Monday, December 19, 2016

இரட்டைப் படிவங்கள்


இவன் பெயரால்
அவனையும்
அவன் பெயரால்
இவனையும்
விளிப்பது வழக்கமே
எழுத்திலும் 
வந்தகுழப்பம் புதிது!
இரட்டைப் படிவங்கள்!!!


Sunday, December 11, 2016

பாரதியார் பிறந்த நாள் - வெண்பாமகாகவி பாரதியார் பிறந்த நாளில் அவர்தம் புகழ் போற்றி தமிழ் போற்றி ஒரு பாமாலை. நெஞ்சுரமூட்டி விடுதலை உணர்வை விதைத்து அச்சமும் மடமையும் கொளுத்திய உன் புகழ் வாழ்க!
நெஞ்சு பொறுக்குதில்லையே என்றவர் அன்று பாடியதை இன்றும் பாடும் சூழலையெல்லாம் கொளுத்திடவே மனம் ஏங்குதே. மேனி செழித்தத் தமிழ்நாடு மேனி வாடுதல் அறிவாயோ? மனதில் உறுதி கொண்ட அக்கினிக் குஞ்சுகள் எந்தக் காட்டினில் வைத்தாய் சொல்வாயோ?

Thursday, December 8, 2016

கயல் போன்ற கண்கள்மறந்துவாழ என்னாலும் முடியும். ஆனால் இந்த கண்கள் காட்டிக் கொடுத்துவிடாமல் இருக்க வேண்டுமே.Tuesday, December 6, 2016

தமிழகம் கண்ட பெண் ஆளுமை


தமிழகம் கண்ட பெண் ஆளுமை முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்கள் கண் மூடி மண்ணில் தஞ்சம் புகுந்த நாள் இன்று. வேறுபாடுகள் ஒதுக்கி மாநிலம் முழுவதும் நாடு முழுவதும் துக்கம். என் மனதும் ஒருவித கனமாக ஒருவித சோகமாக உணர்கிறது. பதின்ம வயதில் நான் அடியெடுத்து வைத்த காலமும்   ஜெயலலிதா அவர்கள்  தன்னுடைய அரசியல் வாழ்வில் அழுத்தமாக அடியெடுத்து வைத்தக் காலமும் ஏறக்குறைய ஒன்று. இரட்டை இலையென்றும் இரட்டைப் புறாவென்றும் தேர்தல் சந்தித்த நாட்கள் அவை. புரிந்தும் புரியாத வயதில் நாளிதழ்களை வாசித்துவிட்டுக் கடந்து சென்றுவிடுவேன். இரட்டைப் புறாக்கள் காணாமல் போய் இரட்டை இலை நன்கு துளிர்த்தது.

Thursday, November 24, 2016

புதுக்கோட்டை புத்தகத் திருவிழாபுத்தகப் பிரியர்கள் அதிகமிருக்கும்
புதுக்கோட்டையில் புத்தகத் திருவிழா!
புத்தக வாசனை பிடித்து
வாங்கி படித்து 
வாழ்வில் சிந்தித்து 
உயர்ந்திடவே 
புறப்படுங்கள் 
புத்தகத் திருவிழாவிற்கு!

நவம்பர் 26 முதல் டிசம்பர் 4 வரை, புதுக்கோட்டை நகர் மன்றத்தில்!

விதவிதமான அரங்குகள், நிகழ்வுகள் மற்றும் விவரங்கள் அறிய  இப்பதிவில் இணைத்துள்ள படங்களைப் பார்க்கவும். நன்றி!

Wednesday, November 23, 2016

நார் உரி ஆம்பல் மென்கால்


 தவறொன்றும் நிகழாதது போல வாயில் வேண்டி தூது வருபவரைக் கண்டால் சினம் வருகிறது தோழி. என்னைப் பார்த்தாலே புரியவில்லையா? அவர் செயலால் நான் முன்பிருந்த களையிழந்து வாடி நிற்பது?

Friday, November 18, 2016

நீ


Image: Thanks Google
ஒவ்வோரடிக்கும் எட்டுத்திக்குகள் 
எந்த திக்கிலும் 
உடனிருக்கிறாய் நீ

எண்ண அலைகள் 
போராட்டம் என்கிறேன் 
பேராற்றல் என்கிறாய் நீ 

Thursday, November 10, 2016

காட்டுத்தீ


காட்டுத்தீ... காட்டுத்தீ
எங்கோ என்று செய்திவரும்
ஐயோ!
மரங்கள்..!! மிருகங்கள்!!
பறவைகள் பறந்திருக்குமா?!!
மோதிடும்  எண்ண அலைகள்!

ஆனால் இன்று?
சென்றமாதம் மலையேறி
வியந்து ரசித்த
காடழிவதின் வெப்பம்
கண்ணில் உணர்கிறேன்
எரிச்சலும் புகைமூட்டமுமாய்!

