Wednesday, September 10, 2014

குறும்பா - 1

இளமஞ்சள் வெயிலில் இரைதேடும் 
இயற்கையின் இன்னிசைப் பறவைகள்

இவள் ஏன் சிலையாய் நிற்கிறாள் என்று
இயம்புகின்றன  இலயித்த என்னைப் பார்த்து

------------------------------------------------------------------------------------------

படித்து முடித்து என்ன செய்யப் போற?
பிடிக்காத கேள்வி!
படித்து முடிப்பது எப்படி?
படிக்கப்  படிக்க ஊறும் கேணி!

------------------------------------------------------------------------------------------
காலாற நடந்தாலும்
காலாட் படையாய்ச் சீறினாலும்
காலம் காத்திருப்பதில்லை - யாருக்கும்!

------------------------------------------------------------------------------------------

50 comments:

 1. ம்..ம்..ம்.. குறும்பாவா வெறும்பாவா. சந்தேகம் யாரை வீட்டுச்சு இல்லடா ம்மா
  அடடா குறும்பாவில குறும்பா எனக்கு இதெல்லாம் இப்பதானே புரியுது. மைதிலி ஒரு பக்கம் நீங்க ஒரு பக்கம் அசத்துங்க அசத்துங்க ! நல்ல கற்பனை அழகோடு ! ரசித்தேன் வாழ்த்துக்கள் தோழி ..!

  ReplyDelete
  Replies
  1. மைதிலியின் இனிய தாக்கம் என்று சொல்லலாம் தோழி. ஏகலைவன் போல தூரத்தில் இருந்து மைதிலியைப் பார்த்துக் கற்றுக்கொண்டேன்.. :)
   மிக்க நன்றி தோழி!

   Delete
  2. இதுதான் கிரேட் கிரேஸ்.
   கவிஞருக்கு முதலில் இந்தப் பண்பாடு முக்கியம்.ஆனால்-
   குறும்பாவோ வெறும்பாவோ னு கேட்பதுதான் சரியில்லை.
   மைதிலியின் தன்னம்பிக்கை உன்னிடம் ஏன் இல்லை?
   கவிதை இன்னும் செதுக்கப்பட வேண்டும். என்றாலும் நன்றாகவே உள்ளது. இந்த வடிவெம் சுண்டக் காய்ச்சிய பால்போல சுவையானது. தலைப்பை அன்புகூர்ந்து மாற்றுக. தொடர்ந்து எழுதிட வேண்டுகிறேன்.

   Delete
  3. மிக்க நன்றி அண்ணா. விளையாட்டாக வைத்த தலைப்பு அண்ணா, மாற்றிவிட்டேன். அட, ஆமாம், குறும்பா சுண்டக் காய்ச்சிய பால் தான், அருமை அண்ணா. :)

   Delete
  4. நன்றி டியர்! you made my day!!!

   Delete
 2. குறும்பாவாயிருந்தாலும் அத்தனையும் இனிமை!

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சியுடன் நன்றிம்மா..

   Delete
 3. என்ன ஒரு அழகு தங்கள் சிந்தனையில் !!!  சுப்பு தாத்தா.
  www.subbuthatha72.blogspot.com

  ReplyDelete
  Replies
  1. வாங்க சுப்பு தாத்தா..உங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி, நலம்தானே?
   உங்கள் கருத்திற்கு உளமார்ந்த நன்றி

   Delete
 4. மனம் வருடும் தென்றலாக -
  இன்தமிழில் வார்த்தெடுக்கப்பட்ட கவிதை!..

  நலம் வாழ்க!..

  ReplyDelete
 5. வெறும்பா எனவே விளம்புவதோ வீணே!
  நறும்பா! கரும்பேதான் நன்று!

  நல்ல பொருள் நயமிக்க குறும்பாக்கள்!

  மிக அருமை! வாழ்த்துக்கள் தோழி!

  ReplyDelete
 6. கவிதை கரும்பாகவும், குறும்பாகவும் இ(னி)ருக்கிறது.....

  ReplyDelete
 7. மூன்றும் மிக அருமையான முத்துக்கள்

  ReplyDelete
 8. படித்து முடித்து என்ன செய்யப் போற?
  கிழிக்க போறேன்
  அப்ப ஏன் படித்து கஷ்டப்படுறே
  அதை படிக்கும் முன்பே செய்துவிடேன்

  ReplyDelete
  Replies
  1. ஹாஹா சரிதான்..ஆனா அதுல நமக்கு யாராவது சொத்து எழுதி வச்சிருந்தா? :)

   Delete
 9. அடடா! குறும்பா ஒட்டுவார் ஒட்டியா?! :-) But I am immune to that for sure! :) கொஞ்சமாவது "கவிமனம்" இருந்தால்த்தானே ஒட்டும்? :)

  --------------

  1) "இலயித்த"னா என்ன அர்த்தம், கிரேஸ்?

  2) ஆமா, படிச்சு எங்கே முடிக்க? கேள்வியே தப்பு! :)

  படிப்பு -> பதவி -> பணம்-> படுகுழி னு போகாமல் படித்துக்கொண்டே இருப்பது நலம்தான். :)

  ------------

  காலத்தோட சேர்ந்து அதே வேகத்திற்கு நம்மளும் ஓடினால் என்ன? :) It is lot of fun and a good exercise too! :)

  ---------------

  அர்த்தங்கள் நிறைந்த குறும்பாக்களை, வெறும்பானு சொன்னால் தமிழ்த்தாய் கோவிச்சுக்க மாட்டாளோ? இது தாய்க்கும் மகளுக்கும் இடையே உள்ள பிரச்சினை நீ என்ன இடையில் என்கிறாள் தமிழ்த்தாய் என்னைப் பார்த்து! :))) Take it easy Grace!

