மதுரை பதிவர் சந்திப்பில் என் முதல் கவிதைத்தொகுப்பு 'துளிர் விடும் விதைகள்' வெளியிடப்பட்டது பெரும் மகிழ்ச்சி. பல பதிவர்களையும் நேரில் பார்த்துப் பேசியது என் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கியது.
இப்பொழுது நூல் வெளியீடு பற்றி....
என் தந்தை திரு.வின்சென்ட் வெளியிட திரு.முத்துநிலவன் அண்ணா பெற்றுக்கொண்டார். கஸ்தூரிரங்கன் அண்ணாவும் எங்கள் குடும்பநண்பரான திரு.ஓ.முத்து அவர்களும் வாழ்த்திப்பேசினார்கள்.
என் தந்தை பேசும்பொழுது 'ஊரார் மெச்சி உனைப் புகழ்ந்தால் மெய்சிலிர்க்குதடி' என்ற பாரதியின் வரிகளுக்கு ஏற்பத் தன் மெய்சிலிர்ப்பதை எனக்குச் சொல்லி இப்போதைய என் கவிதைகள் மெல்லிய அலைகள் போல் இருப்பதாகவும், வயது முதிர முதிர அனுபவம் பெருக பெருக சமுதாயச் சீர்திருத்தத்திற்கான ஆழமான கருத்துக்களையுடைய கவிதைகளை நான் எழுதவேண்டும் என்று சொல்லி வாழ்த்தினார்கள்.
அடுத்துப் பேசிய முத்துநிலவன் அண்ணா அவர்கள், நற்றிணைக் காதலியின் இன்றைய கவிதைகள் என்ற தலைப்பில் என் நூலிற்கு முன்னுரை தந்திருக்கிறார்கள். நற்றிணைப் பாடலில் தலைவி தலைவனிடம் ஒரு மரத்தின் கீழ், "இந்த மரத்தின் கீழ் என்னைத் தொடாதே, ஏனென்றால் இந்த மரம் என் சகோதரி, என்னையும் இந்த மரத்தையும் ஒன்றாகத் தான் என் தாய் வளர்த்தார்கள்'. அதுபோல இயற்கையை ஆராதிக்கும் பழந்தமிழை எடுத்துக்கொண்டு, சங்க இலக்கியத்தை நான் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வருவதைப் பாராட்டினார்கள். அதோடு இன்றையச் சமுதாயத்திற்கு ஏற்ற கவிதைகளை என் நூலில் கொடுத்திருப்பதாகச் சொல்லி வாழ்த்தினார்கள்.
வாழ்த்திப்பேசிய கஸ்தூரிரங்கன் அண்ணா அவர்கள், "நல்ல கவிதை என்பது ஆகச் சிறந்த வார்த்தைகளை ஆகச்சிறந்த வரிசையில் அடுக்குவது என்பார் ஆங்கிலக் பெருங்கவி சாமுவேல் டைலர் கோல்ரிட்ஜ். தேர்ந்தெடுத்த வார்த்தைகளால் கிரேஸ் பிரதீபா கட்டிய வானவில் தோரணம் துளிர் விடும் விதைகள். கவிஞர் குளிர்களி என ஐஸ்க்ரீமை சொல்கிறபொழுதும் சூரியனை அனலி என்று செல்லமாய் சினுங்குகிறபோழுதும், கணிப்பொறி வைரசை நச்சு நிரல் என்கிற பொழுதும் தமிழ் இன்னும் பிழைத்துக் கிடக்கும் என்கிற நம்பிக்கை நமக்கு துளிர் விடுகிறது." என்று பாராட்டி இன்னும் சில கவிதைகளையும் சுட்டிக்காட்டி வாழ்த்தினார்கள். அவருடைய வாழ்த்துரை இந்த இணைப்பில்.
