|
Image:Thanks Google |
சங்க இலக்கிய நூல்களுள் ஒன்று ஐங்குறுநூறு. இதில் வரும் களவன் பத்து என்ற பத்துப் பாடல்களில் 'களவன்' என்ற சொல் வரும். களவன் என்றால் நண்டு. நண்டின் ஏதேனும் ஒரு செய்கையைச் சொல்லி அதன் மூலம் ஒரு கருத்து சொல்லப்பட்டிருக்கும் இப்பாடல்களில். இந்தக் 'களவன்' என்ற சொல் நிறைய குழப்பம் கொடுத்தது. 'களவன்' சரியா? 'கள்வன்' சரியா? புள்ளி வருமா? வராதா? எது சரியான சொல்? எனக்கும் குழப்பம் இருந்தாலும், உ.வே.சா. அவர்களின் உரையில் 'கள்வன்' இருப்பதைப் பார்த்து அப்படியே பயன்படுத்தினேன். அதை ஆன்றோரிடம் கேட்டுத் தெளிவுபெறவேண்டும் என்று கூட எனக்குத் தோணாமல் போயிற்று. என் பதிவுகளை இந்த இணைப்புகளில் பார்க்கவும்,
ஆங்கிலத்தில்,
தமிழில். ஆனாலும் இதைப் பார்த்த திரு.முத்துநிலவன் அண்ணா எனக்கு அன்பாகச் சுட்டிக் காட்டியதுடன் உதவவும் முடிவு செய்து, திரு.விஜு அண்ணாவையும் அழைத்தார்கள். அவர் அழகாக இந்த குழப்பத்தைத் தீர்த்து வைத்தார்கள். அழகான எளிதான அந்த பதிவிற்குச் செல்ல
உள்ளங்கவர் களவன் என்ற இந்த இணைப்பைச் சொடுக்குங்கள். மனம்கனிந்த நன்றியுடன் இதைப் பதிவிட வேண்டும் என்று எண்ணியிருந்தேன், தாமதமாகிவிட்டது.
முத்துநிலவன் அண்ணாவிற்கும்
விஜூ அண்ணாவிற்கும் என் உளமார்ந்த நன்றிகள்.
ஓலைச் சுவடிகளில் இருந்து பாடல்களைப் படித்து உரை எழுதும்பொழுது ஏற்படும் குழப்பங்களையும் அதை திரு.உ.வே.சா. அவர்கள் எப்படி தெளிவுபடுத்திக்கொண்டார் என்பதையும் அழகாச் சொல்லியிருக்கும் விஜூ அண்ணாவின்
சொல் வேட்டை என்ற பதிவையும் பாருங்கள்.
நன்றி.
நீங்கள் கூறிய பதிவுகளை சில வாரங்களுக்கு முன் படித்து - வியந்திருக்கின்றேன்..
பதிலளிநீக்குமேதகு.உ.வே.சா. அவர்களின் உழைப்பு தலை வணங்கத்தக்கது..
வாழ்க தமிழ்.. வெல்க தமிழ்!...
பதிவுகளை நீங்கள் படித்ததற்கு மகிழ்ச்சி ஐயா.
நீக்கு//மேதகு.உ.வே.சா. அவர்களின் உழைப்பு தலை வணங்கத்தக்கது// உண்மைதான், இல்லையென்றால் நம் தமிழ் பொக்கிஷம் கிடைத்திருக்குமா...
நன்றி ஐயா
சென்ற மாதம் ஒருநாள் மாலை மணப்பாறையில் நடந்த ந்மது பதிவர் (அரும்புகள் மலரட்டும்) ஆசிரியர் அ. பாண்டியன் அவர்களது திருமண வரவேற்புக்கு சென்று இருந்தேன். அப்போது அங்கு வந்திருந்த வலைப்பதிவு நண்பர்களை கஸ்தூரிரங்கன் – மைதிலி ஆகிய வலைப்பதிவு தம்பதியினர் தங்களது இல்லத்திற்கு வருமாறு அன்புடன் அழைத்துச் சென்றனர். அங்கும் ஒரு இலக்கிய வட்டம் போல உங்கள் கள்வன் > களவன் சொல் பற்றி, கவிஞர் ஆசிரியர் நா.முத்துநிலவன், முனைவர் நா.அருள்முருகன் கஸ்தூரிரங்கன் (மலர்த்தரு) – மைதிலி (மகிழ்நிறை) தம்பதியினர் ஆகியோர் பேசியது நினைவுக்கு வருகிறது.
