Saturday, September 5, 2015

போகுமிடம் களைகட்டுது


ஊரெல்லாம் ஒரே பேச்சு
ஊர் ஊராய்க்  குழு சேருது
ஒன்னாச் சேந்தும் போகலாம்
தனியாப் போயும் சேந்துக்கலாம்


முதல்நாள் போய்த் தங்கிக்கலாம்
 அந்தநாள் காலை  போய்க்கிடலாம்
ஆஹா! நான் வருகிறேனே!!
அச்சோ! என்னால் முடியாதே..

நூல் வெளியீடு இருக்காமே
குறும்படம் ஏதேனும் உண்டா?
ஆமா..சாப்பாடு சைவமா?
அசைவம்  உண்டா?

கேள்வியும் பதிலும்
உலாவரும் வேளை
போகுமிடம் களைகட்டுது
கூடிக் கூடிப் பேசுது

நல்லாச் செய்யணும் என்றே 
நடக்குது பல திட்டம்
என்ன ஒரு ஆர்வம் - இதைவிட
எண்ணம் வேறு உண்டா?

அட, உலகமெலாம் இந்த பேச்சு
வலையெல்லாம் பதிவா விழுகுது
என்ன நான் சொல்றது?
தெள்ளத் தெளிவா விளங்குது

பழைய நண்பர்கள் கும்மாளம்
புது நண்பர்கள் குதூகலம்
வலைப்பதிவர் சந்திப்பு
புதுக்கோட்டைத்   தயாராகுது

ஊரைச் சொன்னவுடன் கிளம்புவதா?
நாளைத் தெரிஞ்சுக்க வேண்டாமா?
அக்டோபர் பதினொன்னு
காலை ஒன்பது மணியிலிருந்து

ஆரோக்கிய மாதா மன்றம் தான்
ஆலங்குடிச் சாலை தான்
வேற எதுவும் தெரியனுமா?
சொடுக்க வேண்டும் இங்கே தான்!


 திருமயக் கோட்டையில் பாறை ஓவியங்கள், மலர்தருவில்.48 comments:

 1. // ஆஹா! நான் வருகிறேனே!!
  அச்சோ! என்னால் முடியாதே... //

  முயற்சி செய்து கலந்து கொள்ள வேண்டும்... வருகைப்பதிவு பட்டியல் பதிவில் மாற்றி விடவா...?

  ReplyDelete
  Replies
  1. இரண்டாவது சொல்வதுதான் நான் அண்ணா.. :)
   சிலர் வருகிறார்கள், சிலரால் முடியவில்லை என்பதைத் தான் அப்படிச் சொன்னேன்.
   வருகைப் பதிவு படிவத்தை அனைவரும் நிரப்ப வேண்டும் என்று எண்ணி முதலில் நிரப்பி விட்டேன்..பின்னர் தவறுணர்ந்து மின்னஞ்சலில் தகவல் அனுப்பி வைத்தேன். குழப்பத்திற்கு மன்னிக்கவும் அண்ணா. இந்த வருடம் என்னால் வர இயலாது.

   Delete
 2. //ஒன்னாச் //

  "ஒண்ணா?"

  ReplyDelete
  Replies
  1. ஒன்றாய் - ஒன்னா என்று நினைத்து எழுதிவிட்டேன் ஸ்ரீராம். 'ஒண்ணா' என்று வர வேண்டுமா?
   முத்துநிலவன் அண்ணாவின் கட்டுரையை எடுத்துப் பார்க்கவேண்டும். :)

   Delete
 3. "திருவிழா தொடங்கிடுச்சுடோய்....."

  ReplyDelete
 4. ஆமா..சாப்பாடு சைவமா?
  அசைவம் உண்டா?//
  சைவம் சந்தேகம் தான் அப்படின்னு மது ஒரு குண்டைத் தூக்கிப் போட்டு இருக்காரு.

  நான் ஏற்கனவே பதிவு செஞ்ச போதிலும் இப்ப இதப் பார்த்த பின்னே ரோசனையா இருக்குது.

  இருந்தாலும் டி. டி. தம்பி கிட்டே, நீங்க வரும்போது, கொஞ்சமா, ஒரு அஞ்சு இட்லி , இரண்டு தோசை, மூணு இடியாப்பம், நாலு சப்பாத்தி, அஞ்சு ஊத்தப்பம் , தொட்டுக்க என்ன கிடைக்குதோ அத மட்டும் எடுத்துகிட்டு வாங்க. இந்த தாத்தா கிட்ட தனியா பார்த்து கொடுங்க அப்படின்னு சொல்லலாம் நு இருக்கேன்.

  இல்லாகாட்டியும், பக்கத்துலே புவனேஸ்வரி கோவில் லே தெரிஞ்சவங்க இருக்காக.ஒரு நாளைக்கு, அந்த பொங்கலை , அம்மனுக்கு நைவேத்தியம் செஞ்சப்பிரம் இரண்டு வாய் கொடுங்க அப்படின்னு கேட்போம் அப்படின்னு நினைச்சுட்டு இருக்கேன்.

