ஆண்'கல்வி'


அடுப்பூதச் சொன்னார்
அடங்கி வாழச் சொன்னார்
படிப்பெதற்கு என்றார்
பால்ய மணம் செய்வித்தார்

படிதாண்டக் கூடாதென்றார்
பத்தினி என்றார்

கிழவன் செத்தால்
குமரியை விதவை என்றார்
கிழவன் செத்தால்
குமரியை
விதவை என்றார்
அடடா
அத்தனையும் தகர்த்து
அகன்ற உலகம் கண்டாள்
புதுமைப் பெண்ணாய்
மிளிர்ந்தாள்

பொறுத்திடுவாரோ கயவர்?
வன்கொடுமை வரன்கொடுமை
அதிகரித்தார்
உடை தப்பென்கிறார்
துணை தேவையென்கிறார்
அத்துணையும்
அவர் எண்ணப்படி
நேரகாலமும் அவர்சொல்படி
அளவில்லை அடக்குமுறைக்கு
அப்பப்பா
விழிப்புணர்வும் விடியலும்
பெண்கள் கண்டோம்
திரும்பும் எண்ணம்
எங்களுக்கில்லை
ஏ சமூகமே
முடிந்தால் இணைந்துகொள்
மூடப்பேச்சு இனிவேண்டாம்
ஆணுக்குப் பாடம் நடத்து
இனியேனும் திருந்தட்டும்

கல்விக்காகத் தொடர்ந்து பணியாற்றும் திரு.முத்துநிலவன் அண்ணாவின் பெண்கல்வி குறித்த இடுகையின் இணைப்பு.  கீழே கருத்துரையில் இணைப்பினைக் கொடுத்த திரு.தனபாலன் அண்ணாவிற்கு நன்றிகள்.
புதிய கல்விக்கொள்கையின் பாதிப்புகளைக் குறித்து மக்களுக்கு எடுத்துரைக்கும் அண்ணாவின் உழைப்பிற்கும் ஈடுபாட்டிற்கும் வணக்கம் கலந்த நன்றிகள்.

7 கருத்துகள்:

  1. சாட்டையடி வரிகள் சகோதரி...

    திருமிகு முத்துநிலவன் ஐயா அவர்களின் பதிவு இணைப்பு ஒன்றை இங்கு தருவதில் ---> முதல் பெண் மருத்துவர் அன்னை முத்துலட்சுமியும் இன்றைய தேசிய கல்விக் கொள்கையும் <--- மகிழ்ச்சி அடைகிறேன்... நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி அண்ணா.

      இணைப்பிற்கு நன்றி அண்ணா..நானும் வாசித்தேன்.இடுகையில் சேர்த்து விடுகிறேன்

      நீக்கு
  2. கவிதை அருமை க்ரேஸ்! வாழ்த்துகள்.

    கீதா

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...