தண்ணீரும் எங்கே எங்கே?

தாகத்தில் பறந்த  காக்கை கண்டது
பானையின் அடியில் தண்ணீர்
சிந்தித்த காக்கையின் கண்ணில்
சிதறிய கூழாங்கற்கள்
ஒவ்வொன்றாய்ப்  பானையில் போட
ஒயர்ந்தே வந்ததே நீர் மட்டம்
....
...
கதை சொல்லிக் கொண்டிருந்த என்னை
சிந்தை கவர்ந்ததே கரைந்த ஒரு காக்கை
கேட்டதே சில கேள்வி

கூழாங்கல் எங்கே
பானையும் எங்கே
தண்ணீரும்  எங்கே எங்கே?

50 கருத்துகள்:

  1. வணக்கம்
    சகோதரி

    காக்கை கேட்ட கேள்வி...3 நன்றாகத்தான் உள்ளது....வாழ்த்துக்கள் சகோதரி.
    நீண்ட நாட்கள் இணையம் வந்து என் வருகை தொடரும்... இனி...

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ரூபன்.
      உங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி, நலம் தானே?
      உங்கள் கருத்துரைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி சகோதரரே!

      நீக்கு
  2. ஹ்ம்ம் .... உண்மை. சிந்திக்க வச்சுருச்சு காக்கா

    பதிலளிநீக்கு
  3. நல்லவேளை அப்படியானால்
    என்னவெனக் கேட்காமல்
    எங்கே எனவாவது கேட்டதே
    மனம் கவர்ந்த கவிதை
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியும் கேட்கும் காலம் வந்துவிடுமோ? :(
      உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ஐயா.

      நீக்கு
  4. பாவம் தான் காகம் எல்லாம்.
    அருமை கிராஸ்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் மைதிலி, காகம் மட்டுமல்ல..அனைத்து பறவைகளும் விலங்குகளும் பாவம் தான்..
      உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி தோழி.

      நீக்கு
  5. கேட்டாலும் கேட்டது நல்ல கேள்விகளாகத்தான் கேட்டது காக்கை!

    பதிலளிநீக்கு
  6. நல்ல கேள்விதான்! பதில்தான் இல்லை!

    பதிலளிநீக்கு
  7. ஒரே போக்கில் செல்லாமல் நல்ல மாற்று சிந்தனைக்கு சென்ற கவிதை! பாராட்டுக்கள்!
    த.ம-2

    பதிலளிநீக்கு
  8. இன்னும் சில வருடங்களில் நடக்க போகும் உண்மைதான் இது . தண்ணிர் தேவைக்காக உலகபோரே வரலாம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த பயம்தான் எல்லோருக்கும்...
      உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சகோ

      நீக்கு
  9. மனிதனுக்கு சிந்நாட்களில் எங்கே எங்கே தான்

    பதிலளிநீக்கு

  10. வணக்கம்!

    விருந்தை நிகா்த்த அருந்தமிழ் ஏந்திக்
    கருத்தைக் கவரும் கவி!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஐயா..
      உங்கள் கருத்துரைக்கும் பாராட்டிற்கும் உளமார்ந்த நன்றி .

      நீக்கு
  11. Pathivu ..Nanru......

    http://kovaikkavi.wordpress.com/2014/04/20/%e0%ae%87%e0%ae%9f%e0%af%88%e0%ae%b5%e0%af%87%e0%ae%b3%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%b0%e0%af%8d-8/
    Vetha.Elanagthilakam.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கோவைக்கவி அவர்களே..உங்கள் பதிவைப் பார்த்துவந்தேன், பகிர்விற்கு நன்றி

      நீக்கு
  12. காக்கையின் கேள்வியை மனிதர்கள் நாம் கேட்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.

    பதிலளிநீக்கு
  13. பானையும் தண்ணீரும், கூழாங்கற்களும் எங்கே எங்கே? நல்ல கேள்வி.

    பதிலளிநீக்கு
  14. கருத்தாழம் மிக்க கவிதை. சிந்தித்து செயல்பட்டால், நம்மை நாமே காத்துக் கொள்ளலாம். இல்லையேல், நம் கதி என்னவாகுமென்பது நமக்கே தெரியாது.

    பகிர்வுக்கு நன்றி தோழி.

    பதிலளிநீக்கு
  15. காக்கை கேட்கவேண்டிய கேள்வி மட்டுமல்ல ஒவ்வொருவரும் தனக்குத் தானே கேட்டுக்கொள்ளவேண்டிய அதே சமயம் பதிலளிக்கவேண்டிய கேள்வி.

    பதிலளிநீக்கு
  16. கேட்டது காக்கையாயினும் அது கரைவது நமக்காக... சிந்திப்பீர்! சேமிப்பீர் - நீர்வளத்தை!!

    பதிலளிநீக்கு
  17. தண்ணீரைத் தேடியலையும் வேதனை பறவைகளுக்கு மட்டுமா? நம்மால் இயன்ற அளவில், பறவைகளுக்காக நம் தோட்டங்களில் மரங்களும் தண்ணீர்க்கிண்ணங்களும் வைத்து அவை வாழ்வதற்கான சூழலை உருவாக்கித்தரவேண்டும். சிந்தனையைத் தூண்டும் நல்லதொரு கவிதை கிரேஸ்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனிதருக்கும் வந்துவிட்டதே தோழி..
      நீங்கள் சொல்வது சரிதான். உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

      நீக்கு
  18. அஃறிணைகள் கேள்வி கேட்டால் உயர்திணைகள் ஓடவேண்டியதுதான்.. அதனால்தான் வைரமுத்து ஒரு கவிதையே சொன்னார் -
    “ஐந்து பெரிது, ஆறு சிறிது” பழைய கதைக்குப் புதிய நடைமுறை விளக்கம் அருமையமமா! இதைத்தான் நாங்கள் மறுவாசிப்பு என்போம்.
    மறுவாசிப்புகள் தொடரட்டும். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஐயா. வைரமுத்துவின் அந்த கவிதையைப் படித்திருக்கிறேன். உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி ஐயா.

      நீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

கிழக்கு பெட்டி ஆமை - கவிதை

   கிழக்கு பெட்டி ஆமை  கடப்பது என்ன அணில் குட்டியா? வேறுபட்டுத் தெரிகிறதே! வண்டியை நிறுத்திவிட்டேன் ஆகா! அணிலில்லை ஆமை! கடக்கட்டும் என நான் ...