தமிழ் சொற்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழ் சொற்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சாப்பாட்டு நேரத்தில் சொல்லாடல்-விளையாட்டு

நான், என் இரு மகன்கள், என் கணவர் - நால்வரும் சேர்ந்து அமர்ந்து சாப்பிட்டால் ஏதாவது பேசிக் கொண்டே சாப்பிடுவோம்.  முடிந்தவரை இப்பழக்கத்தைக்  கடைப்பிடிக்க முயல்கிறேன். இந்தப் பழக்கம் கொண்டுவர நான் பட்டபாடு இருக்கிறதே..தொலைக்காட்சியை அணைத்துவிட்டு பேசிக்கொண்டுதான் சாப்பிட வேண்டும் நடைமுறைபடுத்த பெரும்பாடாக ஆகிவிட்டது. இப்பொழுதும் வெளியூர் செல்லும் நேரங்களில் நழுவிவிடும்.

அமெரிக்காவில் இருந்தவரை இரவு உணவு பெரும்பாலும் ஒன்றாக உண்போம். இப்பொழுது கணவர் வரும் நேரம் அந்த நேரத்திற்குத்தான் தெரியும். அதனால் குடும்ப உணவு நேரம் வாரக்கடைசி நாட்களில் என்றாகிவிட்டது. சரி, விசயத்திற்கு வருகிறேன்.

ஒரு நாள் அப்படிச் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்பொழுது 'நினைவாற்றல் விளையாட்டு'

பேசுவது தமிழா - 1

"தமிழுக்கும் அமுதென்று பேர்"...
தமிழுக்கு எதற்கு வடசொல்லில் பெயர்? ஆச்சரியமாக இருக்கிறதா?  இந்தப் பாடல் இயற்றிய கவிஞர் பாரதிதாசனை மிகவும் மதிக்கிறேன், எனக்குப் பிடித்த கவிஞரும் ஆவார். இந்தப் பாடலும் பிடித்தமானது தான். நான் இங்கு சொல்வது பாடலைப் பற்றி அல்ல, வடமொழிச் சொல் பற்றி மட்டுமே.
தமிழில் கலந்திருக்கும் வடமொழிச் சொற்கள் இன்று நேற்றல்ல, கடைச்சங்க காலத்தில் இருந்தே கலக்கத் தொடங்கிவிட்டன. தமிழ் மேல் உள்ள காதலால் இரண்டற இணைகின்றன வடமொழிச் சொற்கள் என்று கொள்ளலாமோ? அப்படிக் கலந்த வடமொழிச் சொற்களையும் அதற்கு இணையானத் தமிழ் சொற்களையும் பகிர்வதே என் நோக்கம்.

அமுது என்பது வடமொழியாம்
அதனிடத்தில் வருமாம்
அழகுத் தமிழ் சொற்கள்
அடிசில், இனிமை, சோறு


பேசுவது தமிழாவில் மீண்டும் பேசுகிறேன். அதுவரை அடிசில் உண்டு, இனிமையாக இருங்கள்.


முகம் புதைத்தாள் அவன் ஆகம்!

பாண்டில் ஏற்றி சின்மலர் சூடி 
இன்னே வருவாரா என் தலைவர் என 
மேன் மாடத்தில் கரங்கள் பனிப்ப 
பூந்துகில் போர்த்திய தலைவியின் உள்ளம் 
மகிழ் சிறந்து மலருமாறு 
பெரும்பெயல் பேணாமல் பாய்பரி ஏறி 
அழகியக் கோயில் சேர்ந்த தலைவன் 
புதுவது இயன்ற பொலந்தொடி அணிவித்து 
அன்பு மிகத் தழுவத் தன் முகம் 
புதைத்தாள் தலைவி, அவன் ஆகம்!


நெடுநல்வாடை வாசித்துக் கற்றுக் கொண்ட தூய தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தி எழுதிய கவிதை இது.

விளக்கம்:  விளக்கு ஏற்றி சில மலர் சூடி. இப்பொழுதே தலைவன் வருவாரா என்று எதிர்பார்த்து மேன்மாடத்தில் நின்று, கரங்கள் குளிர்வதால் பூக்கள் வரைந்த ஆடையினைப் போர்த்திக்கொள்கிறாள். அவளின் உள்ளம் மகிழுமாறு, பெரு மழையினையும் பொருட்படுத்தாமல் விரைவாகச் செல்லக்கூடிய குதிரையில் ஏறி அரண்மனை வந்த தலைவன், புதிதாய்ச் செய்த பொன்னாலான வளையலை அணிவித்து அன்புடன் தழுவ, அவன் மார்பில் முகம் புதைத்தாள் தலைவி.

