Monday, May 16, 2016

தேர்தல் நாள்


தேர்தல் நாள் - தினமணி கவிதைமணியில் 16/5/16இல் வெளியிடப்பட்டிருக்கும் கவிதை.

வறுமை இருக்கலாம் 
வறட்சி இருக்கலாம் 
ஆனால் 
ஒரு நாள் சோறு உதவாது..

உணர்வை, உரிமையை.
ஏன்..?
உயிரையும் பணயம் வைக்கும் 
மாயமது ...இலவசம் 
உணர்ந்தால் உரிமை கைவசம்!!

தினமும் சோறு நாமே ஆக்க..
வேலை வாய்ப்பும்  பெருக
வன்முறை நீங்க
வளமுடன் இணைந்துவாழ 
நல்லதோர் மாற்றம் வேண்டும்!

வழி செய்யும் ஓர்  ஆயுதம்
வாக்குரிமையென 
 மக்கள் கையில்...
பயன்படுத்த ஒரு நாள்
ஒரே ஒரு நாள்
தேர்தல் நாள்!

                            -கிரேஸ் பிரதிபா வி.


தினமணி கவிதைமணி இணைப்பிற்கு இங்கு சொடுக்கவும். 
நன்றி!

16 comments:

  1. அந்த நாள் வாழ்வை வளமாக்கும் திருநாள் ஆகட்டும். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. நல்ல கவிதை வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. பொருத்தமான நாளில் அருமையான கவிதை.

    ReplyDelete
  4. திணமணியின் ஆஸ்தான கவிஞருக்கு பாராட்டுக்கள்

    ReplyDelete
  5. எல்லோரும் எதிர்பார்ப்பதை , கவிதை வரிகளாய் தந்ததற்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  6. அருமை! பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  7. நல்லதொரு வரிகள் சகோ வாழ்த்துகள் தொடரட்டும் சாதனைகள்.

    ReplyDelete
  8. அருமையான கவிதை!

    ReplyDelete
  9. சிறப்பான கவிதை. பாராட்டுகள்.

    த.ம. +1

    ReplyDelete
  10. அருமை வாழ்த்துகள் கிரேஸ்

    ReplyDelete
  11. அருமையான கவிதை...சகோ/க்ரேஸ்...

    ReplyDelete
  12. ji the reality in indian election is that we often fail to get good goverment good governance....

    ReplyDelete

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...