மண்ணிற்கும் விண்ணிற்கும் காதல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மண்ணிற்கும் விண்ணிற்கும் காதல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

மண்ணிற்கும் விண்ணிற்கும் காதல்



நெடிது உயர்ந்த தேவதாரு மரங்கள்
விசும்பைத் தொட்டுவிட முயன்று நிற்க
மனம் இளகிய விசும்பு
முகில் முழக்கத்துடன் 
மின்னல் ஒளியுடன்
நானே வருகிறேன் என்று
மழைக் கரங்கள்  நீட்ட
மரங்கள் உதிர்த்த இலைகள்
நிலத்தோடு ஒன்றாகக் கலந்து மக்க
புது மரங்கள் பல செழித்து 
பசுமையாய்த் தொடர்கிறது
மண்ணிற்கும் விண்ணிற்கும் காதல்!


 விசும்பு - வானம்
நான் ஒரு முகாமிற்குச் சென்றபொழுது  அங்கு  காட்டில் மழை பெய்ததால் தோன்றிய கவிதை. - கிரேஸ்

கண்கள் நூறு வேண்டும்- அருவி இளவேனில் காலாண்டிதழில்

 வட அமெரிக்கா தமிழ் சங்க பேரவையின் காலாண்டிதழ் அருவியின் இளவேனில் பதிப்பில் என் கவிதை.  வாசித்து, பிடித்திருக்கிறதா என்று சொல்லுங்களேன்.