
இதையும் அதையும் குறித்து
பச்சை மரத்தில் தொங்கவிட
பதமாய் வீட்டில் ஆபரணம் செய்து
பனி வேண்டும் இங்கே என்று
பனித் துளிகள் செய்தோம் காகிதத்தில்

முன்னாடியே செய்வது எது
முதல்நாள் செய்வது எது
நானாகச் செய்வது எது
நான் பெற்றவர் செய்வது எது
குடில் வைப்பது எங்கே
குழந்தைகள் விளையாடுவது எங்கே
இதைச் செய்து விட்டோமே
இன்னும் எதைச் செய்யலாம்
இப்படிப் பல திட்டங்கள்
இப்படிப் பல கிளர்ச்சிகள்
இனிதாக வருகிறது அருகில் ஒரு தினம்
இன்பம் தரும் கிறிஸ்து பிறப்பு தினம்