பதிலளிநீக்குநாம் தவறாக எழுதினாலும் , அதனைச் சுட்டிக் காட்ட வலைப்பதிவர்கள் மத்தியில் கவிஞர் நா.முத்துநிலவன், ஜோசப் விஜூ போன்ற தமிழ் ஆர்வலர்கள் இருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சியான செய்தியே ஆகும். இந்த இலக்கிய சொல்லாடல் அனுபவத்தினை பகிர்ந்து கொண்ட சகோதரிக்கு நன்றி! நம் தமிழ் இனி வாழும்!
த.ம.2
ஆஹா நண்பர்கள் இல்லத்தில் இது குறித்துப் பேசப்பட்டதா? நானும் வந்திருப்பேன், கால் சற்று நடக்க முடியாமல் இருந்ததால் இயலவில்லை. சகோதரர் பாண்டியனின் வரவேற்பில் கலந்துகொண்டு உங்கள் அனைவரையும் காணும் வாய்ப்பு கிட்டாமல் போய்விட்டது.
நீக்குஆமாம் தவறைச் சுட்டி, அதை சரிசெய்யவும் சொல்லிக் கொடுக்கிறார்கள். நிறையக் கற்றுக்கொள்கிறேன். உங்கள் கருத்துரைக்கு உளமார்ந்த நன்றி ஐயா. ஆமாம், தமிழ் என்றும் வாழும்.
நினைவு கூர்ந்த நண்பர்களுக்கு நன்றி ..
நீக்குஅய்யா! மிக்க நன்றி! தங்களை போன்றோரின் வருகையால் மகிழ்ச்சியடைந்தோம்!
நீக்குஆமா கிரேஸ் டியர் ! அது மறக்க முடியாத அனுபவம்:)
உங்கள் மற்றும் விஜூ அண்ணாவின் உழைப்பு அபாரமானது!! வாழ்த்துக்கள் டா!
சொல்வேட்டை பார்த்தேன் அருமை...
பதிலளிநீக்குதங்களுக்கும் வாழ்த்து தோழி.
வேதா. இலங்காதிலகம்.
இனிய தோழி!..
பதிலளிநீக்குசொற்போர் புரிந்திங்கு சூட்டிய வாகையாற்
கற்றோரைக் கண்டேன் களித்து!
உங்களுதவியால் நானும் பெறுகின்ற பலன் ஏராளம்!
பெருந்தன்மை ஏதுமில்லாப் பேராளர்கள் அவர்கள்!
உங்களுக்கும் முத்துநிலவன் ஐயா இன்னும் யோசெப் விஜு ஐயாவுக்கும்
அன்பு நன்றிகளுடன் உளமார்ந்த இனிய நல் வாழ்த்துக்கள்!
வணக்கம் தோழி, நலமா? உங்கள் பா கண்டு களிக்கிறேன் நான், அருமையாக எழுதுகிறீர்கள். பெருந்தன்மை நிறைந்தவர்கள் அல்லவா தோழி? இல்லை எனக்குத் தான் நீங்கள சொல்வது விளங்கவில்லையா? :)
நீக்குஉங்கள் கருத்துரைக்கு நன்றி தோழி.
ஆக, பெருந்தன்மைனா அகந்தைனு ஒரு அர்த்தமா?!!! சரி, அதை தெளிவுபடுத்திய உங்க இருவருக்கும் நன்றி! :)
நீக்குஆமாம் வருண், நானும் நேற்றுதான் அறிந்தேன். உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.