அடுத்து அப்பாவின் நண்பரும் எங்கள் குடும்பநண்பருமான திரு.ஓ.முத்து அவர்கள். இலக்கிய ஆர்வமும் வாசிக்கும் ஆர்வமும் கொண்ட முத்து மாமா வீட்டிற்கு வரும்போதெல்லாம் சுவையான உரையாடல்கள் இருக்கும். பல நூல்களை மேற்கோள் காட்டியும் பேசுவார்கள். நான் பிறந்ததிலிருந்து என்னைப் பார்த்து என் ஒவ்வொரு வளர்ச்சியிலும் மகிழும் அவர்கள் என் நூல் வெளியீட்டில் பேசியது எனக்கு மிக்க மகிழ்ச்சி. அவர்கள் பேசும்பொழுது, 'இது ஆரம்பம் தான், ஆலமரம் போல இன்னும் பல விழுதுகள் விட்டு பல கவிதைத்தொகுப்புகள் வரும்' என்று வாழ்த்தித் தொழிற்சங்கத் தலைவரும் முற்போக்குவாதியுமான என் தந்தையின் வளர்ப்பும் தாக்கமும் என் கவிதைகளில் இருப்பதாகச் சொன்னார்கள். தன்னை கவர்ந்த கவிதைகளைச் சொல்லி கவிதைவானில் பிரதிபா ஒளிர்வார், எண்ணற்ற புத்தகங்களைத் தருவார் என்றும் வாழ்த்தினார்கள்.
என் கணவரும் குழந்தைகளும் அன்பு நண்பர்களும் வந்திருக்க என் நூல் வெளியீடு! பல குழப்பங்களுக்கிடையே இனிதே நிறைவேறிய கனவு. அக்டோபர் பதினெட்டாம் தேதியே அமெரிக்கா செல்வதாக இருந்த நிலையில், குழப்பத்திற்கிடையே என் புத்தக வேலையைத் துவங்கினேன். பதிவர் சந்திப்பன்று இருக்க மாட்டேன் என்று நண்பர்களிடம் எல்லாம் சொல்லிவிட்டேன். ஆனாலும் என் கணவர் பயணத்தை இரு வாரங்கள் தள்ளிப்போட்டு நூலை வெளியிட்டுவிட்டு வரும் மகிழ்ச்சியை அளித்தார். செப்டம்பர் 23ஆம் தேதி முதல் வாராவாரம் பயணங்கள். அதற்கிடையே எப்படியோ என் நூல் வடிவம் பெற்று இனிதாய் வெளியிடப்பட்டுவிட்டது. பயணம் ஓயாமல் பதிவர் சந்திப்பு முடிந்து இரவோடிரவாக பெங்களூரு சென்று இதோ அட்லாண்டாவும் வந்துவிட்டேன். சென்ற ஞாயிறு தான் பதிவர் சந்திப்பா என்று வியப்பாக இருக்கிறது!!
வீடு தேடி ஓடிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இப்பதிவை இடுகிறேன். இன்னும் எழுத ஆசை இருந்தாலும் இத்தோடு முடிக்கின்றேன்...
பதிவர் சந்திப்பைப் பற்றி மற்றொரு பதிவு இடுவேன்.

உங்களை சந்தித்து பேசியதில் மிகவும் மகிழ்ச்சி... அடுத்த வருடமும் வந்து விடுங்கள் புதுக்கோட்டைக்கு...
பதிலளிநீக்குஉங்களைச் சந்தித்தது எனக்கும் மகிழ்ச்சி அண்ணா..அடுத்தவருடம் வர விருப்பம் இருந்தாலும் முடியுமா என்று தெரியவில்லை, இங்கு வந்து ஏழு மாதங்கள் தான் ஆகியிருக்கும்....பார்க்கலாம்..
நீக்கு
பதிலளிநீக்குவீடு தேடிக் கொண்டே ஒரு பதிவு
வாழ்த்துக்கள் சகோதரியாரே
ஆமாம் அண்ணா, மனதில் ஓடிக்கொண்டே இருந்தது..நன்றி.
நீக்குதம 3
பதிலளிநீக்குநூல் வெளியீட்டு விழாவின் இனிய தருணங்களைப் பகிர்ந்தமைக்கு மகிழ்ச்சி..
