பிப்ரவரி 2, 2024.
'கனவின் இசைக்குறிப்பு'
கவித்துவமான தலைப்பு தன்னில் நிறுத்திப் பல மணித்துளிகளை இசைக்கிறது. இசைத்தட்டை கவனமாகத் திருப்புவது போல முன்னட்டையைத் திறந்தால் 'கனவின் இசைக்குறிப்பு' என்று கவிதைத் தொகுப்பின் தலைப்போடு அன்பு மைதிலியின் பெயரும், கவிஞருடைய இணையர், தமிழ் தந்த என் அண்ணன் திருமிகு. கஸ்தூரிரங்கன், கஸ்தூரி அண்ணா அவர்கள் அறிமுகமானதிலிருந்து நான் அறியும் பெயரும் இலச்சினையும்! அறிமுகமானதே 'மலர்த்தரு' என்ற பெயரிலான வலைத்தளம் வழியாக! அந்த மலர்த்தருவை அழகான இலச்சினையுடன் பதிப்பகமாக வளர்ந்து நிற்பதை முதல் பக்கத்தில் பார்த்து மகிழ்ந்தேன்.முதல் பக்கத்தின் பின்னால் பதிப்பகத் தகவல்களில் மலரும் மகிழ்வும் வசந்தமும் புதுமையும் அழகாக இணைந்திருப்பதே ஒரு கவிதை!
பதிப்புரை உள்ளார்ந்த நன்றியும் போற்றுதலும் கொண்டு தனித்துவமாக அமைந்திருக்கிறது. கவிஞருடைய பால்யத்திலிருந்து அவருடைய தமிழ்க் காதலையும் அறிவையும் திறமையையும் அலசி அவற்றால் அமைந்த உறவுகளையும் நட்புகளையும் ஊக்குபவர்களையும் குறிப்பிட்டுப் பதிப்புரை அமைந்திருப்பது மனம் கவர்கிறது. கஸ்தூரி அண்ணாவிற்கு வணக்கமும் வாழ்த்துகளும்! வலைத்தளம் மூலம் உறவாகிப் போனோர் பட்டியலில் என் பெயரும் பார்ப்பது இனிய அதிர்ச்சி என்றில்லாவிட்டாலும்( ஏனென்றால் அது உண்மை தானே) பூரிப்பாக இருக்கிறது. குறிப்பிடப்பட்டிருக்கும் மற்ற உறவுகளையும் ஊக்கம் தருபவர்களையும் வலைத்தளம் மூலமே நானும் அறிவேன் என்று நினைக்கும் பொழுது மகிழ்ச்சி பன்மடங்காகிறது. கவிதைத் தொகுப்பு தள்ளிப் போனதைப் பற்றி கஸ்தூரி அண்ணா குறிப்பிட்டு இருக்கிறார். இந்த நீண்ட காத்திருப்பு, கவிதைகளின் இனிமையை மிகுதியாக்குகிறது என்பது உண்மை.
கவிதைகளை வாசித்து ஒரு நினைவுத் தாக்கம் ஏற்பட்டால் என்று பதிப்பாசிரியர் குறிப்பிட்டிருக்கின்றார். பதிப்புரையின் தொடக்கத்தில் வலைத்தள குடும்ப உறவுகளை பார்க்கும் பொழுதே உள்ளத்தில் இனிய
நினைவலைகள் - வலைத்தளத்தில் எப்படி அன்பு பரிமாற்றமும் கருத்துப் பரிமாற்றமும் நிகழ்ந்தன, எப்படி இந்த குடும்பம் உருவானது - என்றெல்லாம் இனிமையாக சலசலக்கின்றன.
இந்த நினைவலைகளிலும் பதிப்புரையின் சிறப்பை உள்வாங்குவதிலும் பல மணித் துளிகளை எடுத்துக் கொண்ட பின்னரே கவிதைகளுக்குள் நுழைகிறேன்.
'அப்பா' பாரி மகள் கவிதை போல்!
'நிறைய துடிக்கும் தேநீர்க் கோப்பை' - கவிஞரைச் சந்தித்துப் பிரிந்த அந்தப் பேருந்து நிலைய நிமிடங்கள் கண் முன் வருகின்றன. அன்றும் கூட சற்று மழை தான்!
கவி புனையும் செயல்முறையை சொல்லும் 'சொல் என்னும் மந்திரம்'! காற்றாடி என்னும் சொல்லை நீக்கிய உடன் அறை புழுங்கத்தொடங்குகிறது!! ஆகா!!
