| படம்: நன்றி இணையம் |
"நாம்பே சுமொழி தமிழ் மொழி!
நாமெல்லாரும் தமிழர்கள்!
மாம் பழம் அடடா! மாம் பழம்
வாய்க் கினிக்கும் தமிழ் மொழி!
தீம்பால் செந்தேன் தமிழ் மொழி!
செங்க ரும்பே தமிழ் மொழி!
நாம்பே சுமொழி தமிழ் மொழி!
நாமெல்லாரும் தமிழர்கள்!
நாம்பே சுமொழி தமிழ் மொழி!
நமது நாடு தமிழ் நாடு!
காம்பில் மணக்கும் மல்லிகை
காதில் மணக்கும் தமிழ் மொழி!
வேம்பா நஞ்சா தமிழ்மொழி?
விரும்பிக் கற்பது தமிழ் மொழி!
நாம்பே சுமொழி தமிழ் மொழி!
நமது நாடு தமிழ் நாடு!"
தமிழ்மொழி தமிழ்நாடு
என்றே இக்கவி படைத்த
பாவேந்தரே பாரதிதாசனே
நின் புகழ் மேலும் சிறக்க
நின் பாடல் பலரும் அறிய
நின்னையும் தமிழையும்
நிறைவாய் உலகம் போற்ற சென்னையில்
நிறுவிட வேண்டுமே மணிமண்டபம்
நினைக்க வேண்டுமே அரசும்
நின் நூற்றி இருபதாவது நினைவாண்டில்(2015)
நிறைவேறட்டுமே இந்த விருப்பமே!
நம் மொழியை நம் கவிஞரை
நம் சிறப்பை நம் பெருமையை
நாம் போற்றாமல் யார் போற்றுவார்?
நாம் பரப்பாமல் யார் பரப்புவார்?
நாமனைவரும் இணைந்திடுவோம்
நாடாள்வோருக்குச் சொல்லிடுவோம்
பாவேந்தரின் திருப்புதல்வரைச் சந்தித்த கரந்தை தமிழ்ச்சங்கப் பேராசிரியரின் அருமையான பதிவை இங்கே சென்று பாருங்கள்! நன்றி!