பதிலளிநீக்குவாழ்க நலம்..
நன்றி ஐயா
நீக்குஊர்விட்டு, நாடுவிட்டுப் போனாலும் எங்கள் நினைவு விட்டுப்போகாமல் உடனடியாகப் பதிவிட்டது மகிழ்வாக இருக்கிறது என்பதைவிட நெகிழ்வாக இருக்கிறது என்பதே உண்மை. அத்தனை பரபரப்புக்கிடையிலும், மேடையில் கூடத் தொடர்ச்சியாக உட்காராமலே ஒவ்வொருவர் பேச்சையும் ஏதோ குறிப்பெடுத்து எழுதியது போல இவ்வளவு கச்சிதமாக எழுதியிருப்பது வியப்பளிக்கிறதும்மா. இது முதல்தொகுப்புப் போல இல்லையே என்று இங்குப் பலரும் சொன்னார்கள். இன்னும் பற்பல கவிதை, கட்டுரை, மொழிபெயர்ப்புத் தொகுப்புகள் வர இதுவே முதல் விதையாகட்டும். இந்த விதைகளிலிருந்து ஒவ்வொரு துளிராக...இலையாக...பூவாக...காய்கனியாக...வ(ள)ர வாழ்த்துகிறேன்.
பதிலளிநீக்குஎங்குச் சென்றாலும் நினைவு விட்டுப்போகவே போகாது அண்ணா. மேடையில் கேட்டிருந்ததோடு காணொளியும் பார்த்தேன் அண்ணா.
நீக்குஅப்படியா? மிகவும் மகிழ்ச்சியாய் இருக்கிறது அண்ணா, யார் வழிநடத்தியது...நீங்கள் அல்லவா? :))
உங்கள் அன்பான வாழ்த்திற்கு மனமார்ந்த நன்றி அண்ணா.
துளிர் விடும் விதைகள் விருட்சமாக வாழ்த்துகள் மா...
பதிலளிநீக்குவாழ்த்துகள்! மேலும் பல! வருக தருக!
பதிலளிநீக்குவாழ்த்துகள்
பதிலளிநீக்குசிறந்த பகிர்வு
தொடருங்கள்
”துளிர்விடும் விதைகள்” நூல் வெளியீடும் பதிவர் சந்திப்பும் கண்டு
பதிலளிநீக்குபெருமகிழ்ச்சி கொண்டேன்! வெளியீட்டில் உரையாற்றியோரின்
சுருக்க உரையும் மிகச் சிறப்பு!
எல்லோரினதும் உரை காணும்போது உங்கள் நூலினை என்று
என் கைவரப் பெறுவேனோ என்னும் ஆவல் மிகுந்துவிட்டது!
உங்கள் திறமைக்கும் உழைப்பிற்கும் கிடைத்த நற்பேறு இது!
உங்கள் உயர்வு கண்டு பெருமிதம் கொள்கிறேன்!
நானும் உங்கள் தோழி என்று நினைக்கும் போது அளவில்லாத மகிழ்வாயுள்ளது!
நாடுவிட்டு வந்தும் நட்புகளோடு உங்கள் மனம் இன்னும் அங்கேயே வாழ்வதை
இத்தனை தேவைகள் அவசரம் இங்கிருக்கும் வேளையும் இட்ட பதிவு காட்டுகிறது!
யாவும் வெற்றிகரமாக அமைய வாழ்த்துகிறேன்!
என் உயர்வு கண்டு மகிழ்ந்து அன்புடன் வாழ்த்தும் உங்களைத் தோழியாகப் பெற்றது எனக்கு மகிழ்ச்சி இளமதி..மிக்க நன்றி.
