வருக இனிய தமிழ் புத்தாண்டே!

பனிவிடைபெற இளவேனில் தாலாட்ட
பழையன புதுப்பொழிவு பெற
புதியன இனிதாய் மலர
வருக புத்தாண்டே!

வண்ணமலர்கள் அசைந்தாட தும்பி ரீங்காரமிட
குருவிபல இன்னிசை எழுப்ப
மாந்தர்தம் மனம் பூரிக்க
வருக புத்தாண்டே!

வீடும் நாடும் செழிக்க
மகிழ்ச்சியும் சமாதானமும் பெருக
உள்ளங்கள் உவகை கொள்ள
வருக புத்தாண்டே!

தேன்மதுர தமிழ் தித்திக்க
எட்டுத்திக்கும் செந்தமிழ் கமழ
தமிழும் தமிழரும் வளம்பெற
வருக எம் இனிய புத்தாண்டே!

1 கருத்து:

  1. அற்புதமான பாடல் கிரேஸ். இந்த புத்தாண்டு உங்களுக்கு எல்லா நலன்களையும், வளங்களையும் தரட்டும் :)

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

வீட்டின் மூலையில் ஒரு சமையலறை - அம்பை

 கொக்கரக்கோ இலக்கிய வட்டம் திங்கள் தோறும் நடத்தும் சிறுகதை பகிர்வு நிகழ்ச்சியில் சாகித்ய அகதெமி விருது பெற்றிருக்கும் எழுத்தாளர் அம்பை அவர்க...