கணினி அறிவியல் தமிழ் சான்றிதழ் படிப்பு - தமிழ்நாடு தமிழ்ச் சங்கம், கம்பன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி திருவண்ணாமலை, நெதர்லாந்து சூரியத்தமிழ்த் தொலைக்காட்சி இணைந்து நடத்தும் தொடர் வகுப்புகளில், ’செயற்கை நுண்ணறிவு மற்றும் இயற்கை மொழி செயலாக்கம்’ எனும் தலைப்பில், தமிழ் இலக்கியம் பயிலும் மாணவிகளுக்கு ஜனவரி 12ஆம் நாள் உரையாற்றினேன்.
கணினி படிப்பு முதன்மைப் பாடமாக இல்லாதோர்க்கு ஓர் அறிமுக உரையாகப் பேச விரும்பினேன். ஆழ்ந்து சென்று அச்சுறுத்தக் கூடாது, பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்கிற எண்ணம் மேலோங்கி இருந்தது. அதனை மனத்தில் கொண்டு தயார் செய்தது பயனுள்ளதாக அமைந்திருக்கும் என்று நம்புகிறேன். எனக்கு இந்த வாய்ப்பையளித்த பெங்களூரு தமிழ்ச்சங்கத்தைச் சேர்ந்த தோழி தேன்மொழிக்கு என் நன்றிகள்.நிகழ்வின் இணைப்பு:
https://www.youtube.com/live/dSNROBtQ98I
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...