தினமணி எடிட்டர் கலாரசிகன் அவர்கள், இன்று தினமணியில் என் கவிதைத் தொகுப்பைப் பற்றி எழுதியிருப்பதை .....தினமணி ஆசிரியருக்கு நன்றியுடன் இங்கு பகிர்கிறேன்.
"நூல் மதிப்புரைக்கு வி. கிரேஸ் பிரதிபா எழுதிய "துளிர் விடும் விதைகள்' என்கிற கவிதைத் தொகுப்பு வந்திருந்தது. அதற்கு முன்னுரை எழுதியிருக்கும் புதுக்கோட்டை நா. முத்துநிலவன், 1965-ஆம் ஆண்டிலிருந்து இந்திய அளவில் இலக்கியத்திற்காகத் தரப்படும் உயர்ந்த விருதான "ஞான பீடம்' விருதை, 1965, 1980, 1984, 1995, 2007 என 5 முறை மலையாளமும், 1970, 1988, 2012 என மூன்று முறை தெலுங்கும், 1967, 1973, 1977, 1983, 1990, 1994, 1998, 2010 என எட்டு முறை கன்னடமும் பெற்றிருக்க, தமிழ் இதுவரை இரண்டு தடவைதான் பெற்றிருக்கிறது என்று குறிப்பிட்டிருந்தது மனதை வருத்தியது.
அவர் குறிப்பிடுவதுபோல, தமிழில் பெயர்கள் வைத்துக் கொள்வதிலும், தமிழினம் பற்றி வாய் கிழியப் பேசுவதிலும் காட்டும் ஆர்வத்தை, நாம் மொழி வளர்ச்சியில் காட்டுவதில்லை. தமிழில் இருக்கும் அளவுக்கு மொழிக் கலப்பும், ஆங்கில மோகமும் பிற மொழியினரிடம் இல்லை. வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுக்கு இருக்கும் மொழிப்பற்று நமக்கு இருக்கிறதா என்பதுகூட சந்தேகம்தான்.
2009-இல் வலைப் பக்கத்தைத் தொடங்கி ஆங்கிலத்தில் எழுதத் தொடங்கி, 2012 முதல் தமிழில் தொடர்ந்து எழுதி வரும் கிரேஸ் பிரதிபாவின் மொழிப்பற்றும், சமுதாய நோக்கும் பாராட்டுக்குரியவை. புத்தகத்தின் அட்டையை வடிவமைத்திருப்பது அவருடைய கணவர் ஆல்பர்ட் வினோத் என்று குறிப்பிடுகிறார். முகப்பே கவித்துவமாக இருக்கிறது.
"கையெழுத்தை...' என்றொரு நாலுவரிக் கவிதை. பகிர்ந்து கொள்கிறேன், படியுங்கள்.
அஞ்சல் ஆவணம்
அனைத்தும் கணினியில்
தொலைத்து விட்டேனே
கையெழுத்தை!"
திரு.முத்துநிலவன் அண்ணாவின் பகிர்வுக்கு, இந்த இணைப்பைப் பார்க்கவும்.
தினமணி இணைய இதழ் இணைப்பிற்கு:
http://www.dinamani.com/…/%E0%AE%87%E0%A…/article2514962.ece
http://www.dinamani.com/…/%E0%AE%87%E0%A…/article2514962.ece
வாழ்த்துக்கள் கிரேஸ் !!
பதிலளிநீக்குநன்றி ஏஞ்சல்.
நீக்குஅட! எவ்வளவு வேலைப்பளுவிலும் டியர் கலக்குறாங்களே!!!!
பதிலளிநீக்குபடித்தேன் டியர்!!! இன்னும் பலபல சாதனைகள் தோழி புரியவேண்டும்!!!
ப்ரீ ஆனவுடன் சொல்லுங்க, உங்களுக்கு ஒரு ட்ரீட் தரேன்:))
இப்போ ரொம்ப வேலையில்லை டியர்..வீட்டிற்குச் சென்றவுடன் தான் அதிகம் இருக்கும்..
நீக்குமிக்க நன்றி டியர்..
ஹைய்!! ட்ரீட்!! அதுக்கு நான் எப்போவும் ப்ரீ தான் :))
அப்போ நாளைக்கு மகிழ்நிறைக்கு வாங்க!!
