அகயுத்தம்

உயரப் பறக்கும் மனவலிமையும்
உலகை வென்ற இறுமாப்பும் கூட
ஊசலாடிவிடும்!

உயரப் பறக்கும் மனவலிமையும்
உலகை வென்ற இறுமாப்பும் கூட
ஊசலாடிவிடும்!
அகத்தொரு கால்பந்தாட்டமா?
சூறாவளியா?
ஒருமடக்கு நீருக்கு ஊர்ந்துசென்றால்
ஓராயிரம் உதையா?
படுக்கவும் விடாமல்
நடக்கவும் விடாமல்...
இருக்கை விட்டெழவும்
ஓரப்பார்வை பார்க்கவேண்டும்
ஒருமணிநேரம் தாண்டும் விவாதத்தில்
எக்ஸ்கியூஸ்மீ என்று
வாஷ்ரூம் ஓட வேண்டும்
எதிரில் வரும் எதிரியை
எதிர்கொண்டு விடலாம்
எரிபார்வை பார்த்திடலாம்!
உதிரமாய்...
அகயுத்தம் காட்டாமல்
அகமலர்ந்தே!



20 கருத்துகள்:

  1. அருமை சகோ கவிதை மிகவும் நன்று வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. அருமையான எழுத்துக்கள் கிரேஸ். வாழ்த்துக்கள்.

    //ஒருமடக்கு நீருக்கு ஊர்ந்துசென்றால்
    ஓராயிரம் உதையா? //

    ஊர்ந்து செல்வோரை உதைக்க முடியுமோ..

    ஓராயிரம் மிதியோ ? என்று சொல்லி இருக்கலாமோ ?

    மன்னிக்கவும்.. சிலருக்கு குற்றம் கண்டுபிடிப்பதே வாடிக்கை. நமக்கு அது வாடிக்கை மட்டும் அல்ல வாழ்க்கையும் தானே .. (தணிக்கை வேலையை சொல்றேன் :)

    தொடர்ந்து எழுதுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி விசு.
      உள்ளிருந்து உதைதானே? :-)
      ஹாஹா.. குற்றத்திற்காக ஓரிரு பொற்காசுகளைக் குறைத்துக்கொண்டு பரிசினைக் கொடுத்துவிடுங்கள் :-)))

      நீக்கு
  3. அகமலர்ச்சி..பல சாதனைகளுக்கு அடிப்படை

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...