நீக்குஅட! இந்த ஆராய்ச்சியும் நல்லாத்தான் இருக்கு:))
நீக்குநன்றி தோழி நல விசாரிப்பிற்கு! நலமே உளேன் நானும்..
பதிலளிநீக்குநீங்களும் குட்டிகளும் நலமா?
ஐயோ!.. இங்கும் குழப்பி - குழம்பிவிட்டேனா?
பெருந்தன்மை என்றிங்கு அகந்தை எனும் பொருள்கொண்டு எழுதினேன். ஆனால் அதுவே மேன்மை என்றும் பொருள் கொள்ளுமென இப்போது அகராதியில் கண்டேன்.
தவறிற்கு மன்னிக்க வேண்டும் தகையோரே!
வேறுபாடாகக் கருத்துத் தரும் இப்படியான சொற்களை
அவதானமாக உபயோகிக்க வேண்டுமென ஒரு பாடம்
இன்று இங்கு கற்றேன்…:)
சுட்டிக்காட்டியமைக்கு நன்றி தோழி!
மீண்டும் தவறிற்கு வருந்துகிறேன். பொறுத்தருள்க!
நாங்களும் நலமே தோழி, நன்றி.
நீக்குஆஹா!! பெருந்தன்மை என்பது அகந்தை என்றும் பொருள்படும் என்று இப்பொழுதுதான் அறிந்தேன் தோழி..இதில் உங்கள் மேல் தவறொன்றும் இல்லை..//எனக்குத் தான் நீங்கள சொல்வது விளங்கவில்லையா? // என்று நான் கேட்டதற்கு இணங்க எனக்குத்தான் இன்னொரு பொருள் தெரியாமல் இருந்திருக்கிறது. உங்கள் தமிழ் நாமறிந்ததே...இப்படி ஏதேனும் இருக்கும் என்றே கருதியே கேள்வி எழுப்பினேன்..தெளிவும் பெற்றேன். கற்பித்ததற்கு நன்றி தோழி. :)
நீங்கள் அறிந்த பொருளில் நீங்கள் இட்டக் கருத்தில் தவறொன்றுமில்லை தோழி...சரியாகத்தான் சொல்லியிருக்கிறீர்கள்..முத்துநிலவன் அண்ணாவும் விஜூ அண்ணாவும் அகந்தை இல்லாதவர்கள் தானே..
நீக்குஇன்னொரு பொருள் தெரியாமல் நான் எழுப்பிய வினாவினால் கலங்க வேண்டாம்...வருந்துவதற்கு ஒன்றுமில்லை..உங்களைக் குழப்பி வருந்த வைத்தேனோ என்று எனக்குத் தோன்றுகிறது..அதற்கு மன்னித்துவிடுங்கள்..எப்படியோ நாமிருவரும் இன்னொரு பொருள் அறிந்து கொண்டோம் :)
ஐயோ!.. இப்படி நீங்களும் வருந்த வேண்டாம் தோழி!.
நீக்குநானும் எங்கள் ஈழநாட்டுப் பேச்சு மற்றும் எழுத்து வழக்கில் கூறுவதை –
” பெருந்தன்மை அதிகரித்ததால் அவனுக்குத் தலைகால் தெரியவில்லை” எனப் பெரியோர்கள் கூற அறிந்துள்ளேன். அதனால் இதனை இவ்விடத்தில் இப்படிக் கூறலாமென எண்ணிக் கூறிவிட்டேன்.
இப்போது அதன் பொருளை நா.கதிரவேற்பிள்ளை அவர்களின் அகராதியில்
பெருந்தன்மை : அகந்தை, மானம், மேன்மை என்றிருக்கக் காண்கிறேன்.
ஆக, சில சொற்களுக்கு இப்படி இரு வேறு கருத்து உளதென்பதையும் அதனைச் சரியாக, சரியான இடத்தில் பயன்படுத்துதலையும் சேர்த்தே கற்றோம்!. கற்கின்றோம்!, கற்போம்!
மகிழ்வே அன்றி எனக்கு வருத்தம் ஏதுமில்லைத் தோழி!
மிக்க நன்றி!
