Sunday, December 11, 2016

பாரதியார் பிறந்த நாள் - வெண்பா



மகாகவி பாரதியார் பிறந்த நாளில் அவர்தம் புகழ் போற்றி தமிழ் போற்றி ஒரு பாமாலை. நெஞ்சுரமூட்டி விடுதலை உணர்வை விதைத்து அச்சமும் மடமையும் கொளுத்திய உன் புகழ் வாழ்க!
நெஞ்சு பொறுக்குதில்லையே என்றவர் அன்று பாடியதை இன்றும் பாடும் சூழலையெல்லாம் கொளுத்திடவே மனம் ஏங்குதே. மேனி செழித்தத் தமிழ்நாடு மேனி வாடுதல் அறிவாயோ? மனதில் உறுதி கொண்ட அக்கினிக் குஞ்சுகள் எந்தக் காட்டினில் வைத்தாய் சொல்வாயோ?


பாட்டினில் வீரம் படைத்துத் தமிழ்த்திரு 
நாட்டினில் மேன்மை நலனமைய - நாளெல்லாம்
ஆசைகொண்டு தன்னுரிமை ஆட்சிக்கு வித்திட்ட 
மீசைக் கவிபுகழ் வெல்

12 comments:

  1. பாரதி புகழ் என்றும் வாழ்க!..

    ReplyDelete
  2. பாரதியாரின் பிறந்த நாளில் சிறப்பானதோர் வெண்பா. பாராட்டுகள்.

    ReplyDelete
  3. அருமை சகோ/க்ரேஸ்...

    ReplyDelete
  4. பாரதி வெண்பா அருமை தங்கை....

    ReplyDelete
  5. நன்னாளை நினைவுகூர்ந்தமையறிந்து மகிழ்ச்சி.

    ReplyDelete

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...