நீக்குநாடுவிட்டு வந்தாலும் மனம் அங்கேயே தான் இருக்கிறது, தோழி. உங்கள் வாழ்த்திற்கு மனமார்ந்த நன்றிகள்
சந்தோஸமும் கஸ்ரமும் ஒன்றாய் வரும் என்ற விதியின் வழி போல உங்களின் நூல் வெளியீட்டின் பின்னே உங்கள் இடப்பெயர்வு நிலை எல்லாம் நல்லதுக்கே.நூலினை சென்னை போகும் போது வாங்கலாம் என்ற நம்பிக்கையுடன். வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஆமாம்..இரண்டு வேலைகளிலும் சுழன்று இங்கு வந்துவிட்டேன்..எல்லாம் நல்லதுக்குத் தான்..உங்கள் அன்பான வாழ்த்திற்கு நன்றி சகோ
நீக்குஅருமைச் சகோதரிக்கும்,மாப்பிளைக்கும்,குட்டீஸ்களுக்கும் வாழ்த்துகள்..! மதுரையில் சந்தித்தது மகிழ்ச்சியாக இருந்தது. மதுரை விழாவை நேரில் பார்க்காதவர்கள், தங்களின் பதிவைப்பார்த்து எப்படி நடந்ததெனத் தெரிந்து கொள்ளலாம்.அவ்வளவு நேர்த்தியான பதிவு.!
பதிலளிநீக்குஇந்தத் துளிர்விடும் விதைகள்,மணம் வீசும் இலக்கிய மலர்களாக,காலம் கடந்து நிற்கும் கற்பக மரங்களாக,பல்கிப் பெருக வாழ்த்துகள் சகோதரி.!
நன்றி சகோ..புதுக்கோட்டை மற்றும் மதுரையில் உங்களைச் சந்தித்ததும் மகிழ்ச்சி. உங்கள் வாழ்த்திற்கு மிக்க நன்றி
நீக்குவிழாவுக்கு வர இயலவில்லை! வாழ்த்துக்கள்! நூலின் விலையும் கிடைக்குமிடமும் சொன்னால் வாங்க உதவியாக இருக்கும்! நன்றி!
பதிலளிநீக்குநன்றி சகோ..விலை ரூ.100. நான் வெளிநாடு வந்துவிட்டதால் அப்பாவிடம் பேசிவிட்டு மின்னஞ்சல் அனுப்புகிறேன் சகோ, நன்றி.
நீக்குமதுரையில் தங்களை சந்தித்தது சந்தோஷமே... தங்களின் ''துளிர் விடும் விதைகள்'' இன்னும் படிக்க வில்லை மதுரை பதிவர் சந்திப்பு பதிவை பற்றிய வேலைகளில் மூழ்கி விட்டேன் கண்டிப்பாக படிப்பேன். நன்றி.
பதிலளிநீக்குஎனக்கும் சகோ..அவசரமில்லை, நேரம் கிடைக்கும்பொழுது படித்து உங்கள் கருத்தைச் சொல்லுங்கள். நன்றி
நீக்குமதுரை பதிவர் சந்திப்பில் தங்களது முதல் கவிதைத்தொகுப்பு 'துளிர் விடும் விதைகள்' வெளியிடப்பட்ட நிகழ்ச்சியினை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி. இதன் தொடர்ச்சியையும் ஆவலோடு எதிர் பார்க்கிறேன். அரங்கத்தில் வாங்கிய உங்கள் கவிதைநூலை இனிமேல்தான் படிக்க வேண்டும்.
பதிலளிநீக்குமேடையில் உங்கள் நூல் வெளியீட்டு விழா ஒரு குடும்ப விழாவாக நடைபெற்றது சிறப்பான விஷயம். நான் மேடைக்கு முன் வரிசையில் அமர்ந்துவிட்டதால் நிறையபேரோடு பேச இயலாமல் போய்விட்டது.
உங்களுடைய இந்த பதிவினை எனது ” மதுரையில் வலைப்பதிவர்கள்!” என்ற பதிவினில் மேற்கோளாக காட்டி இணைப்பும் (LINK) தந்துள்ளேன். நன்றி!
