பூமியும் பூக்குதிங்கே சோலையாக

படம்: நன்றி இணையம்

பண்பாடு பண்பாடு பண்ணிசைத்து நீபாடு
பண்பெல்லாம் சொல்லியேப் பண்ணிசைத்து நீபாடு
நம்மினம் நம்மொழி நம்பெருமை என்றுபாடு
இம்மண்ணின் பெருமை போற்றிநீ  பண்பாடு



இந்நாடும் அந்நாடும் நல்லுறவில் தோள்சேர 
எந்நாளும் மக்களோ  இங்குமங்கும் போய்ச்சேர
பூமியும்  ஒன்றெனப்  பூக்குதிங்கே சோலையாக
இம்மண்ணின் பெருமை போற்றிநீ  பண்பாடு

அன்பொன்றே ஆதாரம்  அறம்போற்றிப்  பண்பாடு
கண்போன்றத் தாய்மொழிக் காலமெலாம் நீபோற்று
கண்ணியம் காத்திடுப்  பெண்களைநீ  மதித்திடு
இம்மண்ணின் பெருமை போற்றிநீ  பண்பாடு

முன்னேறும் உலகில் முதியவரைப் போற்று 
 மண்ணின்றி மரங்களும் கிளைவிடுமோ நீபாடு 
சமூகத்தளம் அழித்திடாமல் விருந்தோம்பல் காத்திடு
இம்மண்ணின் பெருமை போற்றிநீ  பண்பாடு

மாந்தரெல்லாம் இணைந்திட மதவெறி இங்கெதற்கு
காந்தமாய் அன்பிருக்க ஆயுதமும் இங்கெதற்கு
போகுமிடமெலாம் தீமைவிலக்கித் தூய்மைக் காத்திடு
வையத்து மனிதரெல்லாம் உறவினர் எனப்பண்பாடு 

பண்பாடு பண்பாடு பண்ணிசைத்து நீபாடு
பண்பெல்லாம் சொல்லியேப் பண்ணிசைத்து நீபாடு
முன்னேறி உலகையே ஆண்டாலும் மணிமகுடமாய்
இம்மண்ணின் பெருமை போற்றிநீ  பண்பாடு




இப்படைப்பு, “வலைப்பதிவர் திருவிழா-2015” மற்றும் தமிழ்இணையக் கல்விக்கழகம் நடத்தும் “மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015“ இன் ஐந்து வகைகளில் வகை-4 புதுக்கவிதைப் போட்டிக்காகவே (முன்னேறிய உலகில் பண்பாட்டின் தேவை குறித்த புதுக்கவிதை) எழுதப்பட்டது. இது என் சொந்தப் படைப்பு என்றும் இதற்கு முன் எங்கும் வெளியிடப்படவில்லை என்றும் இப்போட்டிக்கான முடிவுகள் வெளிவரும்வரை வேறெங்கும் வெளியிடப்படமாட்டாது என்றும் உறுதி கூறுகின்றேன். 
                                                                                                                -வி.கிரேஸ் பிரதிபா

33 கருத்துகள்:

  1. பண்பாடு மனிதநேயம் புகுத்தும் புதுக்கவிதை அருமை தேனு ! படமும் அழகு பொருத்தமும்.
    வெற்றி பெற என் மனமார வாழ்த்துக்கள் ...!

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் சகோ!! பண்பாடு கவிதை அருமை! வெற்றி பெற வாழ்த்துக்கள் பல!!!

    என்தளம் வந்தமைக்கும் வாழ்த்தியமைக்கும் மிக்க நன்றிகள்!!!