தொடர்வோம்!...:)
:)
நீக்கு//ஆக, சில சொற்களுக்கு இப்படி இரு வேறு கருத்து உளதென்பதையும் அதனைச் சரியாக, சரியான இடத்தில் பயன்படுத்துதலையும் சேர்த்தே கற்றோம்!. கற்கின்றோம்!, கற்போம்!// உண்மைதான் அன்புத்தோழி
தாமத வருகைக்கு மன்னிக்க வேண்டும் தங்கையரே. சொல்லின் பொருள் மாறுவது எப்படி என்று தனி ஆய்வே நடத்தலாம். சில சொற்களின் பொருள் நேர்எதிராக மாறியிருப்பதுதான் வியப்பு. உ-ம்-கேவலம், நாற்றம். இவற்றின் பழைய பொருள் முறையே மிகச்சிறந்த, நல்லமணம் என்பதாகும்! இவை ஏன் இப்படி மாறின என்று ஆய்வே செய்யலாம். அதைவிட்டு பழந்தமிழில் பேசுகிறேன் என்று, “இன்னிக்கு நீ வச்ச குழம்பு ஆகா என்னமா நாறுது(?)” என்று சொன்னால் என்ன ஆகும்?! கேவலமாப்போகுமில்ல? இந்த வகையில் “எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே“ எனும் பேரறிஞன் தொல்காப்பியனின் உலகியல் அறிவை நினைந்து வியக்க வேண்டியுள்ளது. எந்தப் பொருளில் தற்போது வழங்குகிறது என்றறிந்து பயன்படுத்துவது முக்கியம். சொல் ஆய்வுகள் நல்ல பொருளில் தொடர வாழ்த்துகள்மா. அடுத்த சங்க இலக்கியப் பதிவை எதிர்பார்க்கிறேன்.
நீக்குஆமாம் அண்ணா, சொற்களின் ஆய்வு கற்றலின் வழியில் நன்றாக உள்ளது. குழம்பு நாறுதுனு சொன்னா அவ்ளோதான்.. :)
நீக்குஎந்த பாடல் என்று மறந்துவிட்டேன், எங்கோ "பூவினுள் நாற்றம் நீ" என்று படித்திருக்கிறேன். சங்க இலக்கியப் பதிவு இடுகிறேன் அண்ணா..உங்களை என் ஆங்கில தளத்தில் http://sangamliteratureinenglish.blogspot.com/2014/07/cmon-get-her-married-to-her-love.html பதிவைப் பார்க்க அன்புடன் அழைக்கிறேன்.
கருத்துரைக்கு நன்றி அண்ணா.
கேவலம் ணா அருமையா? அட!!!
நீக்குவலைப்பூவில் ஆரோக்கியமான சூழ்நிலை.....முத்துநிலவன் சாரும்,விஜூ சாரும் நெறிப்படுத்தும் குணம் பாராட்டுதற்குரியது.வாழ்த்துகள்மா
பதிலளிநீக்குஉங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி கீதா.
நீக்கு//வலைப்பூவில் ஆரோக்கியமான சூழ்நிலை.....முத்துநிலவன் சாரும்,விஜூ சாரும் நெறிப்படுத்தும் குணம் பாராட்டுதற்குரியது.// கண்டிப்பாக!
கருத்துரைக்கும் வாழ்த்திற்கும் மனமார்ந்த நன்றி கீதா
இதே போல, “வண்டு“ எனும் சொல்லை “ஞெண்டு“ என்று கையாண்டு அதனை எடுத்தெழுதிய பெரியவர்கள் “நண்டு“ என்று பொருள்சொல்லி, தொல்காப்பிய உரையைக் குழப்பியதை, பாரதிதாசன் பல்கலைக்கழகத் தமிழ்த் துறைத்தலைவர் பேரா.முனைவர் பா.மதிவாணன் அவர்கள் எழுதிய “தொல்காப்பியம் பால.பாடம்“ நூலில் பார்த்து மகிழ்ந்தேன். அதற்கு அவர் தந்திருந்த தலைப்பு -“ஞெண்டொன்று கண்டேன் நண்டங்கு இல்லை“! அறிதோறும் அறியாமை கண்டற்றால்...!
