சேய்காண ஓடும்தாய்




வெண்பா மேடை - 3 
வாய்ப்பின்றி நாளெல்லாம் வாடி உழைத்தாலும் 
சேய்காண ஓடும்தாய் ஓய்வதில்லை! - பாய்ந்தவள் 
தன்வீடு சேர்ந்தபின் தன்பிள்ளைக்[கு] அன்பூட்டி 
மன்னும் மகிழ்வில் வயிறு!

12 கருத்துகள்:

  1. உணர்வான வெண்பா அருமை சகோ
    தம 1

    பதிலளிநீக்கு
  2. அருமையான தாய்மை உணர்வு வெளிப்படும் வெண்பா. வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  3. பார்ரா! வெண்பாவா? அடி தூள்!
    நல்ல முன்னேற்றம் பா! உன் கருத்தை விட்டுக்கொள்ளாமல் கவிதையின் பழைய மரபினைக் கைவசப்படுத்தி எழுதுவது மகிழ்ச்சியளிக்கிறது. இன்னும் கொஞ்சம் முயன்றால் இயல்பான -சொற்களை முடிந்தவரை பிரிக்காமல் வகையுளி இல்லாமல் (பிரித்துப்போட்டு எழுதுவதை வகையுளி என்போம்) எழுத இன்னும் கொஞ்சம்பயிற்சி இருந்தால் போதும். உன் முயற்சி, பயிற்சியாய் மாறி வெற்றி தரும் என்று நம்புகிறேன். வாழ்த்துகள் டா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா! மகிழ்ச்சி அண்ணா :)
      திருமிகு.பாரதிதாசன் ஐயா அவர்களின் பாவலர் பயிலரங்கம் பக்கத்திற்காக எழுதியது.
      தொடர்ந்து பயிற்சி செய்கிறேன் அண்ணா, மிக்க நன்றி!

      நீக்கு
  4. வெண்பாவில் நல்ல தேர்ச்சி தெரிகிறது சகோ!தொடர்ச்சியாக எழுதுங்கள்!..

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...