வாழ்த்துக்கள் மைதிலி! இதுபோன்ற காத்திரமான கவிதைகளை எங்களுக்குக் கொடுத்துக் கொண்டேயிருங்கள்.
இந்த நினைவலைகளிலும் பதிப்புரையின் சிறப்பை உள்வாங்குவதிலும் பல மணித் துளிகளை எடுத்துக் கொண்ட பின்னரே கவிதைகளுக்குள் நுழைகிறேன்.
- தொடரும்
பிப்ரவரி 2 , மகிழ்வுடன் வாசித்து எழுதத் தொடங்கினேன். அலுவலகத்தில் ஏற்பட்ட ஒரு பணயத்தீ நிரல் (ransomware attack) தாக்குதலால் மூன்று மாதங்கள் இரவு பகல் பாராது பணி செய்து நின்றுபோன அனைத்துப்பணிகளையும் தூக்கி நிறுத்த வேண்டியதாக ஆயிற்று. காலை ஆறரை மணியிலிருந்து இரவு ஒன்றரை இரண்டு என் விடிய விடிய கூட வேலை செய்தபடி ஓடின மூன்று மாதங்கள். அதற்குப் பிறகு சற்று தெளிந்து நிமிர்ந்து இதோ தொடர்கிறேன். என் அன்பு மைதிலி ஒன்றும் நினைக்க மாட்டார், புரிந்து கொள்வார் என்றாலும், எனக்கு, ஆசையுடன் காத்திருந்த நூல் கையில் வந்தவுடன் அதை உடனே பகிர முடியாமல் போனது வருத்தம்.
ஜுலை 14, 2024
தொடக்க கவிதையே பொன்முறுவல் பூத்து அந்த உணர்வைக் கடத்துகிறது. வாழ்க்கை ரசிகை கவிஞர்!
தேநீரை இவர் சொல்வது போல ரசித்து குடித்து இருப்போம் அதை ஒரு இசை என்று மைதிலி இல்லாமல் வேறு எந்தக் கவிஞர் சொல்ல முடியும்!
"உயிர் நனைக்கும்
திரவ நிலை இசை
தேநீர்!"
அடடா!!!
மதுரப் பொழுதுகளின் மயக்கம் - பொங்கித் ததும்பும் மகளின் பாசம் அழகான கவிதையாய் இருக்கிறது எந்தத் தாயும் இதனை உணர முடியும்!
பகிரப்படாத முத்தம் - எப்படிக் கவிஞரே!! விதவிதிறக்க வைக்கும் ஒரு காட்சி, தொலைந்து போன ஒரு முத்தம், இவற்றை இணைக்க முடியும் உங்கள் கவியில் மட்டுமே! அரியணையில் அமர்கிறது உங்கள் கவித்துவம்!
போர்த்தொழில் கவிதை போர்களால் பாதிக்கப்படும் உயிர்களின் நிலையை எண்ணி வருந்தி, பாதிக்கப்படாமல் பாதுகாப்பாக இருந்து கொண்டு போர்களை நடத்துபவர்களைச் கடும் சீற்றத்தில் தாக்குகிறது!
மெர்சல் ஆன போக்குவரத்து இருக்கக்கூடிய கலெக்டர் ரவுண்டானாவைக் கானகமாக்க முடியுமா உங்களால்? கவிஞர் மைதிலியால் மட்டுமே முடியும்!
மத நல்லிணக்கத்தையும் இக்கவிதை பாடுகிறது!
விகடனில் வெளிவந்த போது படித்து வியந்த அருமையான கவிதை 'ஒரு குவளை தாகம்'
'டாலியாதல்' எனும் கவிதை எதார்த்தத்தைப் பாடுகிறது. கேட்கும்பொழுது மனத்தில் உருவாகும் பிம்பங்களும் நேரில் பார்க்கும் பொழுது அவை மாறுபடுவதும் என்று! "எவரது நாட்குறிப்பிலேனும்
இப்படியான டாலியாக இருப்பது
வரம் தான் இல்லையா!!"
அட! ஆமாம்! :-)
'சுடவில்லையா குருதி?' கவிஞரின் சமூக நோக்கு சமூக கேடுகளின் மேல் உண்டாகும் சீற்றத்தை சூடாகத் தருகிறது.
'அவை நெகிழி உதடுகள் '

நாலு பேர் என்ன சொல்லுவாங்க என்பதைப் புறம் தள்ளு. உனக்கு நீ மட்டுமே இருந்தாய், இருக்கிறாய், இருப்பாய் என்று சொல்லும் ஆழமான கவிதை.
"தெரிந்தால் அவர்கள் சிரிக்க மாட்டார்களா?