நீக்குஆஹா! வண்டு நண்டானது, எவ்வளவு பெரிய குழப்பம்!! அனைத்து வேலைகளையும் விட்டுவிட்டுத் தமிழை மேலும் மேலும் படிக்கவேண்டும் போல் ஆர்வம் மிகுகிறது எனக்கு. //ஞெண்டொன்று கண்டேன் நண்டங்கு இல்லை// அருமையான தலைப்பு. அறியத்தந்ததற்கு நன்றி அண்ணா. இப்படியே நிறையக் கற்றுக்கொள்வதில் மகிழ்கிறேன்.
நீக்குவணக்கம் அருமை தோழி ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது இளமைதியாருடனான தங்கள் உரையாடல் கண்டு. மாறி மாறி இருவரும் பேசுவது கண்டு பூரித்தேன். கவலையே வேண்டாம் உங்கள் இருவரது உள்ளங்களையும் நாம் அனைவரும் அறிவோம். தவறாக யாருமே நினைக்க மாட்டோம் ok வா ம்...ம்...ம்...ம் நிலவன் அண்ணாவும், சகோதரர் விஜு அவர்களுக்கும் உள்ள தமிழ் பற்றை எண்ணி நான் பெருமிதம் அடைவதுண்டு அவர்கள் ஆற்றும் பணியும் அவ்வாறே. சொல்லி மாளாது அவர்கள் செயல். அதே போன்று தங்களையும் இளமைதியாரையும் நினைத்தாலும் ஆச்சரியமாகவும் ஆனந்தமாகவுமே இருக்கும். தங்கள் படைப்பாற்றல் மேலும் சிறக்க மனதார வாழ்த்துகிறேன் ....!
பதிலளிநீக்குவணக்கம் தோழி. ஓகே, மகிழ்ச்சி தோழி, மிக்க நன்றி. :)
நீக்குபெரியோரிடம் இருந்து கற்றுக்கொள்வது இனிமையாய் இருக்கிறது. இதனால் வலைத்தளத்தை மேலும் நேசிக்கத் துவங்கிவிட்டேன் தோழி. உங்கள் இனிய கருத்திற்கும் வாழ்த்திற்கும் உளங்கனிந்த நன்றி தோழி.
அப்பதிவினை ஏற்கனவே படித்துள்ளேன் சகோதரியாரே
பதிலளிநீக்கு//களவன் என்பன ஆறும் வயலும் இடமாய்க் கொண்டு வாழ்வன. //
சகோதரி கீதா அவர்கள் கூறுவதுபோல், ஆரோக்கிய சூழல் வலைப் பூ வில் மணம் வீசுவது கண்டு மகிழ்கின்றேன் சகோதரியாரே
நன்றி
தம +1
ஏற்கனவே படித்தது அறிந்து மகிழ்ச்சி சகோதரரே. பலர் படித்திருப்பீர்கள், இருந்தாலும் என் நன்றியைத் தெரிவிக்கும்முகமாக இப்பதிவிட்டேன். ஆறும் வயலும் கொண்டு வாழ்வது களவன் - அருமை சகோதரரே. ஆமாம், நல்ல நட்புகளும் கிடைக்கிறது, கற்றலும் நடக்கின்றது.
நீக்குஉங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோதரரே.
சகோதரி,
பதிலளிநீக்குவணக்கம்.
வழக்கம் போலவே தாமதமாய்த்தான் வருகிறேன்.
உங்களின் ஆர்வத்திற்கும் முயற்சிக்கும் முன்னால் நாங்கள் ஒன்றுமில்லை.
படித்தல் எங்களின் தொழில் சார்ந்தது.
உங்களைப் போன்றவர்கள் பிற துறையினர் முன்னெடுக்கும் முயற்சிதான் உண்மையானதும் பாராட்டப் படவேண்டியதும்!
நாங்கள் தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.
