தன்னடக்கமில்லா இச்சையே ....சை!

உடை நடை
துணையுண்டு இல்லை
குழந்தை மூதாட்டி
நேரம் காலம்
எதுவும் காரணியல்ல
தன்னடக்கமில்லா
இச்சையே ....சை!
Image: thanks Google

கயவனே
மனிதனாடா நீ?
காட்டிற்குச் சென்றால்
மிருகமும் உன்னை ஏற்காதே
கொடிகளும் மலர்களும் தழைக்க
எரிந்து போயேண்டா நீ

34 கருத்துகள்:

  1. //காட்டிற்குச் சென்றால் மிருகமும் உன்னை ஏற்காதே!..//

    பொங்குகின்ற கோபத்தினை உணரமுடிகின்றது.
    வெகுவாக சிந்திக்கச்செய்கின்றது இந்தக் கவிதை..

    பதிலளிநீக்கு
  2. என்னாச்சு.........கோபமாக ஒரு கவிதை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் சகோ, வன்கொடுமை செய்திகளைக் கேட்டு கேட்டு மனம் கொந்தளிக்கிறது...

      நீக்கு
  3. மின்னலெனத் தாக்கிய கவி வரிகள்!

    உண்மை!..
    காட்டிற்குச் சென்றால் மிருகமும் இவர்களை ஏற்காதுதான்...

    பதிலளிநீக்கு
  4. சகோதரி கீதா வலைப்பூவில் இந்த பதிவின் மூலத்தை பார்த்தேன்..
    என்ன சொல்வது என்று தெரியவில்லை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், பல நாட்களாகக் கொதித்துக் கொண்டிருந்த மனம் கீதா அவர்களின் கவிதை படித்ததும் கொட்டிவிட்டது..

      நீக்கு
  5. பல்வேறு கல்வி விழிப்புணர்வு சிந்தனைகளும்தான் இதற்கு மருந்தாக முடியும்..

    பதிலளிநீக்கு
  6. வணக்கம்
    சகோதரி.

    ஆதங்கங்க கவிதை நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  7. நாகரிகம் என்ற பெயரில் வளர்வதாகக் கூறிக்கொண்டு கற்காலம் நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறோமோ என்ற வேதனைதான் எழுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதே சிந்தனைதான் ஐயா எனக்கும்..அப்பொழுதுகூட இவ்வளவு கொடுமை இருந்திருக்காதோ என்று நினைக்கிறேன்.

      நீக்கு
  8. சிலரைக் காட்டு விலங்குகள் கூட தங்களினத்தில் சேர்க்காதுதான்
    வேதனைதான் மிஞ்சுகிறது சகோதரியாரே

    பதிலளிநீக்கு
  9. கொடியவர்களை கொடிய மிருகங்களும் ஏற்காது. ஆதங்கத்தை கொட்டிய அருமையான கவிதை. வாழ்த்துக்கள் ....!

    பதிலளிநீக்கு
  10. கோபம் கொப்பளிக்கும் கவிதை! சிறப்பு! நன்றி!

    பதிலளிநீக்கு
  11. பெண்கள் சக மனிதர்கள் எனும் எண்ணம் எப்போதான் ஏற்படப்போகுதோ ?
    பொங்கித் தீர்க்கிறது கவிதை. சாட்டையடி!!

    பதிலளிநீக்கு
  12. மிருகங்கள் கூட ஒதுக்கியபிறகு மனிதனின் விலை என்ன ?
    பழைய செருப்பினும் தாழ்.
    அருமையான, அழகாகான, அக்னிகோபம்.

    பதிலளிநீக்கு
  13. உறுத்தி உயிர்பிளியும் வல்லுறவு நோய்க்கு
    உறுப்பறுத்தல் ஒன்றே வழி !

    தினமும் செய்திகளில் வன்கொடுமை பற்றி வருகின்றது ஆனால் தண்டிக்கப்பட்டார் பற்றி எதுவும் வருவதில்லையே ! அட சே ..!

    வலி நிறைந்த கவிதை அருமை
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரியாச் சொன்னீங்க..
      ஆமாம் ஒருவராவது கடுமையாகத் தண்டிக்கப்படல் வேண்டும்..

      நன்றி சகோ

      நீக்கு
    2. அகிம்சை அரசென்று ஆட்ச்சிமுலாம் பூசின்
      மகிமை இழக்கும் மனு !

      காலம் பதில் சொல்லும் சகோ !

      நீக்கு
  14. சாட்டையால் அடிக்கும் வரிகள்.. மிக மிக அருமை கிரேஸ்

    பதிலளிநீக்கு
  15. "எரிந்து போயேண்டா நீ" என
    சுட்டெரிக்கும் வரிகளாக
    சிறந்த கவிதை

    பதிலளிநீக்கு
  16. சாட்டையடி.....

    பெண்களை போகப்பொருளாக மட்டுமே பார்க்கும் மிருகங்கள்......

    :(((((

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

கிழக்கு பெட்டி ஆமை - கவிதை

   கிழக்கு பெட்டி ஆமை  கடப்பது என்ன அணில் குட்டியா? வேறுபட்டுத் தெரிகிறதே! வண்டியை நிறுத்திவிட்டேன் ஆகா! அணிலில்லை ஆமை! கடக்கட்டும் என நான் ...