வரட்டியை...

படம்:இணையத்திலிருந்து
வயலைத் தரிசாக்குவோம்
மாட்டை அருகச்செய்வோம்
பளபளக்கும் அரிசியோடு
பால்பவுடரையும்

இறக்குமதி செய்வோம்
தொட்டியில் பூவளர்க்க
வரட்டியைக்
காசுகொடுத்து வாங்குவோம்


'cow dung cake '!!??!!

புதியமாதவி அவர்களின் 'பொங்கல் ஆன்லைனில்' பதிவின் தூண்டல். அவர்களுக்கு நன்றி.

23 கருத்துகள்:

 1. தைப் பொங்கல் நன்னாளில்
  அன்பின் இனிய நல்வாழ்த்துகள்!..

  பதிலளிநீக்கு
 2. கடுஞ்சொல் இது தமிழனுக்கு வலிக்க வேண்டும்

  பதிலளிநீக்கு
 3. அருமை! அதுவும் இறுதிவரி! வரட்டியைக் காசுகொடுத்து வாங்குவோம்!! அதுதான் இன்றைய நிலை! வேதனை மிக்க நிலை..நாட்டு மாடுகளைக் காண்பதே அரிதாகிவருகிறது.

  பதிலளிநீக்கு
 4. உண்மைதான் கிரேஸ்... சுவரை இடித்துத் தள்ளிவிட்டு காற்றிலே சித்திரம் வரைய முயல்கிறோம்..

  பதிலளிநீக்கு
 5. துயரத்தை வெளிப்படுத்தும் வரிகள்

  பதிலளிநீக்கு
 6. நீண்ட இடைவெளிக்குப் பின் வந்துட்டேன், இதுவரை நான் ஃபொலோவராக இல்லை அதனால் இந்த புளொக் தெரியாமல் இருந்துது, இப்போ தேடிக் கண்டுபிடித்து ஃபொலோவர் ஆகிட்டனே:).

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஆதிரா. ஃபொலோவர் ஆனது மகிழ்ச்சி :)

   நீக்கு
 7. காலம் மாறுது. கருத்தும் மாறுது. இனிய பொங்கல் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 8. ஆமாம்... வரட்டி கூட இனி அமோசான் விற்றாலும் விற்பான்...


  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. விற்கிறான் சகோ..
   https://www.amazon.com/gp/aw/s/ref=is_s_ss_i_0_9?k=cow+dung+cakes&sprefix=cow+dung+

   இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் சகோ

   நீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

யாழிசை இல்லறம் - ஐங்குறுநூறு 402

  ஐங்குறுநூறு 401 முதல் 410 வரையிலான பாடல்கள் 'செவிலிக் கூற்றுப் பத்து' என்று வகைப்படுத்தப்பட்டுள்ளன. தலைவனும் தலைவியும் திருமணம...