ஆணியே ...

piece dosai
fish dosai


மகன் தோசை வார்க்கிறார்

என் இளைய மகன்  அவனுடைய விளையாட்டு ஓட்டலில் சாப்பிட அழைத்தான்..சென்றேன், அங்கு நடந்த உரையாடல்:

அவன்: என்ன வேண்டும்?
நான்: தோசை
அவன்: சட்னியா சாம்பாரா?
நான்: இரண்டும் :)

அவன்: இங்கே வேணுமா அங்கே வேணுமா?
நான்: நான் எங்க இருக்கேனோ அங்க (here என்று சொல்லி குறித்துக்கொண்டான்)
அவன்: உடனே வேணுமா லேட்டாவா?
நான்: உடனே
அவன்: தோசை வரும்வரை படிக்க புக் வேணுமா?
நான்: வேணாம் (இப்போதான் மாவு ஆட்டப்போறீங்களா!!)
அவன்: படம் பார்க்கிறீங்களா?
நான்: வேணாம் (அடப்பாவமே, இப்போதான் ஊற வைக்கப் போறீங்களா?!!)
அவன்: தண்ணி வேணுமா? ஜூஸ் வேணுமா?
நான்: தண்ணீ
அவன்: நெய் போடவா வேணாமா?
நான்: வேணாம்
அவன்: தட்டுல வேணுமா? டம்பளர்ல வேணுமா?
நான்: என்ன!! (மாவ ஊத்திக் கொடுக்கப் போறீங்களா?)!! எனக்குத் தோசையே வேணாம்..வேற கடைக்குப் போறேன்...

மேலே உள்ள படங்கள் என் மூத்த மகன் ஏழு வயதாக இருக்கும்பொழுது, (இரண்டு வருடங்களுக்கு முன்) முதன் முதலாக தோசை ஊற்றியபொழுது எடுத்தவை. 

39 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. ஆமாம் சகோதரி, fish தோசையும் piece தோசையும் :)
      வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..

      நீக்கு
  2. என்ன ஒரு துள்ளலான நகைச்சுவை!..
    வாழ்க நலம்!..

    பதிலளிநீக்கு
  3. தோழி குட்டிப் பயலுக்கு அந்தச் சுட்டிப் பயலுக்கு என்னுடைய
    பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் சொல்லி விடுங்கள் !
    இப்படிச் சொன்னால்தான் இந்த அத்தைக்கும் எதிர்காலத்தில்
    இந்தியா வந்தால் தோசை கிட்டும் :))))) மீயவ்வ்வ்வ்வ்வ்வ்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாராட்டிற்கும் வாழ்த்திற்கும் நன்றி தோழி, கண்டிப்பாகச் சொல்லிவிடுகிறேன்.
      வாருங்கள், வாருங்கள்..தோசை கண்டிப்பாக உண்டு..அவன் தருவதும் நான் தருவதும் :)

      நீக்கு
  4. தோசை ஆனியடிச்ச மாதிரியிருக்கு.

    பதிலளிநீக்கு
  5. வணக்கம்
    சகோதரி

    பிள்ளைகள் என்றால் எப்போதும் மகிழ்ச்சிதான்... மறக்க முடியாத நிளைவுச்சுவடுகள்..இவை.
    பகிர்வுக்கு நன்றி த.ம 2வாது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரரே!
      ஆமாம், இனிய நினைவுகள் இவை.
      கருத்திற்கும் வாக்கிற்கும் நன்றி சகோ.

      நீக்கு
  6. எப்படியோ கடைசியில பிச்சுப் போட்ட தோசையாச்சம் கொடுத்தேனே மகிழ்ச்சி...குழந்தைகளின் குறும்புகள் என்று நினைத்துப் பார்த்தாலும் இனிமைதான்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், எப்படியும் பிச்சுதானே சாப்பிடனும் ;-)
      அவர்களின் குறும்புகளை அவ்வப்பொழுது அசைபோடுவது இனிமை...
      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி எழில்

      நீக்கு
  7. தட்டுல வேணுமா? டம்பளர்ல வேணுமா........என்ன அருமையான கேள்வி......

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா ஆமாம்..
      உங்கள் முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அனுராதா பிரேம்.

      நீக்கு
  8. சின்ன பிள்ளைங்களோட நாமும் இப்படி குழந்தையாய் மாறி விளையாடுவது அருமையான அனுபவம் !!

    என் பொண்ணு சப்பாத்தி சுட்ட்டு தந்தா :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் ஏஞ்செலின். ஓ உங்களுக்கு சப்பாத்தியா? :)
      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி தோழி.

