Tuesday, January 19, 2016

காண்பது பொய்யென

பனியும் பரிதியும் போட்டி உறையும்
தண்ணீர் உரைத்திடும் முடிவு Image:thanks Google


தங்கமாய்ச் சூரியன் என்று மயங்கியே
தங்கமே போகாதே நீவெளியே - காண்பது
பொய்யென மேனி உறைந்தபின் கூவிடு
மெய்ப்பொருள் காண்ப தறிவு 

Image:thanks Google

Image:thanks Google

41 comments:

 1. அருமை சகோ!

  உங்கள் ஊரில் -3 யா? பனிவிழும் மலர்வனம்???!!!! அட்லாண்டா அட லாண்டா என்று இருக்கிறதா..ஹஹ்ஹ்ஹ்

  ReplyDelete
  Replies
  1. நன்றி அண்ணா.

   ஹாஹா ஆமாம், மலர்வனமெல்லாம் போயே போச்சு..its gone போயிந்தே :))). அதிகபட்சம் 2C, -8 வரை என்று போகிறது..
   சர்ச்சில் ஒரு 80 வயது பாட்டி, "What's happening here? I grew up warm in the south. Now I should go to Hawaii" என்று அங்கலாய்த்தார், பாவம்.

   கருத்திற்கு மிக்க நன்றி அண்ணா :)

   Delete
  2. பாவம் பாட்டி!!! அவரது வார்த்தைகளை ரசித்தாலும்....எல்சினோ வேலையாக இருக்குமோ...உலக வெப்பமடைதல் மாறிவருகின்றது...

   Delete
  3. இந்த ஆண்டு எல்நினோ காரணம் என்றாலும் நீங்கள் சொல்வதுபோல் புவி வெப்பநிலையும் மாறிவருகிறது.
   மீள்வருகைக்கு நன்றி அண்ணா

   Delete
 2. பனிவிழுதல் நடைமுறை வாழ்விற்குக் கொஞ்சம் கடினம்தான் என்றாலும் அழகாக இருக்கும் இல்லையோ...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் கீதா. மிக அழகாகப் பிரகாசிக்கும் :)

   இங்கு மைனஸ் என்றாலும் பனி விழவில்லை, because of no precipitation. ஆனால் நாளை எதிர்பார்க்கப்படுகிறது.

   Delete
 3. அருமை ரசித்தேன் சகோ
  தமிழ் மணம் 3

  ReplyDelete
 4. அருமை தொடர்க
  தம +

  ReplyDelete
 5. வணக்கம்.

  மரபில் குறளும் நேரிசையும் கைகோர்த்தொரு பயணம்.

  எவ்வளவு இனிமை...!

  தொடருங்கள்.

  தொடர்கிறேன்.

  த ம

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் அண்ணா.
   ஆஹா! தேறி விட்டேனா? :) மகிழ்ச்சி அண்ணா.
   மரபில் எழுதத் தூண்டியதற்கு உங்களுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.
   மனமார்ந்த நன்றி அண்ணா.

   Delete
 6. அருமையான கவிதை
  த ம 7

  ReplyDelete
 7. அருமை. தில்லியிலும் நல்ல குளிர் - பனிப்பொழிவு இருப்பதில்லை என்றாலும்!

  ReplyDelete
  Replies
  1. தில்லி குளிர் பற்றி கேள்விபட்டிருக்கிறேன் அண்ணா.
   வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

   Delete
 8. சகோதரியின் வெண்பாவிற்கு பாராட்டுக்கள். ஆசிரியர் ஜோசப் விஜூ(ஊமைக்கனவுகள்) அவர்களது நற்சான்றே கிடைத்து விட்டது. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ஐயா.
   ஆமாம், பன்மடங்கு மகிழ்ச்சிதருவது இல்லையா ஐயா? :)
   வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி

   Delete
 9. Hello,
  I have visited your website and it's really good so we have a best opportunity for you.
  Earn money easily by advertising with kachhua.com.
  For registration :click below link:
  http://kachhua.com/pages/affiliate
  or contact us: 7048200816

  ReplyDelete
 10. கவிதையையும் ரசித்தேன். துளசிஜியின் வார்த்தை விளையாட்டையும் ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஸ்ரீராம்.
   //துளசிஜியின் வார்த்தை விளையாட்டையும் ரசித்தேன்// நானும் :)

   Delete
 11. அதிகாலைப்பனியில் வெளியில் செல்வது எனக்கு மிகவும் பிடிக்கும்!

  எனக்காக பாடப்பட்டதோ என சற்றே எண்ண வைத்துவிட்டது!

  அருமைத் தோழரே!

  ReplyDelete
  Replies
  1. ஓ அப்படியா சகோ? அமைதியான அழகான சூழல் அது. மகிழ்ச்சி சகோ. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

   Delete
 12. அருமையான குறுங்கவிதைகள்! இரண்டாவது மிகவும் பிடித்து இருந்தது! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 13. வெண்பாவில் அனுபவத்தை அழகாய் எழுதி விட்டீர்கள் அருமை

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ

   Delete
 14. படங்களும் பாவரிகளும் நன்று
  தொடருங்கள்

  யாழ்பாவாணனின் பாவண்ணங்கள் - 01 (மின்நூல்)
  http://www.ypvnpubs.com/2016/01/01.html

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா

   Delete
 15. அன்புள்ள சகோதரி தேன்மதுரத்தமிழ் கிரேஸ் அவர்களுக்கு டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று அவர்களின் ’மரபுக் கவிதை சரிபார்க்க உதவும் மென்பொருள்-அவலோகிதம்’ என்ற பதிவு http://www.tnmurali.com/2012/02/blog-post_05.html தங்களுக்கு உதவும் என்று நினைக்கிறேன். சென்று பார்க்கவும்.

  ReplyDelete
  Replies
  1. மீள்வருகைக்கும் என்னை நினைவில் வைத்துப் பகிர்ந்த பயனுள்ளப் பதிவிற்கும் மனம் நிறைந்த நன்றிகள் ஐயா. கண்டிப்பாகப் பார்க்கிறேன்.

   Delete
 16. சரியாக சொன்னீங்க .. சூரியனை பார்த்து ஏமாந்த நாள் பல ..

  ReplyDelete

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...