அறம் செய்ய விரும்பு

ஆலன் பள்ளியில் ஒரு நாள் மகிழ்வுலா ஏற்பாடு செய்திருந்தனர். ஆலன் மிகுந்த மகிழ்ச்சியுடன் தயாரானான். அம்மா செய்து கொடுத்த ஆலூப் பராத்தா, வாழைப்பழம் மற்றும் தண்ணீர் பாட்டிலுடன் கிளம்பி விட்டான். அவர்கள் சென்றது ஒரு பூங்கா. பல வண்ண மலர்களையும் செடி கொடிகளையும் பார்த்துக் களித்தனர். செடிகளை மயில், யானை போலவெல்லாம் வடிவாய் வெட்டி அழகு செய்திருந்தனர். அதைப் பார்த்து வியந்து மகிழ்ந்தனர் குழந்தைகள். பிறகு சாப்பிடும் நேரம் வந்தபொழுது ஆசிரியர் குழந்தைகளைப் புல்வெளியில் வட்டமாக அமரச்செய்தார். ஆலனும் அமர்ந்து தன்னுடையச் சாப்பாட்டை எடுத்தான். அப்பொழுது அருகிலிருந்த மரத்தின் பின்னிருந்து பார்த்துக் கொண்டிருந்த ஒரு சிறுவனைப் பார்த்தான். அவன் பசியோடு அனைவரது சாப்பாட்டையும் பார்த்துக் கொண்டிருந்தான். ஆலன் ஆசிரியரிடம் சென்று, "அறம் செய்ய விரும்புன்னு படித்தோமே, அவனை கூப்பிடட்டுமா?" என்று கேட்டான். ஆசிரியரும் பெருமையுடன் அனுமதி கொடுத்தார். ஆலன் அந்தச் சிறுவனை அழைத்தான்.  பயந்து கொண்டே வந்த அந்தச் சிறுவனையும் அமரச் செய்து பாதி பராத்தாவும், பாதி பழமும் கொடுத்தான். பள்ளியில் புரியாமலிருந்த சில பிள்ளைகளும் "ஒ இதுதான் அறம் செய்ய விரும்புறதா?" அப்படின்னு புரிந்து கொண்டார்கள். பிறகு அனைவரும் புல்வெளியில் விளையாடி விட்டுக் கிளம்பினர். மகிழ்வுலா மிகுந்த மகிழ்ச்சியுடன் பயனுள்ளதாகவும் அமைந்தது.

10 கருத்துகள்:

  1. சுருங்க சொல்லி,'அறம் செய்ய விரும்பு' என்ற ஆத்திச்சூடி கூற்றை சிறப்பாக விளக்கி இருக்கிறிங்க கிரேஸ். சிறு வயதில் தினதந்தியில் படித்த சிறுவர் மலர் கதைகள் ஞாபகத்திற்கு வருகின்றன!!.

    அப்புறம் இந்த கதையை விரைவில் ஹேனி நிஜமாக்குவான் என்பதில் எனக்கு எந்த ஐயப்பாடுமில்லை :-).

    பதிலளிநீக்கு
  2. இந்த "ஆறாம் செய்ய விரும்பு" ஆத்திச்சூடியை எங்களின் பாலர் வகுப்பு குழந்தைகளுக்கு, அந்த வகுப்பு ஆசிரியை சொல்லிக்கொடுத்திருக்கிறார். அவர் தங்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கச் சொன்னார்.
    நன்றி சகோதரி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க மகிழ்ச்சி சகோதரரே.. இன்னும் எழுதத் தூண்டுகிறது.
      உங்களுக்கும் அந்த ஆசிரியைக்கும் நன்றி!

      நீக்கு
  3. வணக்கம்


    இன்றைய வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்


    அறிமுகப்படுத்தியவர்-தியானாபூந்தளிர்


    பார்வையிடமுகவரி-வலைச்சரம்




    -நன்றி-

    -அன்புடன்-

    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  4. சிறுவர்களுக்கும் புரியும் வண்ணம் எளிய நடையில் எழுதப்பட்ட கதை. வாழ்த்துக்கள் மகளே.

    பதிலளிநீக்கு
  5. சிறுவர்களுக்கும் புரியும் வண்ணம் எளிய நடையில் எழுதப்பட்ட கதை. வாழ்த்துக்கள் மகளே.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

கிழக்கு பெட்டி ஆமை - கவிதை

   கிழக்கு பெட்டி ஆமை  கடப்பது என்ன அணில் குட்டியா? வேறுபட்டுத் தெரிகிறதே! வண்டியை நிறுத்திவிட்டேன் ஆகா! அணிலில்லை ஆமை! கடக்கட்டும் என நான் ...