எழுத்தில் மட்டும்


கவிதை எழுதப் போகிறேன்
என்றுதான் எழுந்தேன்
சில மணிநேரங்களுக்குப் பின்

உணவாய்...
துலக்கியப் பாத்திரங்களாய்...
பளிச்சிடும் தரையாய்...
மடித்தத் துணிகளாய்...
வகுப்பில் விட்டு அழைத்துவந்தப்
பயணங்களாய்...
சீராகவெட்டப்பட்டச்  செடிகளாய்...
மளிகைச் சாமான்களாய்...
இடையிடையே வெட்டிப்பேச்சாய்...
இதுவுமாய் அதுவுமாய்...
பலவடிவங்களில்
என் கவிதை...
எழுத்தில் மட்டும்
காணவில்லை!



20 கருத்துகள்:

  1. கவிதை.. கவிதை..
    வாழும் வாழ்க்கையே
    வண்ணமிகு கவிதை!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பல நாட்கள் கழித்து நான் வந்தாலும் உடனடியாகப் படித்துக் கருத்திட்டு ஊக்குவிக்கும் வலையுலக உறவுகள் இருப்பது பெரும்பேறு! உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி ஐயா.

      நீக்கு
  2. வாழ்க்கையை அழகான கவிதையாக்கி இருக்கிறீர்கள் பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் .

    நாங்கள் காண்கிறோம்.

    தம

    தொடர்கிறேன்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அண்ணா. உங்களை மீண்டும் பார்ப்பதில் மகிழ்ச்சி.
      கருத்திற்கு மிக்க நன்றி அண்ணா.

      நீக்கு
  4. ji your immense responsibilities in your daily life and the WAY you carry out....
    is more than your KAVITHAIGAL.......

    பதிலளிநீக்கு
  5. அருமை
    நீண்ட நாட்களுக்குப் பிறகு தங்களை வலையில்
    சந்திக்கின்றேன் சகோதரியாரே
    தொடர்ந்து எழுதுங்கள்

    பதிலளிநீக்கு
  6. கவிதையாய் வாழ்கிறீர்கள்.. அப்படி சொல்லிதான் நம்மை நாமே சமாதானப்படுத்திக்கொள்ளவேண்டியிருக்கிறது. நானும் இதுபோல் முன்பொன்று எழுதினேன். எல்லாக் காலங்களிலும் கவிதையைக் காட்டிலும் கடமைகளே முன்னிற்கின்றன நம்மைப் போன்றோர்க்கு. :)))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கீதமஞ்சரி..முட்டிமோதித் தான் எழுத வேண்டியிருக்கிறது. நீங்களும் இப்படியொன்று எழுதியிருக்கிறீர்களா? மனமொத்த தோழிகள் என்பது உறுதியாகிறது :))
      வருகைக்கும் கருத்திற்கும் நன்றிபா.

      நீக்கு
  7. எழுத்தை விட, செயலில் கவிதை தெரிவது வரவேற்கத்தக்கதுதானே!

    பதிலளிநீக்கு
  8. உண்மைதான் க்ரேஸ். பல சமயங்களில் இப்படித்தான் ஆகிப் போகிறது. அதையே தாங்கள் அழகிய கவிதையாக்கிவிட்டீர்கள்! அதுவே ஒரு வெற்றிதான் இல்லையா...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கீதா, மற்ற கடமைகளே முன் நின்றால், அவற்றை இங்கு கொண்டுவந்துவிடலாம் தானே:-)
      நன்றி கீதா..விட்டுப்போயிருந்தாலும் வந்து வாசித்துக் கருத்திடும் அன்பில் நெகிழ்கிறேன்.

      நீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...