சில சொற்களின் பொருள் கீழே..

பாண்டில்- விளக்கு 
பனிப்ப - குளிர 
மகிழ் சிறந்து - மகிழ்ச்சி நிறைந்து 
பெரும்பெயல் - பெரும் மழை 
பேணாமல் - பொருட்படுத்தாமல் 
பாய்பரி  - விரைந்து செல்லும் குதிரை 
கோயில் - அரண்மனை 
புதுவது இயன்ற - புதிதாகச் செய்த 
பொலந்தொடி -  பொன்னால் ஆன வளையல்  
ஆகம் - மார்பு 

நம்மிடையே ஒளிந்திருக்கும் பரங்கியன்

அரசியல் விடுதலை பெற்றோம் 
அகலவில்லை ஆதிக்கம் முழுவதுமாய் 
ஆங்கிலேயன் கொண்டு வந்த எதுவும் 
நமக்குப்  பெரிதாய் ஆகிவிட்டது 
நம்முடன் இருந்த பலவும் 
நமக்குச் சலிப்பாய் ஆகிவிட்டது 
நம்மில் ஒன்றாகி விட்டான் 
நமக்கேத்  தெரியாமல் 
நம்மிடையே ஒளிந்திருக்கும் பரங்கியன்

செம்மொழி நம் அடையாளமாய் இருக்க 
பிற மொழி ஆதிக்கம் எதற்கு 
பல மொழி கற்கலாம்,
இன்றைய வாழ்க்கைக்குத்  தேவைதான் 
ஆனால் தமிழ் நம் அடையாளம் இல்லையா?
தமிழைத் தள்ளிவிட்டுத்  தலை நிமிர முடியுமா?
அறிவோம், தெளிவோம், செயல்படுவோம்!
தமிழ் நம் மூச்சாய் இருக்கட்டும் 
பிறமொழி அணியாய் இருந்துவிட்டுப்  போகட்டும்!

இப்பொழுது ஒளிந்திருக்கும் பரங்கியர்களைப் பாருங்கள்..மாற்ற முயற்சிக்கலாம் வாருங்கள்!

ஓகே - சரி
டைம் - நேரம்,மணி 
டே - நாள், கிழமை 
குட் மார்னிங் - வணக்கம் 
பை பை - அப்புறம் பார்க்கலாம், போயிட்டு வரேன்
ப்ரஷ் பண்ணி - பல் துலக்கி 
பக்கெட் - வாளி 
ப்ளேட் - தட்டு 
காலெண்டர் - நாட்காட்டி
ஸ்க்ரீன் - திரைச்சீலை
தேங்க்ஸ் - நன்றி
புக் - புத்தகம்
கிளாக், வாட்ச்  - கடிகாரம் 
ட்ரை - முயற்சி 
டேபிள்- மேசை 
சேர் - நாற்காலி, முக்காலி (தமிழில்தான் முக்காலியும் நாற்காலியும் உண்டு..ஆங்கிலத்தில் சேர் மட்டும்தான்)
செயின் - சங்கிலி, ஆரம் 
பொக்கே - பூங்கொத்து 
கிட்சன்- அடுக்களை, அட்டில் 
பெல் - அழைப்பு மணி , மணி 
ஒன், டூ,த்ரீ.... - ஒன்று, இரண்டு, மூன்று...

இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே இருக்கிறது... அன்றாடம் பேசுவதைத்  தூய தமிழில் மாற்ற முயற்சி செய்தால் எத்தனைப் பரங்கியர் ஒளிந்துள்ளனர் என்று தெரியும்! 

கண்கள் நூறு வேண்டும்- அருவி இளவேனில் காலாண்டிதழில்

 வட அமெரிக்கா தமிழ் சங்க பேரவையின் காலாண்டிதழ் அருவியின் இளவேனில் பதிப்பில் என் கவிதை.  வாசித்து, பிடித்திருக்கிறதா என்று சொல்லுங்களேன்.