ஐங்குறுநூறு 26, பாடியவர் ஓரம்போகியார்
மருதம் திணை - தோழி தலைவியிடம் சொன்னது
“கரந்தை அம் செறுவில் துணை துறந்து கள்வன்
வள்ளை மென் கால் அறுக்கும் ஊரன்
எம்மும் பிறரும் அறியான்
இன்னன் ஆவது எவன் கொல் அன்னாய்”
எளிய உரை: துளசிச் செடி நிறைந்த அழகிய வயலில் நண்டு தன் துணையை விட்டுவிட்டு வள்ளைச் செடியின் மெல்லியத் தண்டினை அறுக்கும். அத்தகைய கழனிகளையுடைய ஊரைச் சேர்ந்தவன் நம்மையும் பிறரையும் அறியமாட்டான், இப்படிப்பட்டவன் ஆனது ஏன் தாயே?
விளக்கம்: தலைவன் தலைவியை விட்டுப் பிரிந்து, பிற மகளிருடன் செல்கிறான். அவனுக்கு நம்மையும் தெரியாது, பிற மகளிரையும் தெரியாது, அதாவது தலைவிக்கும் பிற மகளிருக்கும் வித்தியாசம் அறியாதவன் ஆகிவிட்டான். அவன் இப்படிப்பட்டவனாக மாறியது ஏன் என்று தலைவியிடம் வருந்துகிறாள் தோழி. தோழியை தாய் என்று அன்புடன் அழைப்பது மரபாய் இருந்திருக்கிறது. நண்டு வள்ளைச் செடியின் தண்டை அறுப்பதுபோலத் தலைவனும் தலைவியின் உறவை அறுக்கிறானே என்று பொருள்பட வருந்துகிறாள்.
சொற்பொருள்: கரந்தை – திருநீற்றுப் பச்சை/துளசி, அம் – அழகிய, செறுவில் – வயலில், துணை துறந்து – துணையை விட்டுப் பிரிந்து, கள்வன் – நண்டு, வள்ளை – ஒரு நீர்த் தாவரம்(convolvulus repens), மென் கால் அறுக்கும் – மெல்லியத் தண்டை அறுக்கும், ஊரன் – ஊரைச் சேர்ந்தவன், எம்மும் – நம்மையும், பிறனும் – பிறரையும், அறியான் – அறிய மாட்டான், இன்னன் – இப்படிப்பட்டவன், ஆவது – ஆனது, எவன் – ஏன், கொல் – ஐயப்பொருள் தரும் ஒரு இடைச்சொல், அன்னாய் – தாயே (இங்கு தோழியைக் குறிக்கிறது)
என் பாடல்:
“கரந்தை நிறைந்த அழகிய வயலில் நண்டு
தன்துணை துறந்து வள்ளைத் தண்டை அறுக்கும் ஊரன்
நம்மையும் அறியான் பிறரையும் அறியான்
இப்படிப்பட்டவன் ஆனது ஏன் தாயே”
இப்பாடலின் ஆங்கில விளக்கத்தையும் மொழிபெயர்ப்பையும் படிக்க இந்தச் சுட்டியைச் சொடுக்கவும், நன்றி.
மருதம் திணை - தோழி தலைவியிடம் சொன்னது
“கரந்தை அம் செறுவில் துணை துறந்து கள்வன்
வள்ளை மென் கால் அறுக்கும் ஊரன்
எம்மும் பிறரும் அறியான்
இன்னன் ஆவது எவன் கொல் அன்னாய்”
வள்ளை - நன்றி கூகிள் |
எளிய உரை: துளசிச் செடி நிறைந்த அழகிய வயலில் நண்டு தன் துணையை விட்டுவிட்டு வள்ளைச் செடியின் மெல்லியத் தண்டினை அறுக்கும். அத்தகைய கழனிகளையுடைய ஊரைச் சேர்ந்தவன் நம்மையும் பிறரையும் அறியமாட்டான், இப்படிப்பட்டவன் ஆனது ஏன் தாயே?
விளக்கம்: தலைவன் தலைவியை விட்டுப் பிரிந்து, பிற மகளிருடன் செல்கிறான். அவனுக்கு நம்மையும் தெரியாது, பிற மகளிரையும் தெரியாது, அதாவது தலைவிக்கும் பிற மகளிருக்கும் வித்தியாசம் அறியாதவன் ஆகிவிட்டான். அவன் இப்படிப்பட்டவனாக மாறியது ஏன் என்று தலைவியிடம் வருந்துகிறாள் தோழி. தோழியை தாய் என்று அன்புடன் அழைப்பது மரபாய் இருந்திருக்கிறது. நண்டு வள்ளைச் செடியின் தண்டை அறுப்பதுபோலத் தலைவனும் தலைவியின் உறவை அறுக்கிறானே என்று பொருள்பட வருந்துகிறாள்.
