முன்னேறிச்செல்ல வேண்டிய காலத்தில் அடிப்படைக் கல்விக்குப் போராடவேண்டிய நிலை

"கல்வியறிவு என்பது, பொதுவான கற்பித்தலுடன் சேர்த்து எங்கும், அனைவருக்கும் அடிப்படை மனித உரிமையாகும்." - கோபி அன்னான்

அனைவருக்கும் தேவை இல்லை என்ற யதேச்சதிகாரம் அல்லவா தெரிகிறது??




 "அடிப்படைக் கல்வி குழந்தைகளை, கிராமப்புறத்திலிருந்தாலும் நகர்ப்புறத்திலிருந்தாலும், இந்தியாவின் சிறந்து நிலைத்திருக்கும் அனைத்திலும் இணைக்கும்." - மகாத்மா காந்தி 

கிராமப்புறக் குழந்தைகளை ஏழைக் குழந்தைகளை ஒதுக்கிவிடுவதல்லவா நடக்கிறது!!!

"ஒரு குழந்தை, ஓர் ஆசிரியர், ஒரு நூல், ஒரு பேனா, உலகையே மாற்றவல்லது" -மலாலா 

ஓர் ஆசிரியர் பள்ளியை மூடுகிறார்களாம், ஒரு குழந்தை அல்ல, பல குழந்தைகள் அவரை நம்பியிருந்தாலும்!!!!


அடிப்படைக் கல்வியின் அவசியத்தை சாமானியன், கல்விக்கண் திறந்த காமராசர், இந்தியாவின் தந்தை,  ஐக்கியநாடுகளின் ஒரு தலைவர், அண்டை நாட்டின் கல்விக்காக உயிரையும் கொடுக்கவிருந்த ஒரு பெண், என்று பலர் சொன்னாலும் ஒரு சிலர் புரிந்து கொள்ள மாட்டார்களா?

புரிதலில் அல்ல பிரச்சனை. எதிர்மாறான கொள்கை கொண்டிருப்பதே பிரச்சனை!!

குடிமக்களே! பொதுமக்களே புரிந்ததா? குரல் எழுப்பாவிட்டால் குரலே இல்லாமல் போய்விடும்.


"உலகமே மவுனித்திருக்கும் பொழுது எழும்பும் ஒரு குரலும் வலிமை வாய்ந்தது" -மலாலா 


3 கருத்துகள்:

  1. // குரல் எழுப்பாவிட்டால் குரலே இல்லாமல் போய் விடும்//
    சரியான வார்த்தை தோழர்.இரத்தின சுருக்கமாக அருமையாக எழுதியுள்ளீர்கள்.

    பதிலளிநீக்கு
  2. அஸ்திவாரம் தேவையில்லை என்கிறது இன்றைய அரசு... விரைவில் அஸ்தியாகப் போகிறோம் என்பது தெரியாமல், அதை ஆதரிக்கிறார்கள் மாட்டு மூளைக்காரர்கள்...

    பதிலளிநீக்கு
  3. நல்ல வாசகங்கள்! கல்வி பற்றி..

    கீதா

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

கிழக்கு பெட்டி ஆமை - கவிதை

   கிழக்கு பெட்டி ஆமை  கடப்பது என்ன அணில் குட்டியா? வேறுபட்டுத் தெரிகிறதே! வண்டியை நிறுத்திவிட்டேன் ஆகா! அணிலில்லை ஆமை! கடக்கட்டும் என நான் ...