தமிழ் இளைஞர்காள், வெற்றிவாகை சூடுங்கள்!




இளநீர் மோர் குடிப்போம்
வெளிநாட்டுப் பானம் தவிர்ப்போம் 
என்று எட்டுத்திக்கும் கேட்குது


கருவேலம் அழிப்போம்  நாட்டு
மரம், செடி , விலங்கு வளர்ப்போம்
என்று எட்டுத்திக்கும் கேட்குது

மண் காப்போம் நீர்நிலை காப்போம்
மீனவர் காப்போம் விவசாயி காப்போம்
என்று எட்டுத்திக்கும் கேட்குது


நெகிழி வேண்டாம் மது வேண்டாம்
மதச் சண்டை வேண்டாம்
என்று எட்டுத்திக்கும் கேட்குது

இன்னும் பல பல 
நேர்மறை எண்ணங்கள்
எட்டுத்திக்கும் கேட்குது
காதில் தேன் வந்துப் பாயுது

தமிழ் இளைஞர்காள், கேளுங்கள்
கேட்பது உங்கள் குரலன்றோ?
இனிப்பது உங்கள் வெற்றியன்றோ?

மக்களை ஒன்று சேர்த்துவிட்டீர்
சிந்திக்கச் செய்துவிட்டீர்
மாற்றம் காண விதைவிதைத்தீர்

மார்தட்டி வெற்றிவாகை சூடுங்கள்

அஞ்சிநடுங்கி விட்டார் கயவர்
அதனால் வன்முறை செய்துவிட்டார்
அவர்கேடு அதுவென்று புறம்தள்ளுங்கள்
கயமை எதிர்த்து அழித்திடுவோம்
ஐயமின்றி வெற்றிவாகை சூடுங்கள்!

தமிழ் இளைஞர்காள், கேளுங்கள்
ஒன்றுபட்டீர், ஒன்றுபடுத்திவிட்டீர்
இனி நல்ல மாற்றமே, நல்ல  காலமே
ஐயமின்றி வெற்றிவாகை சூடுங்கள்!


11 கருத்துகள்:

  1. அருமையான வரிகள்.தற்போதைய எழுச்சிக்கு ஏற்ற வரிகள்..

    பதிலளிநீக்கு
  2. அருமை
    போற்றுதலுக்கு உரிய மாணவர்கள்
    தமிழினத்தினை தலை நிமிர வைத்த மாணவர்கள்
    தம+1

    பதிலளிநீக்கு
  3. உணர்ச்சிப்பிழம்பான வரிகள் அருமை சகோ
    த.ம.4

    பதிலளிநீக்கு
  4. நல்ல பகிர்வு... நல்லதே நடக்கட்டும்.

    பதிலளிநீக்கு
  5. பாரதியாரின் கவிதைகள் போல இதை படிக்கும் போது ஒரு வேகம் மனதில் எழுதுகிறது பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
  6. எழுச்சி மிகுந்த வரிகளுக்கு வாழ்த்துகள் அக்கா. வாகை சூடுவோம்

    பதிலளிநீக்கு
  7. இனி நல்ல மாற்றமே..அருமை

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...