இனிமையினும் இனிமை


பலதிங்கள் காணாத என்னுயிர் தோழி வருகிறாள்
அளவளாவ வாசல் செல்லவில்லை நான்!
கன்னல் சாறும் வெல்லப் பாகும் வேண்டுமா என்றாள்
மனையில் நுழைவதற்கு முன்பே, வேண்டாம் என்றேன் !
தித்திக்கும் தேனும் முக்கனியும் வேண்டுமா என்றாள்
மறுத்தே உரைத்தேன் ஒரே சொல்!
ஏதேனும் எடுத்துக்கொள், எல்லாம் மறுத்தால் எப்படி என்றாள் !
"எதுவும் மறுக்கவில்லை, அனைத்தும் வெகுத்தம்  உண்கிறேன்" என்றேன்
அனைத்தும் உண்கிறாயா?, என்றே உள்ளே வந்தனள்
"மெய்யுரைத்தாய்! தொந்திரவு செய்யவில்லை!" என்றே சென்றாள் !
கண்ணே! உன்னை நெஞ்சோடு அணைத்து உச்சிமுகர்ந்து
கண்மூடி அமர்ந்திருந்த என் இன்பநிலை கண்ட என் தோழி!

குழந்தையை அணைத்து பூரித்திருந்த தாய் தோழியைக் காண மான்போல் துள்ளி ஓடவில்லை, இனிப்பாய் எல்லாம் உண்கிறேன் என்கிறாள். அவ்வளவு இனிமையாது தாய்மையின் பூரிப்பு, நிறைவானது குழந்தை தரும் மகிழ்ச்சி!.

புது சொல்:
வெகுத்தம் - நிறைவாய், மிகுதி

14 கருத்துகள்:

  1. Wow Grace !!..enna sollarunthu theriyala unga tamil pullamai pathi.. so so rich...

    பதிலளிநீக்கு
  2. சில நூறு மாதங்கள்
    பல கனவு ஏந்தி
    பல தேர்வு தேரவே
    சில பொழுது உறங்காமல்
    நீ பயின்ற உன் கலைகள்
    பல தொலைவில் சென்றபின்னும்

    உன் பிள்ளைகள் வளர
    புன்னகைக்கும் என் தோழியே.. இதுவும் தாய்மையே!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா! நல்ல சிந்தனை Shaby , நன்றி! உங்கள் கவிதை என்மனதில் இருக்கும் ஒரு கவிதையின் கருவை ஒத்திருக்கிறது, மாறுபட்ட கோணத்தில். அக்கவிதை பதிவு செய்யும்பொழுது உங்களுக்கு தெரியும்.
      kalakkuringa Shaby..chancea illa...tamila reply pannitten, but thangilish podama irukka mudilai..engayo poitinga ponga..neenga solradhu unmai dhan..

      நீக்கு
  3. One of the best!! Selection of words is very nice.. Keep going Grace....
    --Dhiyana

    பதிலளிநீக்கு
  4. Super Pradhi!! gives me a feel of reading those "sanga kaala" literature.. very very beautiful! :)

    பதிலளிநீக்கு
  5. I want to tell it is good. I know it will be good. Your blogs are always very beautiful. But sorry Grace, couldn't read a word. :)
    But still I like it.

    Suni

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. haha...Thanks Suni :-) that's a lot of confidence on me.. :-)
      I could translate it for you..May be I'll add it in the post itself..

      நீக்கு
  6. அருமை கிரேஸ். அழகான கவிதை. ஒரே ஒரு திருத்தம். கன்னல் சாறு என்பதே சரி.

    பதிலளிநீக்கு
  7. நன்றி தினேஷ்! எழுத்துப்பிழை சுட்டிக்காட்டியதற்கும் நன்றி, மாற்றிவிட்டேன். :-)

    பதிலளிநீக்கு
  8. உங்கள் மொழிநடை நன்றாக இருக்கின்றது

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

கிழக்கு பெட்டி ஆமை - கவிதை

   கிழக்கு பெட்டி ஆமை  கடப்பது என்ன அணில் குட்டியா? வேறுபட்டுத் தெரிகிறதே! வண்டியை நிறுத்திவிட்டேன் ஆகா! அணிலில்லை ஆமை! கடக்கட்டும் என நான் ...