Monday, October 24, 2016

நிசப்தம்


பனிவருடிய புல்லில்
பருப்பெடுத்து ஓடுகிறது அணில்
பறவை இரைக்குப்பியில்
பசியாறுகிறது நூற்குஞ்சமுள்ள சிறுபறவை
சூரியச் சிவப்பில் வந்துசேருகிறது
கார்டினல் பறவை
டொக்டொக் என்று
வெப்பமாற்றத்தில் ஒலியெழுப்பும்
மரக்கூரை
கால மாற்றத்தில்  ஒலியெழுப்பும்
கடிகாரம்
காற்றில் நகரும் இலையின் ஓசை
இவற்றுடன்
கையில் குளம்பியுடன்
ஏதோ நினைவுகளில் நான்

25 comments:

 1. அழகிய காலை நேரத்தை விவரிதது அருமை ஆனால் இன்னும் நன்றாக இந்த கவிதையை செதுக்கி இருக்கலாமோ என்று என் மனதில் தோன்றுகிறது

  ReplyDelete
  Replies
  1. நன்றி சகோ.
   அப்படியா? யோசித்து முன்னிருப்பதைக் கெடுக்கவேண்டாம் என்று நினைத்தேன் :). அடுத்தமுறை நினைவில் வைத்துக்கொள்கிறேன் சகோ. தோன்றியதைச் சொன்னதற்கு மிக்க நன்றி.

   Delete
 2. புரிவது போலத்தான் இருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. ஹாஹா அப்பாடா! அப்போ இது கவிதைதான். :)
   நன்றி ஸ்ரீராம் .

   Delete
 3. கவிதையை இரசித்தேன் சகோ
  த.ம.3

  ReplyDelete
  Replies
  1. நன்றி சகோ.
   நலமா? ரொம்ப நாள் ஆகிவிட்டது.

   Delete
 4. ji it is pleasing to see you ABSORBED in watching very natural things ........

  ReplyDelete

 5. ///கையில் குளம்பியுடன்
  ஏதோ நினைவுகளில் நான் ////

  நினைவுகளில் உருவெடுக்கிறது கவிதை.

  அருமை

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் சகோ. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி

   Delete
 6. வணக்கம்.

  “ கண்ணில் தெரியுதொரு காட்சி - அதிற்
  கவியின் அழகுமுழு துண்டு!”

  கவி கண் காட்டும் என்பார்கள்.

  காட்டிற்று.

  த ம

  தொடர்கிறேன் சகோ.

  த ம

  நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் அண்ணா.
   உங்கள் பாராட்டு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. நன்றி பல.

   Delete
 7. சுற்றுச்சூழல் கண் முன்னே தோன்றுகின்றது..
  கவிதை அழகு.. அருமை..

  ஆயினும், குளம்பி - !?..
  குளம்பு எனில் ஆடு, மாடு, குதிரைகளின் அடிப்பாதம் தானே!..
  குளம்பி எப்படி Coffee க்கு சரியாகும்?..

  குழம்பி என்று இருக்கலாமோ?..
  என்ன என்று ஏதும் புரியாத நிலை தானே - குழம்புதலும் குழப்புதலும்..
  ஆனால் - பல இடங்களிலும் குளம்பி என்றுதான் எழுதுகின்றார்கள்..

  தங்களுடைய தளம்.. எனினும் நமது தளம் எனும் அன்பினொடு கேட்கின்றேன்..
  எது சரி எனக் கூறுவீர்..

  வாழ்க நலம்!..

  ReplyDelete
  Replies

  1. முதலில் உங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி ஐயா.
   //குளம்பு எனில் ஆடு, மாடு, குதிரைகளின் அடிப்பாதம் தானே!..
   குளம்பி எப்படி Coffee க்கு சரியாகும்?..// குளம்பு, குளம்பி இரண்டுமே தமிழுக்குப் புது சொற்கள். விக்சனரியில் இருப்பதை இங்கு பகிர்கிறேன் ஐயா.. மாறுபாடு ஏதும் இருப்பின் தமிழ் அறிஞர்கள் சுட்டிக்காட்டித் தெளிவாக்க வேண்டிக்கொள்கிறேன்..
   " பிரேசில் நாட்டில் பயிரான காப்பிக்கொட்டை ஆடு, மாடு,மான் போன்ற விலங்குகளின் குளம்பு போலிருக்கும். அந்த அடிப்படையில் பிரேசிலியன் மொழியில் குளம்பு எனும் பொருளில் காப்பி எனும் சொல் அமைந்தது. இதை ஆய்ந்து உனர்ந்து பேரறிஞர் தேவநேயப் பாவாணர் காப்பியைக் குளம்பி எனும் சொல்லால் குறித்தார். (தாமிரபரணி பின்னும் ஒழுகும், நாஞ்சில் நாடன்).
   காப்பி என்பது குளம்பி என்று தமிழில் அறியப்படுகிறது.​ காப்பிக்கொட்டை மாட்டுக் குளம்பின் வடிவத்தில் இருப்பதால் அந்தப் பெயர் ஆங்கிலத்தில் ஏற்பட்டது (பழ. கருப்பையா, தினமணி, 24 மார்ச்சு, 2010) "

   //குழம்பி என்று இருக்கலாமோ?..
   என்ன என்று ஏதும் புரியாத நிலை தானே - குழம்புதலும் குழப்புதலும்..// சரிதான் ஐயா, ஆனால் நான் காப்பி வைத்திருந்தேன் என்ற அர்த்தத்தில் தான் எழுதினேன். குழப்பம் ஒன்றும் இல்லை.

   //தங்களுடைய தளம்.. எனினும் நமது தளம் எனும் அன்பினொடு கேட்கின்றேன்..// கண்டிப்பாக ஐயா, உங்கள் மற்றும் உங்களைப் போன்ற நண்பர்களின் அன்பும் ஊக்கமும் தானே எழுத உந்துகிறது. உங்கள் கருத்து மகிழ்வைத் தருகிறது...அன்பிற்கும் ஊக்கத்திற்கும் மனமார்ந்த நன்றிகள் ஐயா.

   Delete
  2. அன்புடையீர்..

   உண்மையில் இந்த கோணத்தில் சிந்திக்கவே இல்லை..

   20 ஆண்டுகள் பசுக்களுடன் தான் வாழ்க்கை.. இன்றும் காலையில் விருப்பம் காபி தான்.. இந்த பெயர் விஷயத்தை மட்டும் சிந்திக்க இயலாமல் போனது..

   விரிவான பதிலுரையினைக் கண்டு நெஞ்சார்ந்த மகிழ்ச்சி..

   நல்வாழ்த்துகளுடன்,
   துரை செல்வராஜூ..

   Delete
 8. இனிய தீபாவளி வாழ்த்துகள்

  ReplyDelete
 9. கையில் காபிக் கோப்பை வந்துவிட்டால் சிந்தனைக்கு பஞ்சமா என்ன... சிறகு விரிக்குமே...

  நல்ல கவிதை....

  ReplyDelete
 10. படம் அருமை ...
  கவிதையும்தான் ..
  தம +

  ReplyDelete
 11. அட! ஒரு காலைப்பொழுது! சுற்றி நடப்பதுடன் கையில் குளம்பியுடன்! என்ன் சுவை! ரசித்தோம்...

  குளம்பியின் விளக்கம் அருமை அறிந்து கொண்டோம் சகோ/க்ரேஸ்

  ReplyDelete

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...