அவை நெகிழி உதடுகள் மீள்வினைக்குட்பட்டவை"
அவை நெகிழி உதடுகள் மீள்வினைக்குட்பட்டவை"
'அப்பா' பாரி மகள் கவிதை போல்!
"பாலியத்தின் கனவொன்றை
பகிர்ந்து கொண்ட
முற்றம் இருக்கிறது!
என் விரல்களுக்குச் சொடுக்கெடுத்தபடி
விழி மலர ரசித்திருந்த
அப்பாவைத்தான்
காலம் களவாடி விட்டது!"
பகிர்ந்து கொண்ட
முற்றம் இருக்கிறது!
என் விரல்களுக்குச் சொடுக்கெடுத்தபடி
விழி மலர ரசித்திருந்த
அப்பாவைத்தான்
காலம் களவாடி விட்டது!"
'நிறைய துடிக்கும் தேநீர்க் கோப்பை' - கவிஞரைச் சந்தித்துப் பிரிந்த அந்தப் பேருந்து நிலைய நிமிடங்கள் கண் முன் வருகின்றன. அன்றும் கூட சற்று மழை தான்!
கவி புனையும் செயல்முறையை சொல்லும் 'சொல் என்னும் மந்திரம்'! காற்றாடி என்னும் சொல்லை நீக்கிய உடன் அறை புழுங்கத்தொடங்குகிறது!! ஆகா!!
கான் சமைப்போம் எனும் கவிதையில்,
...
அழுது கொண்டேயிருக்க
அவகாசமில்லை எனக்கு
கையிலிருக்கும்
விதைகள் உலர்வதற்குள்
கான் சமைக்க வேண்டும்..
"
மழையை பறிக்காமல் நீரை வீணடிக்காமல் சமூக அக்கறையுடன் செயலாற்ற கவிஞரின் தேன்மிட்டாய் அறிவுரை!
...
அழுது கொண்டேயிருக்க
அவகாசமில்லை எனக்கு
கையிலிருக்கும்
விதைகள் உலர்வதற்குள்
கான் சமைக்க வேண்டும்..
"
மழையை பறிக்காமல் நீரை வீணடிக்காமல் சமூக அக்கறையுடன் செயலாற்ற கவிஞரின் தேன்மிட்டாய் அறிவுரை!
உப்புமாவைத் தான் எப்படி எல்லாம் கேலி செய்கிறோம்.. அதற்குள் இருக்கும் ஆழமான கதை புரிய மைதிலியின் இந்த 'உப்புமா எனும் விடுமுறை' கவிதையைச் சுவைத்தே ஆக வேண்டும்.
தன்னம்பிக்கை, சமூக அக்கறை, சமூகக் கொடுமைகளைச் சாடும் சீற்றம், மக்களின் மனப்போக்கு, அப்பத்தாவின் நினைவுகள், முதலியவற்றை, தேர்ந்தெடுத்த சொற்களில், மிகையில்லாமல் வாசிப்பவர் சிந்தையைச் சுண்டி இழுக்கும் வண்ணம் கவிதைகளாக்கியிருக்கிறார் மைதிலி.
குறிப்பிட்டுச் சொல்ல விளைகிறேன், என்னால் இயலவில்லை. ஏனென்றால் அதற்கு அத்தனைக் கவிதைகளையும் நான் வாசித்து காட்ட வேண்டும். எளிதான பரிந்துரை,' கனவின் இசைக்குறிப்பு' - உங்கள் கைகளில் தவழ வேண்டும், ஒவ்வொரு கவிதையையும் நீங்கள் வாசிக்க வேண்டும். சுவைக்க வேண்டும் உள்வாங்க வேண்டும் என்று நான் சொல்லத் தேவையில்லை ஏனென்றால் அது தானாகவே நிகழ்ந்துவிடும். அப்படிப்பட்ட அருமையான கவிதைகளின் தொகுப்பு 'கனவின் இசைக் குறிப்பு'!
தன்னம்பிக்கை, சமூக அக்கறை, சமூகக் கொடுமைகளைச் சாடும் சீற்றம், மக்களின் மனப்போக்கு, அப்பத்தாவின் நினைவுகள், முதலியவற்றை, தேர்ந்தெடுத்த சொற்களில், மிகையில்லாமல் வாசிப்பவர் சிந்தையைச் சுண்டி இழுக்கும் வண்ணம் கவிதைகளாக்கியிருக்கிறார் மைதிலி.
