எலுமிச்சை தேநீர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எலுமிச்சை தேநீர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

தேநீர் குடிக்கலாம் வாங்க...


"வாங்க தேநீர் சாப்பிடலாம்" இது 1950களுக்கு அப்புறம் தான் மிகப் பிரபலம் ஆனதாகப் படித்தேன். அதற்கு முன்னர் மருத்துவ பலன்களுக்காக தேநீர் பயன்படுத்தப்பட்டது போல. அதிலும் பல வகை மூலிகைச் செடிகள் பயன்படுத்தப்பட்டன - அதுதான் கஷாயமோ? ஆங்கிலேயர் வருகைக்குப் பின் தேனீர் தோட்டங்கள் அதிகமாக்கப்பட்டன. இன்று தேயிலை என்று சொல்லப்படும் செடிகள் பிரபலமானது ஆங்கிலேயரால். இந்தியத் தேநீர் வாரியம் 1950ல் ஏற்படுத்தப்பட்டு தேநீர் விளம்பரம் ஆரம்பித்ததாம். இந்தியாவில் விளைவிக்கப்படும் தேயிலையில் 70% இந்தியாவிலேயே நுகரப்படுகிரதாம்.
ஆமாம் அதிலென்ன அதிசயம் இருக்கப் போகிறது..

இரு நண்பர்கள் சந்தித்தால் தேநீர்
தேநீர் வேண்டுமென்றால் நண்பர்கள் சந்திப்பு;

வேலை அதிகமா? களைப்பு  நீங்க தேநீர்!
வேலை இல்லையா? பொழுது போக தேநீர்!

படிக்க வேண்டுமா? தேநீர்!
படம் பார்க்க வேண்டுமா? தேநீர்!

விழித்திருக்க வேண்டுமா? தேநீர்!
உறக்கம் வரவில்லையா? தேநீர்!

காலை 6 அல்லது 7 மணியா? தேநீர்!
மாலை 4 அல்லது 5 மணியா? தேநீர்!

சிந்திக்க வேண்டுமா? தேநீர்!
சிரிக்க வேண்டுமா? தேநீர்!

கோபம் தணிக்க தேநீர்!
உபசரிக்க வேண்டுமா? தேநீர்!

....

அட போதும், நிறுத்திக் கொள்கிறேன், பட்டியல் நீளமாகப் போகிறது!
உணவு இல்லாவிட்டாலும் பரவாயில்லை போல, தேநீர் இல்லாமலா? இப்படி இருந்தால் விளையும் தேநீரில் 70% என்ன 100% நாமே குடித்துவிடலாம். ஆனால் எனக்கு ஒரு விசயம் புரியவில்லை. நம்ம ஊரில் தேநீர் அறிமுகப்படுத்திவிட்டு இன்று உலகமெல்லாம் பல வித ருசிகளில் தேநீர்! எலுமிச்சை தேநீர், இஞ்சி தேநீர் என்று.  இஞ்சி தேநீர் எப்படி செய்ய வேண்டுமாம் என்று கேட்டால், நறுக்கிய இஞ்சித் துண்டுகளை  நீரில் போட்டுக் கொதிக்கவைத்து பின்னர் தேன் சேர்த்து குடிக்கவாம்!! அட அது நம்ம கஷாயம் இல்லிங்களா?
சரி, எலுமிச்சைத் தேநீர் எப்படிங்க செய்றதுனு கேட்டால், தண்ணீரைக் கொதிக்கவைத்து எலுமிச்சை சாறு சேர்த்து தேனும் கலந்து குடிக்கவாம்!!
ஆனால் நம்ம ஊருல எல்லாத்துக்கும் தேயிலையை நீரில் போட்டு கொதிக்கவைத்து எழுமிச்சையோ, இஞ்சியோ, தேனோ சேர்த்து பாலும் சேர்த்து..எனக்கு ஒரே குழப்பம் போங்க...அதோட தேநீர் ஆராய்ச்சிய விட்டுடலாம்..

ஆமாம், நம்ம காளமேகப் புலவரு பாடின மோரு என்னங்க ஆச்சு? வந்தவனுக்கு மோரக் குடுத்துப் பழக்காம, அவன் கொண்டுவந்தத நல்லாப் பழகிக்கிட்டோமே! சரிங்க, ரொம்ப யோசிச்சு...

தேநீர் சாப்பிடலாம் வாங்க! :)

கண்கள் நூறு வேண்டும்- அருவி இளவேனில் காலாண்டிதழில்

 வட அமெரிக்கா தமிழ் சங்க பேரவையின் காலாண்டிதழ் அருவியின் இளவேனில் பதிப்பில் என் கவிதை.  வாசித்து, பிடித்திருக்கிறதா என்று சொல்லுங்களேன்.