பாவம் சிறுத்தை


Image: thanks Google
காடழித்துக்  கற்கும்
பாடம் என்னவென்று
பார்க்க வந்ததோ


மிருகம் அழித்து
மனிதன் வாழும்
ரகசியம் அறிய வந்ததோ

பாட்டன் வாழ்ந்த
காடு காணாமல்
தேடி வந்ததோ

வாழ்விடம் தொலைத்துக்
குழுவையும் தொலைத்துத்
தடுமாறி வந்ததோ

காரணம் எதுவாயினும்
பாவம் சிறுத்தை தான்
யாவரும் அறிவாரோ?




பள்ளிக்குள் வந்த சிறுத்தை, இணைப்பு



இப்பள்ளிக்கு அருகே அடுக்குமாடிக் குடியிருப்புகளும், குடிசைகளும் உண்டு. அங்கு வெளியில் சுற்றும் சிறுவர்கள் கண்முன் வருகிறார்கள்...

21 கருத்துகள்:

  1. மிருகங்களின் இருப்பிடமான காட்டினை நாம் முற்றுகையிட, நம் வசிப்பிடம் நோக்கி அவை படையெடுக்க ஆரம்பித்துவிட்டன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான்..ஆனால் அப்படி வரும் விலங்குகள் பாவம்.
      இந்த கானொளியில் இருக்கும் இடம் பல வருடங்களுக்கு முன் வளர்ந்த இடம், கிட்டத்தட்ட நகரின் மத்தியில்..அங்கு எப்படி வந்தது என்றுதான் புரியவில்லை..

      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி தோழி

      நீக்கு
  2. கவிதையை ரசித்து விட்டு, காணொளியைப் பார்த்தால் அதிர்ச்சியாக இருக்கிறது. அதன் தாக்குதல் வீரியமில்லாமல் இருந்திருக்கிறதோ? தப்பிப்பது ஒன்றை மட்டுமே நினைத்து? அந்த மக்கள் எப்படி பயமில்லாமல் அதன் வழியில் கம்புடன் நின்றார்கள்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவிதை ரசித்ததற்கு நன்றி ஸ்ரீராம்.

      ஆமாம், பாவம் சிறுத்தை பயந்து போயிருக்கிறது. குட்டிச் சிறுத்தை!
      மக்கள் யோசிக்காமல் போய் நிற்கிறார்களே, சிறுத்தையைத் துன்புறுத்துகிறார்களே என்று தோன்றியது.

      நீக்கு
  3. கவிதை அருமை க்ரேஸ்.....சிறுத்தை பாவம். மனிதர்கள் நாம்தான் காடுகளை அழித்து வருகின்றோமே. அப்போது அவை இப்படித்தான் நகரங்களில் ஊடுருவ ஆரம்பிக்கும்...அவற்றின் இருப்பிடத்தில்தானே நாம் வாழ்ந்து வருகின்றோம். அவை தங்கள் உரிமைகளை இப்படித்தான் நிலைநாட்டிக் கொள்ளும் இல்லையா...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை கீதா, ஆனால் உரிமையை எங்கே நிலைநாட்டவிடுகிறோம்? பாவம்..
      நன்றி கீதா

      நீக்கு
  4. அது சரி மக்கள் ஏன் அதைப் புகைப்படம் எடுத்தும் வேடிக்கைப் பார்க்கவும் நிற்கின்றார்கள். அதுவே அதை மிரட்டியிருக்கும் என்றும் தோன்றுகின்றது..அது மிரண்டதில் தான் இப்படித் தன்னைக் காத்துக் கொள்ள விழைகின்றது. மக்கள் பல சமயங்களில் காமன் சென்ஸ் இல்லாமல் இருக்கின்றார்கள்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கீதா, வனத்துறையினர் வரும் வரைக்கும் மக்களையும் பத்திரிக்கையாளர்களையும் விட்டிருக்கக் கூடாது.. என்ன சொல்றது...

      நீக்கு
  5. பாவம் சிறுத்தை.. அதன் பிறகு அதற்கு என்ன ஆயிற்று?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வனத்துறையினர் மயக்கப்படுத்திப் பிடித்துச் சென்றுவிட்டனர் ஐயா.

      நீக்கு
  6. அருமையான பகிர்வு,, நாம் அதன் இடத்தில் இருந்துக்கொண்டு அதனைத் திருப்பி தாக்குகிறோம்,,

    நல்ல பகிர்வு

    பதிலளிநீக்கு
  7. மனிதன் காடுகளை ஆக்கிரமித்துக் கொண்டு வருவதே இதற்கு காரணம் காணொளி பிரமிப்பாக இருந்தது இன்றைய விஞ்ஞான உலகில் அனைவருமே அதை புகைப்படம் எடுப்பதில்தான் இருக்கின்றார்களே தவிற அதைக் காயப்படுத்தியாவது பிடிப்போம் என்ற சிந்தை இல்லை

    கவிதை நன்று சகோ வாழ்த்துகள்

    தமிழ் மணம் 4

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எதற்கு காயப்படுத்தவேண்டும் சகோ? பாவம்.. வனத்துறை வந்து மயக்கப்படுத்தும் வரை ஒதுங்கியிருந்தாலே போதுமே.. அதை விடுத்துப் பதுங்கியிருந்தச் சிறுத்தையைத் தேடிச் சென்று, துன்புறுத்தி.....


      நன்றி சகோ

      நீக்கு
  8. ஹ்ம்ம்... வளரும் நாகரிகத்தின் தாக்கம்... அ ந் த சிறுத்தையும் பாவம் அப்பள்ளி செல்லும் மாண்வர்களூம் பாவம்

    பதிலளிநீக்கு
  9. வணக்கம்
    கவிதை அருமை இரசித்தேன் வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  10. பாவம் சிறுத்தை
    அதன் இடத்தைக் களவாடியவர்கள் அல்லவா நாம்

    பதிலளிநீக்கு
  11. தங்கள் பதிவினை - எனது தளத்தினில் ஒரு பிரார்த்தனை எனும் தலைப்பில் சுட்டிக் காட்டியுள்ளேன்..

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...