  Nice work!

  ReplyDelete
  Replies
  1. அது நீங்கள் அறியாமலே தொற்றிக்கொள்ளும் வருண்..
   1. 'இலயித்த' என்றால் 'தன்னை மறந்து ஒன்றில் ஈர்க்கப்பட்டு' என்று சொல்லலாம்..இன்னும் எளிதாச் சொல்லனும்னா, காலையில் பால்கனியில் நின்று மஞ்சள் வெயிலையும் பறக்கும் பறவைகளையும் இருக்கும் வேலைகளை மறந்து பார்த்துக் கொண்டிருந்தேன் :) சில நாட்கள் அப்படி அமையும்.
   2. 'கேள்வியே தப்பு!' - அட, ஆமாம். பிடிக்காத கேள்வி என்பதற்குப் பதிலாய்த் தப்பான கேள்வி என்றே போட்டிருக்கலாமோ?
   ஆமாம், படித்துக் கொண்டே இருப்பது எவ்வளவு இனிமை..பள்ளியில் படித்த காலத்தை விட இப்பொழுது ஈடுபாடு அதிகமாகிவிட்டது என்பதே உண்மை! காலத்தோடு ஓட ஆசைதான், முடியலையே வருண்.
   //அர்த்தங்கள் நிறைந்த குறும்பாக்களை// மிக்க நன்றி வருண். பிரச்சினை என்றால் தோழமைகள் உதவ வரும் என்று தமிழ்த்தாயிடம் சொல்லிவிடுவோம் :) மீண்டும் நன்றி!

   Delete
  2. **கவிமனம்**
   தப்பா எடுக்கலேன்னா ஒன்னு சொல்றேன் வருண்.
   கவி என்பதற்கு தமிழில் குரங்கு என்றொரு பொருள் உண்டு. உங்களுக்கு கவிமனம் இல்லேன்னா சந்தோசம் தானே:)))

   Delete
  3. ஆகா! இப்படி ஒரு பொருள் இருக்கா? :)

   Delete
 10. அருமை! ஒவ்வொன்றும் இனிமை! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 11. தமிழ் தேனாய் உங்களிடம் ...வாழ்த்துகள் நல்ல முயற்சிம்மா..

  ReplyDelete
 12. மூன்றுமே அழகிய பாக்கள்!

  குறும்பாக்கள் வெறும்பாக்கள் அல்ல! கரும்பாக்கள்!

  ReplyDelete
 13. மூன்றிலும் நிறையான சுவை..... பாராட்டுகள்.

  ReplyDelete
 14. குறும்பல்ல கரும்பு.அருமை.

  ReplyDelete
 15. படிப்பு என்றும் முடிவதில்லை
  இறுதிப் பயணம் வரை
  தொடரும் உறவல்லவா
  அருமை சகோதரியாரே
  தம 5

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் , இறுதி வரை தொடரும் உறவே, படிப்பு!
   நன்றி சகோதரரே!

   Delete
 16. அருமை கிரேஸ். எல்லாம் நச்சுனு இருக்கு . இது குறும்பா இல்லை பெரும்பா :)

  ReplyDelete
 17. நான்கடி வீச்சில் கதையிருக்க
  ஐந்தாமடி மூச்சில் முடிவிருக்க
  குறும்பை வெளிக்கொணரும் பா
  குறும்பா (லிமரிக்) என்போம்.
  அடிகள் குறுகினாலும் குறும்பா
  ஆனாலும்
  கிரேஸ் அவர்களின் பா
  வெறும்பா அல்ல
  நறுக்காக நல்லது கூறுதே!

  ReplyDelete
  Replies
  1. உங்கள் இனிய கருத்திற்கு உளமார்ந்த நன்றி ஐயா

   Delete
 18. இப்படி ஒரு தலைப்பை உங்க ப்ளாக் ல பார்க்கிறதே ரொம்ப சந்தோசம் டியர் . இது நம் நட்புக்கு அழகு சேர்க்கிறது :))) கவிதை நல்ல தொடக்கம் டியர்:)) தொடருங்கள் நம் நட்போடு குரும்பாக்காளையும்:))

  ReplyDelete
  Replies
  1. ரொம்ப மகிழ்ச்சி டியர்..நம் நட்பினால் வந்த குறும்பா நட்பிற்கு அழகு சேர்க்கத்தானே வேண்டும்? கண்டிப்பாகத் தொடர்கிறேன். குறும்பாக்களையும் நீண்ட முடிவில்லா நட்பினையும் :) நன்றி டியர்

   Delete
 19. குறும்பா அருமை...
  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி

   Delete
 20. குறும்பா...கரும்பா...
  வாழ்த்துக்கள் பா.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி தோழி

   Delete
 21. அன்புடையீர்..
  விருது ஒன்றினைத் தங்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.
  இணைப்பு - http://thanjavur14.blogspot.com/2014/09/blog-post84-blog-award.html

  ReplyDelete
 22. எனக்கு கிடைத்த விருதினை தங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளேன்! காண இங்கு செல்லவும்! வாழ்த்துக்கள்! http://thalirssb.blogspot.com/2014/09/blogger-award-14-9-14.html

  ReplyDelete
  Replies
  1. நன்றி சகோ..துரை செல்வராஜு ஐயா அவர்களும் எனக்கு அளித்திருந்தார்கள். உங்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டிருப்பதையும் பார்த்தேன்..

   Delete

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...