குறிப்பிட்டுச் சொல்ல விளைகிறேன், என்னால் இயலவில்லை. ஏனென்றால் அதற்கு அத்தனைக் கவிதைகளையும் நான் வாசித்து காட்ட வேண்டும். எளிதான பரிந்துரை,' கனவின் இசைக்குறிப்பு' - உங்கள் கைகளில் தவழ வேண்டும், ஒவ்வொரு கவிதையையும் நீங்கள் வாசிக்க வேண்டும். சுவைக்க வேண்டும் உள்வாங்க வேண்டும் என்று நான் சொல்லத் தேவையில்லை ஏனென்றால் அது தானாகவே நிகழ்ந்துவிடும். அப்படிப்பட்ட அருமையான கவிதைகளின் தொகுப்பு 'கனவின் இசைக் குறிப்பு'!
வாழ்த்துக்கள் மைதிலி! இதுபோன்ற காத்திரமான கவிதைகளை எங்களுக்குக் கொடுத்துக் கொண்டேயிருங்கள்.
நூல் கிடைத்தவுடன் என் மகிழ்வைச்சொல்லும் காணொலி:
https://www.instagram.com/reel/C2pidVvumBT/?igsh=NXJsa2Z1Yng3djVy
மைதிலி கஸ்தூரிரங்கன் அவர்களின் கவிதைத் தொகுப்பு குறித்து உங்கள் பதிவு மூலமே அறிந்தேன். மகிழ்ச்சி. நல்ல கவிஞர். அவருக்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துகள். கவிதை கிடைக்குமிடத்தினையும், வாங்குவதற்கான வழியையும் பதிவில் இணைத்திருக்கலாமே...
பதிலளிநீக்குநல்லதொரு நூல் அறிமுகம். பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
வணக்கம் தோழரே! நலமா?
நீக்குநம் கவிஞர் மைதிலி கஸ்தூரிரங்கன் அவர்களுடைய 'கனவின் இசைக்குறிப்பு' நூலைக் காமன்ஃபோக்சு இணையத்தளத்தில் நீங்கள் வாங்கலாம். இதோ இணைப்பு - https://www.commonfolks.in/books/d/kanavin-isaikkurippu
மிக்க நன்றி வெங்கட் அண்ணா. நீங்கள் சொல்லியிராவிட்டால் நூல் கிடைக்குமிடத்தைச் சொல்லாமல்விட்டதை உணர்ந்திருக்கமாட்டேன். வாழ்த்துகளுக்கு நெஞ்சார்ந்த நன்றி.
நீக்குஇ.பு.ஞானப்பிரகாசன் சகோ, தகவல் பகிர்ந்ததற்கு மிக்க நன்றி.
நீக்குகனவின் இசைக்குறிப்பு குறித்த உங்கள் அறிமுகமும் விமர்சனமும் அருமை. மைதிலியின் கவிதைகள் எப்போதும் என்னை வியப்பில் ஆழ்த்தும். கனமான சொற்களுக்குள், வரிகளுக்குள் கவித்துவம் நிறைந்து தளும்பும். யதார்த்தம் ரசிக்கவைக்கும். அன்பு வாழ்த்துகள் இருவருக்கும்.
பதிலளிநீக்குஉண்மை கீதமஞ்சரி. மனம்நிறை நன்றிகள்.
நீக்குஅகா, அருமை. கவிஞருக்கு வாழ்த்துகள்
பதிலளிநீக்குமிக்க நன்றி அண்ணா
நீக்குஅருமையான மதிப்புரை! ஒவ்வொரு வரியிலும் அன்பு இழைந்தோடுகிறது! கூடவே கவிதை மீதான உங்கள் சுவையும்! கவிதைத்தொகுப்பின் காலத்தாழ்ச்சி படைப்பின் இனிமையைக் கூட்டியிருப்பதாகச் சொன்னீர்கள். அது உங்களுடைய இந்த மதிப்புரைக்கும் பொருந்தும்.
பதிலளிநீக்குமிக்க நன்றி சகோ
நீக்குதலைப்பே கவிதை. இசைபட வாழ்தல் என்றால் இதுதான் போலும்! நீங்கள் எடுத்துக் காட்டி இருக்கும் வரிகள் மற்ற கவிதைகளின் சிறப்பை எடுத்துக் காட்டுகின்றன. மைதிலி கஸ்தூரிரங்கனுக்கு வாழ்த்துகள்.
பதிலளிநீக்குமலர்தரு பதிப்பகமாக வளர்ந்து விட்டதா? வாழ்த்துகள்.
மிக்க நன்றி ஸ்ரீராம்.
நீக்குஆமாம், மலர்தரு பதிப்பகமாக வளர்ந்து சிறப்பாக நூல் மலர்கள் தருகிறது. :)