ஏழ்மையின் எதிர்பார்ப்பு



வான்மழை பொய்க்காமல்  வள்ளன்மை  காட்டுமா?
கான்செழித்து மண்ணின் கலக்கத்தை நீக்குமா?

ஏகபோக ஆசையில்லை ஏட்டையும் தேவையில்லை
தேகசுகம் வாய்த்தாலே தேசமதைக் காத்திடுவோம்
ஓங்கிநிற்கும் கட்டிடங்கள் ஒய்யெனக் கூடுதிங்கே
ஓங்கும் நகரினிலே ஒன்றிடவே ஏங்குகிறோம்
நாடாளும் மேலோரும் நன்மைதனைச் செய்வாரோ 
ஓடாய்த்தான் தேயும் ஒருசாரார் துச்சமோ
ஏழ்மையின் இந்த எதிர்பார்ப்புக்  கூடியே 
வாழ்ந்தால் பெருகும் வளம்!


22/2/2016 அன்று தினமணி கவிதைமணியில் வெளிவந்திருக்கும் இந்த என் கவிதையின் இணைப்பு இதோ!


ஏட்டை - வறுமை
ஒய்யென -  விரைவாக

26 கருத்துகள்:

  1. வாழ்த்துக்கள் சகோதரியாரே
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. வாழ்த்துகள் சகோ தொடரட்டும் மேலும்....

    பதிலளிநீக்கு
  3. அந்தப்பதிவில் கருத்துரை இட முடியவில்லையே....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. write your views என்று இருப்பதில் முயற்சி செய்தீர்களா சகோ? விளம்பரங்கள் அதிகம் வருகின்றன..
      மிக்க நன்றி சகோ..

      நீக்கு
  4. வானத்தை எட்டி நிற்கும்
    உயர்ந்த மாளிகை
    யாரிங்கு கட்டி வைத்துக் கொடுத்தது?
    ஊருக்குப் பாடுபட்டு இளைத்த கூட்டமோ
    வீடின்றி வாசலின்றித் தவிக்குது...
    எத்தனை காலம் இப்படிப் போகும்?
    என்றொரு கேள்வி நாளை வரும்...
    உள்ளவை எல்லாம் யாருக்கும் சொந்தம்...?
    என்றிங்கு மாறும் வேளை வரும்...
    ஆயிரம் கைகள் கூடட்டும்...
    ஆனந்த ராகம் பாடட்டும்...
    நாளைய காலம் நம்மோடு நிச்சயம் உண்டு போராடு...
    வானகமும் வையகமும் எங்கள் கைகளில் என்றாடு...

    பதிலளிநீக்கு
  5. எதிர்பார்ப்புகள் நிறைவேற வாழ்த்துகள்மா.

    பதிலளிநீக்கு
  6. மகிழ்ச்சி வாழ்த்துக்கள். கவிதை நன்று.

    பதிலளிநீக்கு
  7. ஓடாய்த்தான் தேயும் ஒருசாரார் துச்சமோ
    ஏழ்மையின் இந்த எதிர்பார்ப்புக் கூடியே
    வாழ்ந்தால் பெருகும் வளம்!
    ---- அடடே! நீண்ட வெண்பா வா கிரேஸ்?
    12அடிவரை இதனைப் பஃறொடை வெண்பா என்போம்.
    இன்னும் இயல்பான எதுகை மோனைகளுக்குப் பயிற்சிதேவைதான். என்றாலும், கடந்த ஆண்டு பார்த்த கிரேஸின் கவிதை வடிவத்தில்தான் எவ்வளவு முன்னேற்றம்? ரொம்ப மகிழ்ச்சிம்மா.. உனது பயிற்சியும் விடா முயற்சியும் இன்னும் சிறந்த கவிதைகளை உன்னிடம் உருவாக்கும்.நெஞ்சார்நத வாழ்த்துகள் பா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அண்ணா, பஃறொடை வெண்பா முயற்சி செய்தேன். கண்டிப்பாக அண்ணா..பயிற்சியில் தீட்டிக் கொண்டே இருப்பேன் :)
      உங்கள் அன்பான வாழ்த்திற்கும் வழிநடத்தலுக்கும் மிக்க நன்றி அண்ணா.

      நீக்கு
  8. மணி மணியாக எழுதுவதினால்தான் தின(ம்)மணியில் வெளியிடுகிறார்களோ.? பாராட்டுக்கள் கிரேஸ்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா! கருத்தில் தமிழ் விளையாடுகிறதே :)
      மனமார்ந்த நன்றி சகோ

      நீக்கு
  9. >>> நாடாளும் மேலோரும் நன்மை தனைச் செய்வாரோ?..<<<

    இன்னும் எத்தனை காலத்துக்குத் தான் ஏங்கிக் கிடப்பது!..

    பற்பல சிந்தனைகளைத் தூண்டுகின்றது - கவிதை..
    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
  10. வாழ்த்துகள் ....அற்புதமான வரிகள்

    பதிலளிநீக்கு
  11. வாழ்த்துகள் பாராட்டுகள் சகோ/க்ரேஸ்! அருமை!!

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...