Monday, October 24, 2016

நிசப்தம்


பனிவருடிய புல்லில்
பருப்பெடுத்து ஓடுகிறது அணில்
பறவை இரைக்குப்பியில்
பசியாறுகிறது நூற்குஞ்சமுள்ள சிறுபறவை
சூரியச் சிவப்பில் வந்துசேருகிறது

Saturday, October 22, 2016

எழுத்தில் மட்டும்


கவிதை எழுதப் போகிறேன்
என்றுதான் எழுந்தேன்
சில மணிநேரங்களுக்குப் பின்

Sunday, September 18, 2016

சாளரமருகில் சிலையென

Img: thanks Google

உள்ளம் நனைக்கிறான்
தொடாமலே!
வேலைகள் விட்டு
மயங்க வைக்கிறான்!

Sunday, August 21, 2016

ஆம்பளடா

Img:thx google

மூன்றுபேர்
இருசக்கர வாகனத்தில்
வேண்டுமென்றே
குறுக்கே வெட்டி
ஆட்டம் காட்டலாம்...

Saturday, August 13, 2016

அட..நீங்கள் வேறு! Olympics memes

Image:Thanks Google

படிபடி என்பார்
பச்சைக் குழந்தையைப் 
பள்ளிசேர்க்கப் பாடாய்ப்படுவார்
பாடமென்றால் 
கணிதமும் அறிவியலும் தான்
கணித மேதையோ 
அறிவியல் மேதையோ 
அதிகம் இல்லை 
சல்லடை போட்டுத் தேடிடுவோம் 
பாதகமில்லை!

பள்ளிதாண்டியும் வகுப்பு
அதிலும் 
முன்னால் நிற்கும் படிப்பு
ஓடாதே...ஆடாதே..
கவனமாய்ப் படி என்பார்
ஒப்பித்து ஒப்பித்து 
ஒப்பேத்தும் நிலையில் ...

திடீரென்று கூவுகிறார்
ஒலிம்பிக் ஒலிம்பிக்
தங்கம் இல்லையாம்..
பதக்கம் இல்லையாம்..
அட..நீங்கள்வேறு..
அதெல்லாம் வருத்திடுமா?
இந்த நகைச்சுவைத் திறமை 
யாருக்கும் வராது!

சிரிப்பாய்ச் சிரிக்கிறார்
கண்ணாடி முன்னிருப்பது உணராமல்..
ஒலிம்பிக் ..
அங்குபோனவர் பட்ட பாடு
அப்பப்பா யாருக்குத் தெரியும்?
அதைத் தெரிந்து 
அதற்குக் குரல் கொடுத்தால் ...
அட..நீங்கள் வேறு!Tuesday, August 9, 2016

அவள் பெண்

Image:thanks Google

ஒயிலாக நடக்கும் பாதையல்ல
முட்கள் அகற்றி, கற்கள் தாண்டி
ஏறியும் குதித்தும் 
கணக்கிலடங்காக்  காயங்கள் 
புறம் தள்ளி 

Friday, August 5, 2016

புதையல்

Image:thx Internet

கரைக்குவர நினைக்கும்போதெல்லாம் 
ஓரலை உள்ளிலிழுக்கும் 
புது திசை...புதுப் பார்வை 
வித்தியாசமான மீன்கள் 
விதவிதமான சிப்பிகள் 
கையில் எடுத்துக் கொண்டு 
கரைவரப் பார்ப்பேன்..

Tuesday, May 24, 2016

தீபத்தின் ஒளியில்சுட்டெரிக்கும் வெயிலில்
         சூளையில் வெந்துவிட்டும்
பட்டாசு ஓட்டிப்
          பகலெல்லாம் தேய்ந்துவிட்டும்
கட்டிடமும் ஓங்கவே
          கல்சுமந்து ஓய்ந்துவிட்டும்
தட்டுகள் டம்பளர்கள்
           தண்ணீரில் சுத்தமாக்கி
முட்டிநிற்கும்  கண்ணீரை
           மூக்குறிஞ்சிப் புள்ளிவைத்து
எட்டத்தான் பார்க்கிறோம்
           எம்வாழ்வில் ஓங்கிடமே
திட்டம்தான் வெல்லுமா
           தீபத்தின் ஒளியில்!Monday, May 16, 2016

தேர்தல் நாள்


தேர்தல் நாள் - தினமணி கவிதைமணியில் 16/5/16இல் வெளியிடப்பட்டிருக்கும் கவிதை.

வறுமை இருக்கலாம் 
வறட்சி இருக்கலாம் 
ஆனால் 
ஒரு நாள் சோறு உதவாது..

Saturday, April 30, 2016

பேசும் மௌனம்


விதையின் மௌனம்
மரமாய்
சிப்பியின் மௌனம்
முத்தாய்

Wednesday, April 20, 2016

ஹார்வர்டு தமிழ் இருக்கை , வேண்டும் உங்கள் கை!


"தேனால் செய்தஎன் செந்தமிழ்தான்
திக்கெட்டுமே தொழ நிற்கட்டும்!" 

பாவேந்தரின் வரிகள் உண்மையாகட்டும்! 

Tuesday, April 12, 2016

வாக்களிப்பீர்! வாக்களிப்பீர்!