த.ம.6
நானும் உங்களுடன் பேச முடியாமல் போய்விட்டது. ஆமாம், எப்படியோ ஆரம்பித்து குடும்பவிழாவாக இனிது நிறைவேறிற்று. நன்றி ஐயா. உங்கள் பதிவினைப் பார்க்கிறேன், பகிர்விற்கு நன்றி ஐயா.
நீக்குமதுரை பதிவர் சந்திப்பில் உங்கள் நூலை வெளியிட்டு ,விழா வெற்றிகரமாய் அமைய உதவியதற்கு நன்றி !
பதிலளிநீக்குத ம 7
மகிழ்ச்சி சகோ , நன்றி
நீக்குவாழ்த்துக்கள் சகோதரி! மேலும் பல நூல்கள் எழுதி வெளியிட எங்கள் வாழ்த்துக்கள்! சிறந்த பகிர்வு.
பதிலளிநீக்குஉளமார்ந்த நன்றி சகோதரரே
நீக்குமேலும் பல கவிதைகளை வெளியிட வாழ்த்துக்கள் ...
பதிலளிநீக்குவிரைவில் நல்ல வீடொன்று கிடைக்கவும் வாழ்த்துக்கள்
இத்துணை விசயங்களுக்கும் நடுவில் எழுதவது பெரிய விசயம் மகிழ்நிறை இப்போதைக்கு நெட்பாஸ்டிங் மோடில் இருக்கிறார்... அவ்வளவு வேலை அவர்களுக்கு...
மிக்க நன்றி அண்ணா.
நீக்குவினோத் அலுவலகம் சென்று விட்டார், அதனால் ஹோட்டலில் தான் இருக்கவேண்டும்..ஆன்லைனில் சில பள்ளிகளையும் வீடுகளையும் பார்த்து, போனில் பேசி, குறித்துவைத்திருக்கிறேன். இரண்டு மணிநேரமாக அதைச் செய்துவிட்டு வலைப்பக்கம் வந்துவிட்டேன் அண்ணா. மதியம் ஒரு நண்பர் வந்தவுடன் வேட்டைக்குச் செல்லவேண்டும் :)
மகிழ்நிறை நெட்பாஸ்ட்டிங்கா? நல்லதுதான், ஏற்கனவே நிறைய பதிவுகள் இன்னும் படிக்கவில்லை.. :) கேட்டதாகச் சொல்லுங்கள். போன் வாங்கியவுடன் அழைக்கிறேன்.
வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குவணக்கம்
பதிலளிநீக்குசகோதரி.
தங்களின் பதிவை பார்த்த போது மிக சிரமம் பட்டுள்ளீர்கள் அதை விட வாழ்வில் ஒரு படி உயர்ந்தது போல ஒரு மகிழ்ச்சி... உண்மைதான் தங்களின் மகிழ்சியே எனது மகிழ்ச்சியும் சகோதரி பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம் சகோ..
நீக்குசிரமப்பட்டாலும் அனைத்தும் நன்றாக நடந்தது மகிழ்ச்சி சகோ. என் மகிழ்ச்சியில் மகிழும் உங்கள் நட்பு நெகிழவைக்கிறது..நன்றி சகோ
அடுத்த புத்தகம் இது போல அட்லாண்டாவிலும் நடந்தா எப்படி இருக்கும் :)
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்... வாழ்த்துக்கள்....
பதிலளிநீக்குவாழ்த்துகள்....
பதிலளிநீக்குமாமதுரையில் வெளியிடப்பட்ட தங்கள் கவிதைத் தொகுப்பு வெற்றியடைய வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்கு- சித்திரவீதிக்காரன்
http://maduraivaasagan.wordpress.com/2014/11/04
மகிழ்ச்சி.
பதிலளிநீக்குவாழ்த்துகள்.
நானும் வந்திருந்தேன். புத்தகம் பற்றி பேச கூடுதலாக நேரம் கொடுத்திருக்க வேண்டும்.
http://blogintamil.blogspot.com.au/2014/11/blog-post_25.html
பதிலளிநீக்குவலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துகள்..
Vaalthukal.
பதிலளிநீக்கு