சொற்பொருள்: கரந்தை – திருநீற்றுப் பச்சை/துளசி, அம் – அழகிய, செறுவில் – வயலில், துணை துறந்து – துணையை விட்டுப் பிரிந்து, கள்வன் – நண்டு, வள்ளை – ஒரு நீர்த் தாவரம்(convolvulus repens), மென் கால் அறுக்கும் – மெல்லியத் தண்டை அறுக்கும், ஊரன் – ஊரைச் சேர்ந்தவன், எம்மும் – நம்மையும், பிறனும் – பிறரையும், அறியான் – அறிய மாட்டான், இன்னன் – இப்படிப்பட்டவன், ஆவது – ஆனது, எவன் – ஏன், கொல் – ஐயப்பொருள் தரும் ஒரு இடைச்சொல், அன்னாய் – தாயே (இங்கு தோழியைக் குறிக்கிறது)
என் பாடல்:
“கரந்தை நிறைந்த அழகிய வயலில் நண்டு
தன்துணை துறந்து வள்ளைத் தண்டை அறுக்கும் ஊரன்
நம்மையும் அறியான் பிறரையும் அறியான்
இப்படிப்பட்டவன் ஆனது ஏன் தாயே”
இப்பாடலின் ஆங்கில விளக்கத்தையும் மொழிபெயர்ப்பையும் படிக்க இந்தச் சுட்டியைச் சொடுக்கவும், நன்றி.
எனக்குக் கூட விளங்குற மாதிரி ஐங்குறுநூறு பாடலின் விளக்கம் அருமை.பகிர்வுக்கு நன்றி கிரேஸ்!
பதிலளிநீக்குமகிழ்ச்சி..உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ராஜி.
நீக்குஎதைக்கூறுவது சகோதரி...மிக நன்று என்பதைத் தவிர...
பதிலளிநீக்குநாமும் படிக்கிறோம் நல்லவைகளை..
மிக்க நன்றி இனிய வாழ்த்துடன்.
வேதா. இலங்காதிலகம்.
மிக்க நன்றி சகோதரி.
நீக்குஇத்தனை அன்புடன் காதல் தலைவி பரிதவித்து இருக்க,
பதிலளிநீக்குவள்ளை அறுக்கும் நண்டு என காதலன் கள்ளம் புரிவானேயாகில் -
ஊழிற் பெருவலியாவுள - என்று வாளா இருக்க வேண்டியது தான்!..
ஹ்ம்ம் எப்படி வாளாதிருக்க முடியும்?
நீக்குஉங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ஐயா.
பதிலளிநீக்குவணக்கம்!
ஐங்குறு நுாறின் அடைத்தேன் கவிபடிததால்
தேங்குறும் ஏக்கம் திரண்டு
தமிழ்மணம் 2
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
வணக்கம் ஐயா..உங்கள் கருத்துரைக்கும் கவிதைக்கு நன்றி.
நீக்குஅருமையான விளக்கம்! பகிர்வுக்கு நன்றி!
பதிலளிநீக்குஅருமையான பாடலுக்கு எளிமையான விளக்கம் கிரேஸ்! வாழ்த்துகள்..
பதிலளிநீக்குநன்றி தியானா.
நீக்குபாடலின் பொருளும் உங்கள் ஆக்கமும் நன்றாக உள்லது. மனமுவந்த பாராட்டுக்கள்!
பதிலளிநீக்குநன்றி ஜனா.
நீக்குவெகு சிறப்பான விளக்கம் தொடருங்கள். புத்தாண்டு வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குநன்றி சசிகலா..உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!
நீக்குத.ம.3
பதிலளிநீக்குநன்றி சசிகலா
நீக்குஅருமையான விளக்கம் நன்றி சகோதரியாரே
பதிலளிநீக்குத.ம.4
எத்தனை பாடங்கள் படித்தாலும் ஆண்களை பெண்கள் எந்தக்காலத்திலும் புரிந்துகொள்ளவில்லை போலும்! :)))
பதிலளிநீக்குஇல்லைனா "தலைவனின் குணங்களை புரிந்துகொள்ளாமல் இருக்கும் அறியாமைதான் சந்தோஷம்" னு முதலில் இருந்தே புரிந்துகொள்ள மறுத்துவிட்டு, பின்னால் ஞானம் வந்து. "தலைவனை பகுத்தறிந்து புரிந்துகொண்டு புலம்புவதே அழகு" னு நினைக்கிறாங்களானு தெரியலை!