  அந்த புவனேஸ்வரி அம்மன் நினைச்சா எதுவுமே நடக்குமே.


  சுப்பு தாத்தா.
  www.subbuthatha72.blogspot.com
  www.subbuthatha.blogspot.com
  www.vazhvuneri.blogspot.com

  ReplyDelete
 5. வணக்கம் தாத்தா.

  அச்சோ, முடிவு எதுவும் தெரிந்து நான் எழுதவில்லை தாத்தா. இதைப் பற்றியப் பேச்சு இருந்ததால் சேர்த்து வைத்தேன். அசைவம் சாப்பிடாதவர்களைக் கண்டிப்பாகக் கருத்தில் கொண்டே செய்வார்கள் தாத்தா. அதனால நீங்க கவலைப் பட வேண்டாம். வருகைக்கும் கருத்திற்கும் நன்றி தாத்தா

  ReplyDelete
 6. அருமைமா...வரமுடியவில்லையே என்ற ஏக்கத்தை உணர்கின்றேன்..சைவம் தான் மா....கவலை வேண்டாம்....அருமையான உணவு ஏற்பாடு ஜெயா வின் தலைமையில்..

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் கீதா.
   தெரியும் கீதா, அனைவரையும் யோசித்துத்தானே செய்வீர்கள், இதில் கவலை எதற்கு?
   ஆங்காங்கு பதிவுகளில் படித்தவற்றைச் சேர்த்து எழுதினேன், இந்த வரிகளைவிட்டிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். :)
   ஓ ஜெயாம்மா தலைமையா, உணவு ஏற்பாடு? அன்பாகக் கலக்கி விடுவார்கள் :)

   Delete
 7. அனைத்து சாலைகளும் புதுக்கோட்டையை நோக்கியே
  பயணப்பட போகின்றன
  விழா ஏற்பாடுகள் களை கட்டத் தொடங்கிவிட்டன
  நன்றி சகோதரியாரே
  தம+1

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் அண்ணா
   உங்கள் நூல் வெளியீடு இருக்கிறதல்லவா? வாழ்த்துகள்!
   கருத்திற்கு நன்றி அண்ணா

   Delete
 8. உங்கள் மனமெல்லாம் புதுக்கோட்டையில்தான் என்று கவிதை சொல்லுகிறது.

  ReplyDelete
 9. எனக்கும் ஆவலாகவே உள்ளது கலந்து கொள்ள என்ன செய்வதும்மா. வாழ்த்த மட்டுமே முடிகிறது. அனைத்தும் சிறப்புற வேண்டுகிறேன். நன்றி பதிவுக்கு.!

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் இனியா.. எனக்கும் இவ்வருடம் போக இயலாது.
   வாழ்த்திற்கு நன்றி தோழி

   Delete
 10. இந்த மாதிரி கவிதை எளிமையாய் இருந்தால்தான் புரிகிறது...ஹீஹீ

  ReplyDelete

 11. டிரெஸ் கோடு உண்டா? எல்லோரும் ஒரே கலரில் ஆடை அணிந்து வரலாமே

  ReplyDelete
  Replies
  1. வண்ணமயமாய்க் களைகட்டட்டும் சகோ :-)

   Delete
 12. கவிமழைச் சாரல் சிலுசிலுப்பு..
  தமிழொடு நடக்கக் கலகலப்பு!..

  அழைப்பிதழ் இனிதாய் பளபளப்பு..
  அன்பினில் இதயம் மினுமினுப்பு!..

  வாழ்க நலம்!..

  ReplyDelete
  Replies
  1. ஆகா! உங்கள் கவிதை மகிழ்வு!
   மிக்க நன்றி ஐயா

   Delete
 13. பழைய நண்பர்கள் கும்மாளம்
  புது நண்பர்கள் குதூகலம்
  வலைப்பதிவர் சந்திப்புக்கு
  புதுக்கோட்டை தயாராகுது என்ற செய்தி கேட்டு
  எனக்கும் மகிழ்ச்சி! - எனது
  வாழ்த்துகளை அனுப்பி வைப்பேன்!
  புதுக்கோட்டையில்
  வலைப்பதிவர் சந்திப்பு சிறப்புற
  நடைபெற இறைவனை வேண்டி நிற்கின்றேன்!

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வாழ்த்திற்கும் பிரார்த்தனைக்கும் மனமார்ந்த நன்றி ஐயா

   Delete
 14. வலைப் பதிவர் விழா சூடுபிடித்து எல்லோர் வலையிலும்
  அத்தனை வர்ணமயமாக அழகொளிர்கிறது!

