பெருமைமிகு பெண்கள் - வல்லினச்சிறகுகளில் என் பகுதி

 புதுச்சேரி ஒரு துளி கவிதை நிறுவனர் திரு.அமிர்தகணேசன் அவர்கள் உலகப் பெண் கவிஞர் பேரவையை நிறுவியி ருக்கிறார். பெண் கவிஞர்களை ஊக்குவிக்கவும் ஒருங்கிணைக்கவும் அகன் ஐயாவின் முயற்சி இது. இதில் உலகெங்கிலுமிருந்து பெண்கள் இணைந்திருக்கிறார்கள்.  இந்தப் பேரவை சார்பாகப் பெண்களே நடத்தும் வகையில் ஒரு கவிதை மின்னிதழ் வல்லினச்சிறகுகள் என்ற பெயரில் கடந்த செப்டெம்பர் மாதம் தொடங்கப்பட்டது. அகன் ஐயா வழிநடத்துதலில் ஐந்து பெண்கள் ஆசிரியர்களாக இருக்கின்றார்கள். கவிதைகளுடன் நூலறிமுகம் ஒன்றும்,  நேர்காணல்கள் மூன்றும்  உலகப் பெண் கவிஞர் ஒருவரைப்பற்றிய கட்டுரையும் (அன்புச் சகோதரி வலைப்பதிவர் மு.கீதா எழுதுவது, இவர்இதழின் ஆசிரியராகவும் இருக்கிறார்) இடம்பெறும். இதில் 'பெருமைமிகு பெண்கள்' என்ற பகுதியில் சாதனைப் பெண்களை நேர்காணல் செய்து வருகிறேன்.

'பேதையல்ல பெண் மேதை' - மகளிர் நாள் சிறப்புக் கவியரங்கம்

  சுடாக்கோம் தமிழ்ச் சங்கம் - சுவீடன் இலண்டன் தமிழ் வானொலி மற்றும் உலகப் பெண் கவிஞர் பேரவை இணைந்து வழங்கும் "பேதையல்ல பெண் மேதை" ...