தலைவன் மாறவில்லை! அவன் பிறவியிலேயே "இப்படித்தான்". தலைவியின் தலைவன் பற்றிய "ஒப்பீனியன்கள்"தான் காலத்துக்கேற்ற மாறுகிறதுனுகூட இன்னொரு கோணத்தில் இருந்து சொல்லலாம்! :)
இன்னொரு கோண்மா? அதெல்லாம் எதுக்கு வேணாம்னு சொல்றீங்களா?, கிரேஸ்? :)))
தலைவன் அப்படித்தான், தலைவி இப்படித்தான்..என்ன செய்வது? சங்க காலத்திலிருந்தே இப்படித்தான், கவனமாக இருக்கவேண்டும் என்று சொல்லா முயற்சிக்கிறேன்..என்னால் ஆனது அவ்வளவுதான் :)
நீக்குதலைவியின் ஒப்பீனியன் மாறுவதில்லை வருண்..ஆனால் காதல் கண்ணை மறைக்க விட்டுவிட்டு பின்னர் புலம்புவதை வாடிக்கையாக வைத்துக்கொள்கின்றனர்..
பல கோணங்கள் இருக்கத்தானே செய்கிறது..வேணாம்னு எப்படி சொல்ல முடியும் வருண்?
உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி.
சிறப்பான விளக்கம்மா
பதிலளிநீக்குநன்றி கீதா
நீக்குரசிக்க வைக்கும் விளக்கம்...
பதிலளிநீக்குநன்றி திரு.தனபாலன்
பதிலளிநீக்குஅருமையான பாடலுக்கு எளிமையான விளக்கம் சகோ கிரேஸ் !வாழ்த்துகள்..
பதிலளிநீக்குநன்றி சீனி
நீக்குகலக்கல் கிரேஸ்... எளிய நடையில் அமைந்த விளக்கம் அருமை. :)
பதிலளிநீக்குபெண்கள் புதிர் என்று சொல்பவர்களே அதிகம். அவர்கள் புதிராவதற்கு ஆண்களே காரணம். பாவம் பித்துப் போலப் புலம்புவதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும். பழைய கருத்தானாலும் இதுதான் நிலைமை.வெகு அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள் க்ரேஸ்.நன்றி.
நீக்குஉங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி வல்லிசிம்ஹன்.
நீக்குசில ஆண்கள் பெண்களைப் பித்துபிடிக்கச் செய்கின்றனர்..சில பெண்கள் ஆண்களை.
எளிமையான விளக்கம் அக்கா...
பதிலளிநீக்குநன்றி வெற்றிவேல்.
நீக்குவிளக்கவுரை நன்றாக இருந்தது.இது போல் எழுதுபவர்கள் மிகவும் குறைவு!!!! தொடர்ந்து எழுதுங்கள், தமிழ் பெருமை அடையும் .
நீக்குhttp://pudhukaiseelan.blogspot.in/
நன்றி ஜெயசீலன்.
நீக்குஉங்கள் தள பகிர்விற்கு நன்றி..கண்டிப்பாகப் பார்க்கிறேன்.
தொடர்ந்து தங்களது பதிவைப் படித்துவருகிறேன். விளக்கத்தோடு அருமையாக உள்ளது. வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குதொடர்ந்து படித்து உங்கள் கருத்தையும் பதிவதற்கு உளமார்ந்த நன்றி ஐயா.
நீக்குசங்கத் தமிழை சமகாலத் தமிழில் “மொழிபெயர்ப்பு“ சரிதான். ஆனால், திரு துரை.செல்வராஜூ அவர்களின் கேள்விக்கான பதிலில் வரும் எதார்த்தமான கோபம் இந்தக் கவிதையில் இருக்க வாய்ப்பில்லை. அப்படி உங்கள் தற்காலக் கருத்தைக் காட்டும் கவிதைகளாகத் தேர்வு செய்வதும் முக்கியமென்று நினைக்கிறேன். அல்லது, சங்கப் பாடலில் மிகுந்துகிடக்கும் இப்படியான (வாளாவிருக்கச் சொ்ல்லும்) பாடல்களைத் தவிர்த்து, அழகியல் மட்டுமே ஆன பாக்களைத் தேர்வு செய்து கொள்ளலாம் என்று தோன்றுகிறது. கருத்தைச் சொல்வது எளிது, செயல்படுத்துவது கடினம்தான். செயற்கரிய செய்வர் பெரியர்.