சிறந்த மொழிபெயர்ப்பினை, ஆக்கங்களை இணையத்துத் தரும் உங்களைப் போன்றோரிடத்திருந்து மொழி தன்னைப் புதுப்பித்துக் கொள்ளும்.
என்னைப் பொருட்படுத்தியமைக்கும், உங்கள் பதிவில் அறிமுகப் படுத்தியதற்கும் நன்றிகள்!
தங்களைத் தொடர்கிறேன்.
மீண்டும் நன்றி!
வணக்கம் அண்ணா. உங்கள் இனிய கருத்துரைக்கு உளமார்ந்த நன்றி. நீங்களும் ஆங்கில ஆசிரியராய் இருந்தாலும் தமிழில் இவ்வளவு படித்துக் கற்றும் கொடுக்கின்றீர்களே. உங்கள் பதிவுகளில் இருந்து நிறையக் கற்றுக்கொள்கிறேன். இவ்வளவு இருக்கிறதே கற்க என்று கூடத் தோன்றுகிறது. //பொருட்படுத்தியமை// ஆஹா இப்படி எல்லாம் சொல்லாதீர்கள்..உங்கள் பதிவுகளைப் படிப்பதும் அறிமுகப்படுத்துவதும் என் மகிழ்ச்சி. :)
நீக்குமிக்க நன்றி சகோதரரே.
சகோதரி! நாங்களும் அந்தப் பதிவுகளை எல்லாம் படித்தோம். விஜு ஐயா அவர்களின் பதில் பதிவுகள் உட்பட......
பதிலளிநீக்குசொல்வேட்டை உட்பட.....
மகிழ்ச்சி ஐயா, மிக்க நன்றி.
நீக்குஅன்பார்ந்த கிரேஸ், உங்களுடைய இலக்கியப்பதிவுகளால் சிறப்பான தகவல்கள் பல அறிந்துகொள்ளும் வாய்ப்பு அமைந்தமை குறித்து மிகவும் மகிழ்கிறேன். வலைப்பூவில் இப்படியொரு ஆக்கபூர்வ கருத்தாடல்கள் நடைபெறுவதைக் கண்டு மனம் மகிழ்வில் நிறைகிறது. நன்றி கிரேஸ்.
பதிலளிநீக்குஅன்புத்தோழி கீதமஞ்சரி, உங்கள் இனிய கருத்திற்கு உளமார்ந்த நன்றி..ஆமாம் வலைப்பூவில் நிறையக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு அமைகிறது. எனக்கும் மகிழ்ச்சியே.
நீக்குஅருமை.
பதிலளிநீக்குநன்றி.
உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ஐயா
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குசகோதரி
நானும் பார்த்து வியந்து போனேன் உமைக்கனவுகள் அவர்களின் பதிவைப்பார்த்து சிறப்பான விளக்கம் கொடுத்துள்ளார் வாழ்கமனிதர்கள் வாழட்டும் எம்மொழி பகிர்வுக்கு நன்றி
என்பக்கம் கவிதையாக
ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: இதயத்தை திருடியது நீதானே.....:
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம் சகோதரரே.
நீக்குஆமாம் விஜூ அண்ணாவின் விளக்கம் மிக அருமையாய் இருக்கிறது. உங்கள் கருத்திற்கு நன்றி.
இதயத்தைத் திருடியது யார் என்று வந்து பார்க்கிறேன், :) நன்றி சகோதரரே.
தமிழ் தழைக்கும் பணி செய்யும் அவர்களுக்கும் சுட்டிக்காட்டிய உங்களுக்கும் என் வாழ்த்துகள் சகோதரி ! வாழ்க தமிழ் ! அவசியம் படிக்க முயற்சிக்கிறேன் !
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஜெயசீலன்.
நீக்குதெளிந்தமைக்கு வாழ்த்துக்கள் ...
பதிலளிநீக்குதெளியவைதவர்களுக்கும் வாழ்த்துக்கள்
நன்றி மது
நீக்குசிறந்த பகிர்வு
பதிலளிநீக்குதொடருங்கள்
nandri aiya
நீக்கு