நீக்குதினமணி இணைப்பைப் படித்தேன், மிக்க மகிழ்ச்சி.... வாழ்த்துக்கள்....
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் சகோதரி...
பதிலளிநீக்குவாழ்த்துகள்!
பதிலளிநீக்குகலக்கறீங்க கிரேஸ் வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குநன்றி எழில்
நீக்குவாழ்த்துகள் தொடரட்டும்.
பதிலளிநீக்குவணக்கம்
பதிலளிநீக்குசகோதரி
பார்த்தவுடன் மகிழ்ச்சிதான் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம் சகோ, மிக்க நன்றி
நீக்குசகோதரி எப்போது இணைத்து வந்தீர்கள்!
பதிலளிநீக்குபல பதிவுகளை இட்டிருப்பீர்கள் போல!
குறைந்தது ஒரு மாதமாவது ஆகும் என்றல்லவா நினைத்தேன்!
அதுதான் பாருங்கள்..
தமிழ்படித்தாலே இப்படித்தான்!
ஆம் நம்மைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டும்.
தங்களின் நூல் குறித்து எழுதவேண்டும் என்று நினைத்துக் கொண்டே இருக்கிறேன்.
நினைத்துக் கொண்டே!
பிற பதிவுகளையும் பார்க்கிறேன்.
நன்றி
த ம 3
இணைத்து என்பதை இணையத்து என்று திருத்திப் படிக்க வேண்டுகிறேன்.
நீக்குபிழைக்கு வருந்துகிறேன்.
வணக்கம் அண்ணா..ஹோட்டலில் இருப்பதால் நேரம் கிடைக்கும்பொழுது இணையம் வருவதைத் தவிர வேறு வேலையில்லை.
நீக்குநேரம் கிடைக்கும்பொழுது எழுதுங்கள் அண்ணா, ஒரு அவசரமும் இல்லை. நன்றி அண்ணா..
அப்படியே படித்தேன் அண்ணா..தட்டச்சுப் பிழை அனைவர்க்கும் வருவதே :)
நீக்குசகோதரிக்கு, வணக்கங்களும் வாழ்த்துகளும்!.தினமணியில்,'கலாரசிகனில்' படித்துவிட்டு,நானும் நிலவன் அய்யாவும் ரொம்ப சந்தோஷப்பட்டோம் ..!
பதிலளிநீக்குஅப்புறம்,பள்ளிக்குப் பக்கத்தில் வீடு கிடைத்திருக்கும் என நினைக்கிறேன்..!
வாழ்த்துகள்..!
வணக்கம் அண்ணா..மகிழ்ந்து வாழ்த்துவதற்கு மிக்க நன்றி.
நீக்குஒரு வீடு பார்த்திருக்கிறோம், இன்னும் ஓரிரு நாட்களில் சென்று விடுவோம் என்று நினைக்கிறேன் ..நன்றி அண்ணா.
நன்றி சகோதரரே
பதிலளிநீக்கு“தம்மின்தம் தங்கை அறிவுடைமை மாநிலத்து
பதிலளிநீக்குஅண்ணனுக் கெல்லாம் இனிது“ - வேறென்ன சொல்ல? இன்னும் இன்னும் எழுதி, இன்னும் இன்னும் பற்பல நூல்கள் வெளியிட்டு, இன்னும் இன்னும் பேரும் புகழும் பெற வாழ்த்துகிறேன் மா! (அந்த மொழிபெயர்ப்புத்தான் உன் மாஸ்டர் பீஸ் - அதை மறந்துவிட வேண்டாம்)
சிறந்த பகிர்வு
பதிலளிநீக்குதொடருங்கள்
வாழ்த்துக்கள் கிரேஸ்! :)
பதிலளிநீக்குநன்றி வருண்
நீக்குவாழ்த்துக்கள் சகோதரி.
பதிலளிநீக்குதினமணி ஆசிரியரின் பாராட்டு உங்களுக்கு ஒரு ஊக்கப் பரிசு. மேலும் நிறைய எழுத வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குகலக்கல் கிரேஸ்
பதிலளிநீக்குதினமணியில் வந்ததற்கு வாழ்த்துக்கள் சகோதரி! அந்த நாலு வரிக் கவிதை மிகவும் அருமை!
பதிலளிநீக்குமென்மேலும் உயர வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்கு