பதிலளிநீக்குதிரு.துரை செல்வராஜூ அவர்களுக்குப் பதில் இட்டதில் கோபம் ஏதும் இல்லை ஐயா..எப்படி அப்படி இருக்க முடியும்..என்று ஆதங்கமாகவே சொன்னேன்..நேரமின்மையால் சுருக்கமாகப் பதில் இட்டுச் சென்றது குழப்பம் தருகிறது என்று நினைக்கிறேன்.இனிமேல் இப்படி ஆகாமல் பார்த்துக் கொள்கிறேன்.
நீக்குதற்காலக் கருத்தைச் சொல்லவேண்டும் என்று எண்ணவில்லை..அப்படியே மொழிபெயர்க்க மட்டுமே யோசித்தேன்..இந்த கோணத்தில் சிந்திக்கவில்லை..
உங்கள் ஆலோசனைக்கும் கருத்துரைக்கும் நன்றி ஐயா.. :)
இன்றைய கருத்தை அன்றைய கவிதையில் ஏற்றிக் கூறக் கூடாதுதான். இன்றைக்கும் பொருந்தக் கூடிய வாழ்வியல் நுட்பங்களுடன் கூடிய அழகியல பாக்களைத் தேர்வு செய்வதும் முக்கியம் என்று தோன்றுகிறது. உங்கள் உழைப்பு இன்றைய தலைமுறையின் சிந்தனை வளர்ச்சிக்கும் பயன்பட வேண்டுமே என்னும் கவலையில் சொல்கிறேன். மற்றபடி உங்கள் முயற்சி அருமை. தொடர்க.
பதிலளிநீக்கு//இன்றைக்கும் பொருந்தக் கூடிய வாழ்வியல் நுட்பங்களுடன் கூடிய அழகியல பாக்களைத் தேர்வு செய்வதும் முக்கியம் என்று தோன்றுகிறது// இந்த கோணத்தில் சிந்திக்கவில்லை ஐயா..எளிதாக விளக்கம் என்று மட்டுமே யோசித்தேன். தற்கால சிந்தனை வளர்ச்சிக்குப் பயன்படும் பாக்களை ஒரு தனி சுட்டிக் கொடுக்கலாம் என்று தோன்றுகிறது...மனதில் வைத்துக் கொள்கிறேன்..யோசித்துச் செய்கிறேன் ஐயா..உங்கள் கருத்துரைக்கு உளமார்ந்த நன்றி.
நீக்குசிறப்பான விளக்கம். தொடரட்டும் உங்கள் நல்பதிவுகள்.
பதிலளிநீக்குமிக்க நன்றி வெங்கட்.
நீக்குஅருமை கவிஞரே வாழ்த்துக்கள்..
பதிலளிநீக்குதேர்வுப் பணி தேர்தல் பணி என ஒரு சூழல்...
தொடர முடியவில்லை என்றாலும்
இப்போவதாவது முடிந்ததே என்று ஒரு சின்ன ஆறுதல்..
வாருங்கள் மது..ஆசிரியருக்கு இந்த நேரம் வேலை மிகுதி என்பது அறிந்ததே...அதன் நடுவிலும் வந்து படித்துக் கருத்திட்டதற்கு மிக்க நன்றி மது.
நீக்குஇனிய ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துக்கள்..
பதிலளிநீக்குஉங்கள் வாழ்த்திற்கு உளமார்ந்த நன்றி ஐயா.
நீக்குஅன்பின் கிரேஸ் - வலைச்சர அறிமுகம் மூலமாக வந்தேன் - அருமையான பதிவு - 48 மறுமொழிகளையும் படித்தேன் - பதிவும் மறுமொழிகளும் நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
பதிலளிநீக்குஅன்பின் ஐயா, வணக்கம். வலைச்சரத்தில் அறிமுகமான தகவலைச் சொன்னதற்கு முதலில் நன்றி.
நீக்குபதிவையும் மறுமொழிகளையும் படித்துக் கருத்திட்டு வாழ்த்தியதற்கு மிக்க நன்றி ஐயா
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி..
பதிலளிநீக்குவாழ்த்துகள் இணைப்பு பகிர்விற்கும் நன்றி