நீ


Image: Thanks Google
















ஒவ்வோரடிக்கும் எட்டுத்திக்குகள் 
எந்த திக்கிலும் 
உடனிருக்கிறாய் நீ

எண்ண அலைகள் 
போராட்டம் என்கிறேன் 
பேராற்றல் என்கிறாய் நீ 

சரியா தவறா 
கேள்விகள் துளைக்கையில் 
ஊக்கம் தருகிறாய் நீ 

முடியுமா? எப்படி?
குழப்பங்கள் சூழ்கையில் 
தெளிவூட்டுகிறாய் நீ

அர்த்தம் தேடித் தொலைகிறேன்
தொலையாமலிருக்க
அர்த்தம் தருகிறாய் நீ

வெற்றிகண்டு பூரிக்கும் 
வேளையில் 
பெருமைப்படுகிறாய் நீ 

எனக்கு நீயாகி 
என்னுடன் நீயாகி
என்னில் நீயாகிறாய் நீ 


26 கருத்துகள்:

  1. அருமை. யார் அந்த 'நீ'? உங்கள் மறுபாதி?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. "இல்லை, எனது மனசாட்சி" என்று பதில் சொல்லியிருந்தால் நானும் "அதைத்தான் உங்கள் மறுபாதி என்றேன்" என்று சொல்லக் காத்திருந்தேன்!!!

      :)))

      நீக்கு
    2. ஹாஹாஹா

      'நீ' பலவற்றில் ஒன்றாய் இருக்கிறது :)

      நீக்கு
  2. எனக்கு நீயாகி
    என்னுடன் நீயாகி
    என்னில் நீயாகிறாய் நீ

    மிகவும் அருமை சகோ வாழ்த்துகள்
    த.ம.3

    பதிலளிநீக்கு
  3. முதல் 'ராய் 'ஏன் பிழையாய் ஆனாரோ :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இடையில் நுழைந்துவிட்டார் இடையின ராய்
      நான் அறியாமல்..
      நன்றி சகோ.. :)

      நீக்கு
  4. இவ்வளவு எங்கள் அண்ணன் செய்து அவரை உங்களில் பாதி என்று சொல்லுவதைவிட அவரே என் மனம் முழுவதும் நிறைந்து முழுவதுமாக இருக்கிறார் என்று நீங்கள் சொல்லி இருக்க வேண்டும்தானே??

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படிச் சொல்லியிருந்தா நீங்க இப்படிக் கேட்டிருக்கமுடியாது தானே? :))

      நீக்கு
  5. Bravo ... Nice
    since with lot of emotion
    triggered the right words..
    wishes to both of you

    பதிலளிநீக்கு
  6. அனைத்திற்கும் தொடக்கம் -
    நீ.. என்ற ஒற்றைச் சொல்..

    இனிமை!..

    பதிலளிநீக்கு
  7. இந்த நீ அவரவர்களின் நானுக்குப் பொருந்தும் என நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  8. அருமை! நீ எல்லாவற்றிற்கும் கூடப் போருந்தும்...இல்லையா, இடுக்கண் களைந்து இடித்துரைக்கும் மனதிற்கினிய நண்பர்/தோழியிலிருந்து, மனசாட்சி, அன்னை, தந்தை சரிபாதி வரை!!! சொல்லலாம்தானே??!!!

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...