ற விருதை எனக்கு அளித்துள்ளார்கள். இது ஒரு தொடர் ஓட்டம் போல வலைத்தள நட்புகளை ஒருவரை ஒருவர் ஊக்கும்விக்கும் வகையில் அமைந்தது என்று எண்ணுகிறேன்.
எனக்கு விருதினை அளித்த துரை செல்வராஜு ஐயா அவர்களுக்கு நன்றி கூறிக்கொண்டு அந்த விருதினை என் தளத்தில் பார்வைக்கும் வைத்துவிட்டேன்.

இந்த விருதினை எனக்கு மேலும் இரு சகோதரிகள் அளித்துள்ளார்கள், அவர்கள் - கனவும் கமலாவும் தளத்தில் எழுதி வருபவர். மற்றொருவர் சகோதரி உமையாள் காயத்ரி. இவர்களுக்கும் என் மனங்கனிந்த  நன்றிகள்!

அடுத்து இந்த தொடர் ஓட்டத்தில் ஐந்து  நட்புகளுக்கு நான் இவ்விருதினை வழங்கவேண்டும். ஐயா அவர்களின் பதிவிற்கு இங்கு சொடுக்கவும். அந்த வகையில் இவ்விருதினை பின்வரும் நட்புகளுக்கு வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறேன்.

1. இரவின் புன்னகை வெற்றிவேல்
2. தோழி தமிழ்முகில்
3. தோழி நிகழ்காலம் எழில்
4. சகோதரி உமையாள் காயத்ரி
5. சகோதரர் கே..பி. ஜனா

என்னைப் பற்றி ஏழு விசயங்களும் சொல்லவேண்டுமாம். வெல்லத்தில் எந்தப் பக்கம் இனிப்பு?..  என்றொரு வினாவிற்கும் பதில் சொல்லவேண்டுமாம், அதை கவனிக்காமல் விட்டுவிட்டேன், அதனால் பதிவைப் புதுப்பிக்கிறேன்.

வெல்லமே இனிப்புதானே ஐயா? குறிப்பிட்டுச் சொல்வதென்றால் நாக்கில் படும் பக்கம் இனிப்பு என்று சொல்லலாம்.

நான் தமிழில் தளம் ஆரம்பித்து இரு வருடங்கள் ஆகிறது. தமிழும் இலக்கியமும் மிகவும் பிடிக்கும். படித்ததோ இயற்பியலும் கணினிப் பயன்பாடும். ஐடியில் ஐந்துவருடங்கள் மொபைல் டெக்னாலஜியில் வேலை செய்து, மிகவும் பிடித்த வேலை என்றாலும் குழந்தைகளுக்காக விட்டுவிட்டேன். மீண்டும் செல்வதற்கு விருப்பம் இருக்கிறது. பார்க்கலாம்.. இரு மகன்கள் இருக்கிறார்கள். வீட்டுவேலை, நூல்கள், குழந்தைகளுக்கானநேரம் போக கணினியில் அமர்ந்திருப்பேன். வலைத்தளத்தில் எழுதுவது ஒருபுறம் இருந்தாலும் அன்பான நட்புகள் பலர் கிடைத்துள்ளனர். அதன் ஒரு அங்கீகாரம் தான் இவ்விருது. அதனால் மகிழ்ச்சியடைகிறேன்.


நான் விருதைப் பகிர்ந்து கொள்ளும் ஐந்து நட்புகளும் இந்த விருதினை உங்கள் தளங்களில் போட்டுக்கொள்ளுங்கள். நீங்கள் விரும்பும் பதிவர்களுக்கும் கொடுங்கள். நன்றி.

22 கருத்துகள்:

  1. தங்கள் அன்பு உள்ளம் என்றும் வாழ்க..
    எனது பதிவில் ஒரு வினாவை முன் வைத்தேன்..
    வெல்லத்தில் எந்தப் பக்கம் இனிப்பு?.. - என்று..

    தங்களிடம் விருது பெற்ற அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்திற்கு நன்றி ஐயா. உங்கள் வினாவைக் கவனிக்காமல் விட்டுவிட்டேன் ஐயா..மன்னிக்கவும், நேரம் கிடைக்குமோ இல்லையோ என்ற அவசரத்தில் கிடைத்த சிறிது நேரத்தில் பதிவிட்டுச் சென்றேன்..இப்பொழுது மீண்டும் வந்துப் பதிவைப் புதுப்பித்துவிட்டேன்.

      நீக்கு
  2. வாழ்த்துக்கள், மேலும் பல விருதுகள் பெற ஞானி ஸ்ரீபூவு ஆசி உண்டாகட்டும்.

    பதிலளிநீக்கு
  3. விருதளித்து மகிழ்வித்த தங்களது மேலான அன்புக்கு என் மனமார்ந்த நன்றிகள் தோழி.

    பதிலளிநீக்கு
  4. வாழ்த்துக்கள் அன்புத் தோழியே !மென்மேலும் இது போன்ற பல
    விருதுகளை நீங்கள் பெற்றிட வேண்டும் .இங்கு விருதினைப்
    பெற்றுக்கொண்ட ஏனைய சொந்தங்களுக்கும் என் இனிய
    வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் .

    பதிலளிநீக்கு
  5. விருது பெற்றமைக்கும் பகிந்தமைக்கும்
    உளமார்ந்த நல் வாழ்த்துக்கள் தோழி!

    பதிலளிநீக்கு
  6. வாழ்த்துகள் டியர்! நல்லவேளை கரந்தை அண்ணா அந்த மாதிரி எந்த ரூல்சும் சொல்லலை:))

    பதிலளிநீக்கு
  7. தேன்மதுரத் தமிழோசை உலகெலாம் பரவிடச் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள உங்களுக்கு இந்த விருது பொருத்தமானதே! வாழ்த்துக்கள்! தங்களிடமிருந்து அந்த விருதினைப் பெற்ற மற்றைய வலைப் பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்!
    Tha.ma.2

    பதிலளிநீக்கு
  8. நன்றி அக்கா...

    தங்களுக்கும் இனிய வாழ்த்துக்கள்...!

    பதிலளிநீக்கு
  9. விருதளித்தமைக்கு மிக்க நன்றி கிரேஸ்.... செல்ல வேண்டிய தூரம் நெடிதெனினும் தோழியின் விருதை ஏற்றுக்கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  10. எனக்கு விருது கிடைத்த மகிழ்வில் உங்களுக்கு வாழ்த்து சொல்ல மறந்துட்டேன் வாழ்த்துக்கள் கிரேஸ்...

    பதிலளிநீக்கு
  11. விருது கிடைத்தமைக்கு வாழ்த்துகள்
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  12. கிரேஸ்: உங்க கையால விருது பெற தகுதி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்! :)

    பதிலளிநீக்கு
  13. விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள் தோழி.
    அதை பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
    அதில் ஒருவராய் என்னை இணைத்தமைக்கு நன்றி சகோதரி.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...