  உங்கள் கவிதையும் மிக அருமை தோழி!
  வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் அன்புத் தோழி. இன்னும் ஒரு மாதம் :-)

   மிக்க நன்றி தோழி

   Delete
 15. தங்கள் பாதையில் அழகான விளக்கம், எல்லோரும் புதுக்கோட்டையை நோக்கியே,
  அருமை, விழா சிறக்க வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 16. ஆஹா!!!! கலக்கிட்டீங்க!! எல்லாரும் கிளம்பியாச்சுல்ல....பட்டையக் கிளப்பிட வேண்டியதுதான்.....

  உங்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பு எப்போது கிடைக்கும் என்று தெரியவில்லை....வழி பிறக்கும் நம்புகின்றோம்...

  ReplyDelete
  Replies
  1. நன்றி அண்ணா.
   ஆமாம், உங்களையும் கீதாவையும் காண எனக்கும் ஆவலாக இருக்கிறது . அந்த நாளுக்காகக் காத்திருக்கிறேன்

   Delete
 17. புதுக்கோட்டை தாங்குமா இந்த ஆர்பரிப்பை. மிக சந்தோஷம். அழகாக வழி மொழிந்திருக்கிறீர்கள் க்ரேஸ்.
  வாழ்த்துகள் அனைவருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. ஆகா! வாங்க வல்லிம்மா :-) உங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி.
   மிக்க நன்றிம்மா

   Delete
 18. ஆஹா... கவிதையாவே பாடிட்டீங்களா?

  அருமை... அருமை..

  ReplyDelete
 19. புதுக்கோட்டைக்கு வரவில்லை என்றாலும் திருவிழா பற்றிப் பாடி அசத்தி விட்டீர்கள்...

  ReplyDelete
 20. கலக்கிட்டிங்கப்பா... நீங்களும் வந்தால் சிறப்பாகவே இருக்கும்.(ஆமாம் மதுரைக்கு வரச்சொன்னோம் வரவில்லை என்று திட்டுவது கேட்கிறது சகோ.)

  ReplyDelete
  Replies
  1. ஹாஹா திட்டவில்லை தோழி :-)
   வந்திருந்தால் உங்களையும் பார்த்திருக்கலாம். இவ்வருடம் நான் வர இயலாச் சூழல். எப்போது சந்திக்கப் போகிறோமோ..

   நன்றி தோழி

   Delete
 21. சுடர் விளக்காயினும் தூண்டுகோல் ஒன்று வேண்டும். அதுபோல உங்களின் பதிவுத் தூண்டுகோளை... போட்டுவிட்டீர்கள், ஆவலை தூண்டிவிட்டு இழுக்கிறீர்கள் ... நன்றிகள்....

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு முதல் நன்றி ஐயா.
   பதிவர் சந்திப்பிற்குச் செல்ல தூண்டுகோளாய் இருந்தால் மகிழ்ச்சியே. பதிவு செய்துச் சென்று பல வலைப்பதிவர்களையும் பார்த்து மகிழுங்கள்.
   உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி

   Delete
 22. புதுக்கோட்டைக்கு நண்பர்களை வரவழைக்கும் கவிதை அருமை. பொருத்தமான புகைப்படம்.

  ReplyDelete
 23. அருமை அருமை தோழி!

  ReplyDelete
  Replies
  1. உங்கள் தொடர் ஊக்குவிப்பிற்கு மனமார்ந்த நன்றி தோழி

   Delete
 24. அருமைம்மா..
  ரொம்ப நல்லா உணர்ந்து எழுதியிருக்கிறாய். புதுக்கோட்டை நண்பர்களில் பாதிப் பேர் உனக்கும் நண்பர்கள் இல்லையா? அது உன் எழுத்தில் இழையோடுகின்றது.
  ரொம்ப மகிழ்ச்சிடா. ஆனால்...
  நீ வரப்போவதில்லை என்பது ஒரு வருத்தம்தான்.
  எனினும், உனது
  “பழைய நண்பர்கள் கும்மாளம்
  புது நண்பர்கள் குதூகலம்
  வலைப்பதிவர் சந்திப்பு
  புதுக்கோட்டைத் தயாராகுது“ எனும் வரிகளை மறக்க முடியாதுப்பா.
  ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி...
  நமது புதிய முயற்சி, உலகத்தமிழ்வலைப்பதிவர் அனைவரையும் சந்திக்க வைக்கும் முயற்சியான “தமிழ்வலைப்பதிவர் கையேடு-2015”இல் அனைவரும் பங்கேற்க வேண்டும். அதற்காக ஒரு தனிப் பதிவை உன்னிடம் -வெளிநாடு வாழ் தமிழ்வலைப்பதிவர் அனைவரும் கவனிக்கும்படி- எதிர்பார்க்கிறேன் பா.

  ReplyDelete
 25. ஆமாம் அண்ணா, புதுக்கோட்டையில் நிறைய நண்பர்கள் சேர்ந்துவிட்டார்கள். :-)
  மிக்க நன்றி அண்ணா . கண்டிப்பாகப் பதிவிடுகிறேன்

  ReplyDelete

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...