ஆழி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆழி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஆழி தந்த அணிகலன்



அலைகள் தாலாட்டும் ஆழி மருங்கில்
அடைந்த கரை வெண் மணலில்
அலைகள் காலை நனைக்க 
அரண்மனை கட்டும் என் தோழி

இது காண், ஆழி தந்த அணிகலன்
இதமாய் வருடும் கொலுசாய்க் கடற்பாசி 
இதழ்கொண்ட பூ அன்ன ஒரு கோடு மெட்டியாய்
இது காண் தோழி! ஆழி தந்த அணிகலன்!


கோடு   - சங்கு.

கண்கள் நூறு வேண்டும்- அருவி இளவேனில் காலாண்டிதழில்

 வட அமெரிக்கா தமிழ் சங்க பேரவையின் காலாண்டிதழ் அருவியின் இளவேனில் பதிப்பில் என் கவிதை.  வாசித்து, பிடித்திருக்கிறதா என்று சொல்லுங்களேன்.