வானவில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வானவில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வானவில்லாய்

என் மகனின் கைவண்ணம்

மழைத் துளி ஏற்காத
அலை வரிசையே
அழகு வண்ணமாய்...

ஒளிந்த மழையதன் பின்னே
ஒளிவீசும் பொன் கதிரால்
ஒளிருமே வண்ண வானவில்

துளிகள் தள்ளும் அலைவரிசைகள்
வெளி வரும் ஏழு  வண்ணங்கள்
ஒளிருமே வானில் வானவில்லாய்

துன்பம் தள்ளும் வேளையிலே
தன் நிலை குலையாமல் மிளிர்ந்திட்டால்
பின் வருமே ஒளிவீசும் வெற்றி!


கண்கள் நூறு வேண்டும்- அருவி இளவேனில் காலாண்டிதழில்

 வட அமெரிக்கா தமிழ் சங்க பேரவையின் காலாண்டிதழ் அருவியின் இளவேனில் பதிப்பில் என் கவிதை.  வாசித்து, பிடித்திருக்கிறதா என்று சொல்லுங்களேன்.