ஏறு தழுவல் - கலித்தொகை



"சீறு அரு முன்பினோன் கணிச்சி போல் கோடு சீஇ
ஏறு தொழூஉப் புகுத்தனர் இயைபு உடன் ஒருங்கு
அவ் வழி முழக்கு என இடி என முன் சமத்து ஆர்ப்ப
வழக்கு மாறு கொண்டு வருபு வருபு ஈண்டி
நறையொடு துகள் எழ நல்லவர் அணி நிற்பத்
துறையும் ஆலமும் தொல் வலி மராஅமும்
முறை உளி பராஅய்ப் பாய்ந்தனர் தொழூஉ
..
...
கடாஅக் களிற்றினும் கண்ணஞ்சா ஏற்றை
விடாஅது நீ கொள்குவை ஆயின் படாகை
ஈன்றன ஆய மகள் தோள்

...
....
கொல் ஏறு சாட இருந்தார்க்கு எம் பல் இருங்
கூந்தல் அணை கொடுப்பேம் யாம்"
(முல்லைக்கலி 101)

எளிய தமிழில்:
"சிவனின் கூரிய ஆயுதம்போல் 
சீவிக் கூர்த்தீட்டப்பட்டகொம்புடைய 
ஏறு தழுவப்  புகுந்தனர் இணைந்து 
திடலில் இடிபோல் முழக்கம் எழச்  சவால்  ஏற்று
மணத்தோடு மண்புழுதியும் எழ 
பெண்கள் வரிசையாகச் சுற்றிநிற்க 
துறையும் ஆலும் தொன்மை வலுவுடைக்  கடம்பமும் 
முறையாகத் தொழுதுப் பாய்ந்தனர் 
....
....
 மதம்பிடித்த யானையைவிடச் சீறும் காளையை 
விடாமல் அடக்குவீரானால்  வெற்றிப்பதாகையோடு 
வெல்வீர் ஆயர் மகள் கரம்
....
....
கொல்லும் எருதை அடக்குபவர்க்கு 
அடர்ந்த கருங்கூந்தல் கொண்ட 
எம்பெண்டிரைக் கொடுப்போம் யாம் "

(கொல்லும் ஏறென்று அறிந்தும் அஞ்சாமல் அடக்கப் பாயும் வீரத்தமிழரின் விளையாட்டு ஏறுதழுவல் என்று கலித்தொகைப் பாடல் வரிகளில் அறியலாம்.)

My English translation:

The bull raging with sharpened horns
Like the axe of Sivan
Applause roaring like drums and thunder
Dust arising with fragrance from the fields
They leaped into the arena
After having prayed to the banyan
And ancient oak and the Gods of the shores;
....
...
If you subdue the bull
Fierce than a rutting elephant
You will win victory
With the herder's daughter's hands
...
...
To those who subdue 
The murderous bull
We will give our daughters 
With thick black hair
 
(Knowing that the bull is fierce even to cause death, the men leaped to subdue the bull by embracing its hump. These lines from the classic literature Kaliththokai reveal the bravery and life of ancient Tamils.)

... நான் இங்கு பதியாமல் விட்டவரிகள் 
... Lines I haven't included here

15 கருத்துகள்:

  1. உங்களிடமிருந்து மிகவும் எதிர்ப்பார்த்த பதிவு... நன்றி சகோதரி...

    முனைவர் மு.இளங்கோவன் அய்யா அவர்களின் முந்தைய ஒரு பகிர்வு :-

    muelangovan.blogspot.in/2008/01/blog-post_14.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி அண்ணா. விளக்கி எழுதவேண்டும் என்றே தள்ளிப்போனது. பேஸ்புக்கில் பிஸியாகிட்டேன் :-)

      பார்க்கிறேன் அண்ணா, பகிர்விற்கு நன்றி.

      நீக்கு
  2. நமது பாரம்பரியத்தின் எங்களுக்கு பகிர்த்தமைக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  3. பாரம்பரிய தொகுப்புக்கு நன்றி . மதன்

    பதிலளிநீக்கு
  4. மிகச்சரியான நேரத்தில் மிகவும் அருமையாக விளக்கப்பட்ட ஓர் சங்க இலக்கிய பாடல்! அருமை! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  5. ஏறு தழுவல் (ஜல்லிக்கட்டு) பற்றிய
    தீர்வு கிட்டும் வரை
    எழுச்சி ஓயப்போவதில்லையாம்...

    காலம் பதில் சொல்லுமே!

    பதிலளிநீக்கு
  6. அருமையான பதிவு! நேரத்திற்கேற்ற பதிவு தங்களிடமிருந்து இன்னும் வரவில்லையே என்று நினைகக்வும் செய்தோம்...

    பதிலளிநீக்கு
  7. அழகியகவிதைப்பதிவு.
    -இராயசெல்லப்பாநியூஜெர்சி

    பதிலளிநீக்கு
  8. வணக்கம்

    எங்களின் பரம்பரை வீரக்கலையை இல்லாமல் செய்யும் தீய சக்திகளுக்கு எதிராக வெடிக்கட்டும் புரட்சி வெடிக்கட்டும்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

கிழக்கு பெட்டி ஆமை - கவிதை

   கிழக்கு பெட்டி ஆமை  கடப்பது என்ன அணில் குட்டியா? வேறுபட்டுத் தெரிகிறதே! வண்டியை நிறுத்திவிட்டேன் ஆகா! அணிலில்லை ஆமை! கடக்கட்டும் என நான் ...