இணையக்கல்வி - பகுதி 2
இணையக்கல்வி - பகுதி 1 பதிவில் இணையக் கல்வி பற்றி எழுதியிருந்தேன். இப்பதிவில் அது பள்ளிகளில் எப்படி பயன்படுத்துகிறார்கள் என்று எனக்குத் தெரிந்ததைப் பகிர்கிறேன்.
என் இளைய மகனுக்கு (Kindergarten) பெரென்ஸ்டைன் பியர்ஸ் (Berenstain Bears) என்ற புத்தகங்கள் பிடிக்கும்.
என் இளைய மகனுக்கு (Kindergarten) பெரென்ஸ்டைன் பியர்ஸ் (Berenstain Bears) என்ற புத்தகங்கள் பிடிக்கும்.
இணையக்கல்வி - பகுதி 1
புத்தகம், குறிப்பேடு என்று இல்லாமல் இணையவழிக் கல்வி என்பது சரியா தவறா? அதுதான் எதிர்காலமா? எல்லாம் டெக்னாலஜிமயம் தான். அதற்காகப் பிள்ளைகளுக்கு அனைத்தையும் சிறுவயதிலேயே கொடுக்கவேண்டுமா? இப்படி பல கேள்விகள் எழுவதற்கான காரணத்தைச் சொல்கிறேன்.
ஐங்குறுநூறு 411 - சொன்ன நேரத்திற்கு முன் வந்துவிட்டேன் பார்த்தாயா?
ஆர்குரல் மேகம் பெருமழைத் தூவ
கார்துவங் கிற்றே அழகியக் காட்டில்
வீழ்துளி தந்த புதுப்புனல் ஆட
தாழ்கருங் கூந்தல் தலைவிவா விரைந்தே
கார்துவங் கிற்றே அழகியக் காட்டில்
வீழ்துளி தந்த புதுப்புனல் ஆட
தாழ்கருங் கூந்தல் தலைவிவா விரைந்தே
அட்சயப் பாத்திரம்
சமைத்துக் கட்டி அனுப்பிவிட்டு
துலக்கித் தொட்டித் துடைத்துவிட்டு
பெருக்கிக் கூட்டித் துடைத்துவிட்டு
அசதி என்று ஒரு தேநீர் குடித்தால்....
பளிங்குத் தொட்டியில் மீண்டும்
துலங்க ஒரு கோப்பை!!
பின் குறிப்பு:
இக்கவிதை லேசான மனநிலையிலேயே எழுதப்பட்டது..வருத்தமோ எரிச்சலோ இல்லை :) வாழ்க்கை என்றால் உணவு வேண்டும், உணவு என்றால் பாத்திரம் கழுவவும் வேண்டும் :)))
பெண்மையை நான் மதிக்கிறேன்
எனக்குப் பிடித்த கவிதைகள் என்ற தலைப்பில் முத்துநிலவன் அண்ணா, சிறந்த இரு கவிதைகளைப் பகிர்ந்து மற்றவரும் வலைப்பின்னலாகத் தொடரலாம் என்று சொல்லியிருந்தார். பெண்மையை மதித்து மற்றவரையும் மதிக்கத் தூண்டும் அண்ணாவிற்கு என் அன்பான வணக்கங்கள். என் அன்புத்தோழி மைதிலி பெண்மையை நான் மதிக்கிறேன் என்ற தலைப்பில் அண்ணா தொடங்கிவைத்தத் தொடர்பதிவைத் தொடர்ந்தார். மைதிலிக்கும் என் அன்பு வாழ்த்துகள்!
அண்ணாவின் பதிவைப் பார்த்ததிலிருந்தே எனக்கும் தொடர வேண்டும் என்று ஆசை. ஆனால் வலைச்சரப்பணி, மேலும் பிள்ளைகளின் பள்ளியில் இந்தவாரம் பார்த்தா இத்தனை கூட்டங்கள்!! இதெற்கெல்லாம் மேலாக என் கணவர் ஊரில் இல்லை, அதனால் பிள்ளைகளைப் பள்ளியில் விடுவதில் தொடங்கி அவர் செய்யும் பணிகளையும் நானே செய்ய வேண்டியதாகப் போயிற்று. (எல்லாம் அவர்தானே செய்கிறார் என்று யாரும் கிண்டல் அடிக்கக் கூடாது, ஆமாம் சொல்லிட்டேன். :) ) பள்ளியில் ஆறு, ஏழு வயது குழந்தைகள் "Ms.Grace, you are awesome" என்று சொன்னபொழுது எத்துனை மகிழ்ச்சி!! இதையெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால், 'நடத்திக் காட்டுவேன்' என்று நடத்திக் காட்டிட்டேன்ல? :))
பெண்மையை நான் மதிக்கிறேன் என்று சொல்லும்பொழுது நான் மதிக்கும் ஒரு பெண் என் நினைவில் வந்தார். பெண்மையை மதித்து, குழந்தைகளை மதித்து, வறியவரை மதித்து, மனிதத்தை மதித்து அவர் செய்யும் பணிகள் ஏராளம். அவர் சென்ற ஆண்டு மகளிர் தினத்தன்று ஒரு கவிதை எழுதியிருந்தார். என் இனிய தோழி, உங்களுள் பலரும் அறிந்த எழில் தான் அவர். 'நடத்திக்காட்டும்' அருமையான பெண்மணியின், அருமையான கவிதையைப் பகிர்வதில் மகிழ்கிறேன்.
"அருமையான மனுசிங்கதான்
ஆனாலும் அவளைக் காமத்துடன் தான்
உற்று நோக்க முடிகிறது எனும்
பதர்கள் இருக்கும் வரை......
........
.......சுயத்தை இழக்காத
எதுவும் தான் மகிழ்வு
எனும் உள்ளுணர்வு
பெண்களிடம் தோன்றும் வரை......"
எதுவும் தான் மகிழ்வு
எனும் உள்ளுணர்வு
பெண்களிடம் தோன்றும் வரை......"
முழுக்கவிதையைப் படிக்க இங்கே சொடுக்குங்கள்.
"ஒரு நாள் மட்டும் வாழ்த்துச் சொல்லி , பரிசுகள் வழங்கி, வெளியில் உணவருந்துவதில் முடிவதில்லை மகளிர் நாள்... மீதமுள்ள 364 நாட்களிலும் பெண்ணை சக உயிராய் நினைத்து ,இணைத்து, இணைந்து வாழ்வதில் இருக்கிறது...." - சரிதானே?
இதே தலைப்பில் நீங்களும் உங்களுக்குப் பிடித்த கவிதைகளைப் பகிருமாறு வேண்டுகிறேன்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
கண்கள் நூறு வேண்டும்- அருவி இளவேனில் காலாண்டிதழில்
வட அமெரிக்கா தமிழ் சங்க பேரவையின் காலாண்டிதழ் அருவியின் இளவேனில் பதிப்பில் என் கவிதை. வாசித்து, பிடித்திருக்கிறதா என்று சொல்லுங்களேன்.
-
பொன்விழா கொண்டாடும் நியூயார்க் தமிழ்ச் சங்கத்தின் இலக்கியக் குழு 'வெள்ளிதோறும் இலக்கிய உலா' என்ற நிகழ்வினை சிறப்பாக நடத்தி வருகின்...
-
அவர் ஊரில் கிடைக்கும் கலங்கிய நீரே தேன் கலந்த பாலினும் இனியது, தோழி..
-
ஐங்குறுநூறு 401 முதல் 410 வரையிலான பாடல்கள் 'செவிலிக் கூற்றுப் பத்து' என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. தலைவனும் தலைவியும் திருமணம் ...