அருள் தாருமே

கடவுளை நினைத்து நான் எழுதியது ...in March 2007

பல்லவி:
அருள் தாருமே  அருள் தாருமே
உம்வழி நடந்திட அருள் தாருமே
அருள் தாருமே அருள் தாருமே
உம்முடன் நடக்க அருள் தாருமே

1.
பள்ளமோ முள்ளோ என்று பயந்திடாமல்
காடோ மேடோ  என்று கலங்கிடாமல்
உம்வழி நடந்திட  உறுதி கொண்டு
உம்முடன் நடக்க அருள் தாருமே

2.
இருளோ ஒளியோ என்று நினையாமல்
திருப்பம் வருமோ என்று அஞ்சிடாமல்
என்னை முழுவதும் உம்மிடம் கொடுத்து
 உம்முடன் நடக்க அருள் தாருமே 

4 கருத்துகள்:

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

வீட்டின் மூலையில் ஒரு சமையலறை - அம்பை

 கொக்கரக்கோ இலக்கிய வட்டம் திங்கள் தோறும் நடத்தும் சிறுகதை பகிர்வு நிகழ்ச்சியில் சாகித்ய அகதெமி விருது பெற்றிருக்கும் எழுத்தாளர் அம்பை அவர்க...