மழைக்கு மரம் வேண்டுமாம்!

விடாமல் கொட்டிய மழையிடம் கேட்டேன்
வெள்ளம் பெருகி மக்கள் துயரத்தைப் பாராயோ?
வறண்ட நிலம் உனக்காக ஏங்குவது அறியாயோ?
தேவையுள்ள இடம் அறிந்து பொழிய மாட்டாயோ?
உயரமான வாகனத்தில் இருந்து நன்றாகப் பார்
நியாயம் அற்ற மழையே, என்று சாடினேன்!

ஒரு நாள் இங்கு காணவில்லை!
அடுத்த நாள் விடிகாலையிலேயே வந்து சொன்னது
"நான் தனித்துச் செயல் படுவது இல்லை,
எனக்கு உறுதுணை செய்ய மரங்களை வளர்க்கச் சொல்,
பின்னர் என்னைக் கேள்வி கேள்"
சிந்திக்க வைத்துவிட்டுச் சிதறாமல் கொட்டுகிறது!

8 கருத்துகள்:

  1. வலிமையான கருத்து........
    மரம் வளர்போம்..மழை பெறுவோம் !!

    பதிலளிநீக்கு
  2. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கவிஞரே!

    பதிலளிநீக்கு
  3. கருத்துள்ள பதிவு வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...