    பதிலளிநீக்கு
  3. "மாந்தரெல்லாம் இணைந்திட மதவெறி இங்கெதற்கு
    காந்தமாய் அன்பிருக்க ஆயுதமும் இங்கெதற்கு" என
    நல்லதொரு கருத்தை அழகாகப் பகிர்ந்தீர்!
    போட்டியில் வெற்றிபெற எனது வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  4. இன்றைய உலகில் பண்பாட்டின் தேவையை அட்டகாசமாக எடுத்துரைக்கும் புதுக்கவிதை. வாழ்த்துக்கள் டியர்!
    **மாந்தரெல்லாம் இணைந்திட மதவெறி இங்கெதற்கு
    காந்தமாய் அன்பிருக்க ஆயுதமும் இங்கெதற்கு
    போகுமிடமெலாம் தீமைவிலக்கித் தூய்மைக் காத்திடு
    வையத்து மனிதரெல்லாம் உறவினர் எனப்பண்பாடு *** அருமை:)

    பதிலளிநீக்கு
  5. நல்ல படைப்பு. வெற்றி பெற வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  6. மெட்டிட்டு பாடலாம் கிரேஸ் அப்படி அழகா வந்திருக்கு. வாழ்த்துக்கள் பா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்க சொன்னா சரிதான்,,இரட்டிப்பு மகிழ்ச்சி தோழி! மிக்க நன்றி சசி

      நீக்கு
  7. பூமியும் ஒன்றெனப் பூக்குதிங்கே சோலையாக
    இம்மண்ணின் பெருமை போற்றிநீ பண்பாடு!..

    அழகு.. அருமை!..

    வாழ்க நலம்!..

    பதிலளிநீக்கு
  8. அருமை சகோ வெற்றி பெற வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  9. மிக அருமை! பரிசு கிடைத்திட இனிய வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  10. அடடாஆரம்பிச்சுட்டாங்க மாலதி.......... நீமட்டுந்தா,துங்குற........................
    நாங்களுஎழுதுவமில்ல.............அருமைய்யா வெற்றிபெறவழ்த்துக்கள்யா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா வாங்க வாங்க உங்கள் படைப்புகளுக்குக் காத்திருக்கிறேன்
      மிக்க நன்றிங்க மாலதி

      நீக்கு
  11. அருமை கிரேஸ்.....

    வெற்றி பெற வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  12. அருமை
    வெற்றி பெற வாழ்த்துக்கள் சகோதரியாரே
    தம +1

    பதிலளிநீக்கு
  13. அருமை கிரேஸ்.. சூப்பர்.. வெற்றி பெற வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  14. அழகான பண்பாடுக்கவி .போட்டியில் வெற்றி வாகைசூட வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  15. மிகவும் அருமை. பரிசு பெற வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  16. அழகான கருத்தாழம் மிக்க வரிகள். போட்டியில் வெற்றி பெற இனிய நல்வாழ்த்துகள் தோழி.

    பதிலளிநீக்கு
  17. அருமை க்ரேஸ்! வெற்றி பெற வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  18. பண்பாடு குறித்து பண்ணிசைத்துப் பாடிய புதுக்கவிதை அருமை.
    இசையோடு கேட்கும் வாய்ப்பிருந்தால் எதனினும் இனிமை

    பதிலளிநீக்கு
  19. வணக்கம்,
    முதலில் மன்னித்துக்கொள்ளுங்கள், நான் எழுதிலே இருந்ததால் பார்க்க தவறிவிட்டேன். அருமையான பா வரிகள்,,
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் தோழி,
      முதலில் மனமார்ந்த நன்றி.
      மன்னிப்பெல்லாம் எதற்கு? தவறொன்றும் இல்லையே..நேரம் கிடைக்கும்பொழுது பார்த்தால் போதும் சகோதரி. மிக்க நன்றி

      நானும் பல படைப்புகளை இனிதான் பார்க்க வேண்டும்.

      நீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பொங்குக பொங்கல்

  பொங்குக இனிய பொங்கல்       பட்டினி மறைய பாரில் பொங்குக இனிய பொங்கல்       போரினி அறுக மண்ணில் பொங்குக இனிய பொங்கல்       படிப்பினில் அழுத்...