      நீக்கு
  9. ஹா,,,,ஹா....ஹா...செம்மயா இருக்கு ஆர்டர் எடுத்தவிதம்:)) பயபுள்ள கைவசம் ஒரு தொழில் இருக்கு:) பிற்காலத்தில் கிரேஸ் செவென் ஸ்டார் என்று பெரிய லெவல் ல வரபோறாரோ!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், நினைத்து நினைத்து சிரிக்கிறேன் டியர் :)
      கைவசம் பல தொழில் இருக்கு, பிழைச்சுக்கலாம். செவென் ஸ்டார் வச்சுடலாம், ஆனா நான் மட்டும் அடுமனை பக்கம் போய்டக்கூடாது :)
      கருத்திற்கு நன்றி தோழி!

      நீக்கு
  10. தோசையினி(து) அப்பம்இனி(து) என்பதம் மக்களின்
    ஆசை யறியா தவர் (வள்ளுவர் மன்னிப்பார்)
    இடையிடையே வந்த உன் “மைண்ட் வாய்ஸ்“ அருமைபா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அருமை அண்ணா.. :)
      உங்கள் கருத்துக் குறளுக்கு நன்றி..வேலை நெருக்கடியிலும் அதிகாலை மூன்று மணிக்குக் கருத்திட்டுள்ளீர்களே..தூங்கி அப்புறம் பார்த்திருக்கலாமே.

      'இவள் அழகை இழப்பது ஏன்?' பதிவு உங்களுக்காக காத்திருக்கிறதண்ணா..
      http://thaenmaduratamil.blogspot.com/2014/08/blog-post_29.html

      நீக்கு

  11. வணக்கம்!

    தோசைப் படம்கண்டேன் தோழி! உருவெடுக்கும்
    ஆசை அகலும் அகத்து!

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஐயா!
      உங்கள் வருகைக்கும் கருத்துப் பாவிற்கும் நன்றி

      நீக்கு
  12. ஆஹா தோசை அசத்தல் தோழி. அருமையான நொடி பொழுதுகள். தோழி படங்களும் சம்பாசனையும் மிகுந்த மகிழ்ச்சியையும் சிரிப்பையும் அள்ளியே தந்தன.அருமை தோழி வாழ்த்துக்கள் ....!

    பதிலளிநீக்கு
  13. ஃபிஷ் தோசை - அழகாய் இருக்கிறதே! :)

    ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  14. ஹாஹாஹாஹா......மிகவும் மிகவும் ரசித்தோம்! அவரது கேள்விகள் அருமை!!!!!!! தோசைத் துண்டுகளில் அவரது பாசத்தைக் கண்டோம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் வருகைக்கும் ரசித்திட்டக் கருத்திற்கும் நன்றி சகோதரரே

      நீக்கு
  15. சிறந்த பாவரிகள்

    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  16. சுட்டிப்பையன் தான்.... குறும்புக்காரன்...

    பதிலளிநீக்கு
  17. ஹா ஹா ... ஒரு தோசைக்கு இவ்வளவு கேள்வியா :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதுக்கே இப்டினா அவங்கப்பாகிட்ட என்ன கேட்டான்னு அவர்கிட்ட கேளுங்க ஸ்ரீனி :)

      நீக்கு
  18. அன்பு நண்பரே உங்களின் தளத்திற்கு இன்று எனது முதல் வருகை இனிமேல் அடிக்கடி வருவேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாருங்கள் நண்பரே! உங்கள் முதல் வருகைக்கும் தொடரப்போவதற்கும் மிக்க நன்றி...

      நீக்கு
  19. இப்போவே தோசை சுடுவது கற்றுக்கொண்டால் உங்க மகன் பின்னாளில் நல்லதொரு "கெமிஸ்ட்" டாக வர வாப்பிருக்கு! :)

    mixing in a correct ratio, fermenting, and temperature control, cautiously avoiding getting accidental burn etc are all nothing but "chemist's skills"! :-)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ அப்படியும் ஒரு வழி இருக்கோ? வித்தியாசமான சிந்தனை வருண் :)
      உங்கள் கருத்தைப் பார்த்தவுடன் அவன் experiment என்று சொல்லி அதையும் இதையும் கலக்குவது நினைவுவந்தது..
      கருத்திற்கு நன்றி வருண்

      நீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

கிழக்கு பெட்டி ஆமை - கவிதை

   கிழக்கு பெட்டி ஆமை  கடப்பது என்ன அணில் குட்டியா? வேறுபட்டுத் தெரிகிறதே! வண்டியை நிறுத்திவிட்டேன் ஆகா! அணிலில்லை ஆமை! கடக்கட்டும் என நான் ...