 

வருவது நலமாக

வாக்களிக்க நேரமில்லை,
வேலைப்பளு என்றால் 
நாளை
வேலையும் இல்லாமல் போகலாம் 
வருவது நலமாக வாக்களிப்பீர் Wednesday, April 6, 2016

உய்வுதரும் ஓட்டு

 இவர் கொள்கை என்ன? 
அவர் கொள்கை என்ன?
சமூகத் தேவை என்ன?
என்னிடம் இருப்பது ஓர் ஓட்டு
எண்ணத்தக்க ஓர் ஓட்டு
இவரா? அவரா?

Monday, April 4, 2016

நாசி ஹோலோகாஸ்ட் - 1

               ஹென்றி பெர்ன்ப்ரேவிற்கு (Henry Birnbrey) அவர் பெற்றோர் அமெரிக்கா  செல்வதற்கான விசா ஏற்பாடு செய்தனர். பதினான்கே வயதான ஹென்றி பெற்றோரை விட்டு, சொந்த ஊரை விட்டு முகம் தெரியாத நாட்டிற்குப் பயணப்பட்டார். அவருடன் அப்படிப் பயணித்த சிறு குழந்தைகள் 1200 பேர். விழிகளில் நீர்மல்க பெற்றோர்கள் வழியனுப்பி வைத்தனர். ஏன்? ஏன் அந்தக் குழந்தைகள் பெற்றோரை விட்டு அமெரிக்காவிற்குப் புறப்பட்டனர்? இதயம் வேதனையில் துடிக்கப் பிள்ளைகளை ஏன் அனுப்பினர் அப்பெற்றோர்?


               அது 1938 ஆம் ஆண்டு! ஹிட்லரின் சர்வாதிகார ஆட்சியில் ஆஸ்திரியாவின் மேல் ஜெர்மன் படை எடுத்திருந்த நேரம். பெரும்போர் வரப் போகிறது என்று உணர்ந்த பெற்றோர் தங்கள் பிள்ளைகளைப் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்ப வழியுண்டா என்று ஏங்கிய நிலையில் அமெரிக்கா 1200 சிறுவர் சிறுமியருக்கு அவசரகால விசா கொடுப்பதாக அறிவித்தது. அப்படித்தான் ஹென்றி அமெரிக்கா புறப்பட்டார். இப்பொழுது 97 வயதாகும் அவரை நேரில் பார்க்கவும் அவர் வாய் மொழியாக வரலாற்றின் கொடுமையான சில பக்கங்களைப்  பார்க்கவும்  முடிந்தது. அந்த அனுபவத்தை இங்கு பகிர்கிறேன்.

                அட்லாண்டாவில் வில்லியம் ப்ரீமன் ஜூவிஷ் ஹெரிடேஜ் அண்ட் ஹாலோகாஸ்ட் மியூசியம் உள்ளது. இது இரண்டாம் உலகப் போரில் நாசி ஆதிக்கத்தில் யூதர்களுக்கு ஏற்பட்டக் கொடுமையை, இனப்படுகொலையைப் பற்றிப்  பல தகவல்களைத் தரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. வரலாற்றை மறந்துவிடாமல் இருக்கத்  தற்போதைய தலைமுறையினர் அறிந்து கொள்ளவும் அதை அடுத்த தலைமுறைகளுக்குச் சொல்லவும் முயற்சி செய்கின்றனர். நேரில் பார்த்த சாட்சிகள் உயிருடன் இருக்கும் இக்காலத்திலேயே ஹாலோகாஸ்ட் (holocaust) நடக்கவில்லை என்று சொல்லுபவர்கள் இருப்பதால் உண்மையைப் பரப்புவதை முக்கியமாகக் கருதுகிறார்கள். அதன் ஒரு முயற்சியாக திருமிகு. ஹென்றி பெர்ன்ப்ரே மியூசியம் வந்திருந்து தன் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். மூத்தவனின்  ஆசிரியர் சொன்னதாகச் சொல்லிப் போக வேண்டும் என்று அவன் சொன்னதால் எங்களுக்கு இவ்வாய்ப்பு கிடைத்தது.

               ஹென்றி அவர்களின் வார்த்தையில், "நானும் என் தந்தை தாயும் மகிழ்வுடன் வாழ்ந்துவந்தோம். என் தந்தை என் தாயின் இரண்டாவது கணவர். முதல் கணவரும் என் தாயின் மூன்று சகோதரர்களும் முதலாம் உலகப் போரில் பங்கெடுத்து உயிர் துறந்திருந்தனர். ஒரு பிள்ளையும் இறந்து போயிருந்தான். போரிற்குப் பிறகு என் தந்தையும் தாயும் சந்தித்து மணந்து கொண்டனர். என் தந்தையும் முதல் உலகப் போரில் படைவீரராக இருந்தவர்தான். அந்தச் சூழ்நிலையில், நான் ஒன்பது வயது சிறுவனாக இருந்தபொழுது ஹிட்லர் ஆட்சிக்கு வந்தார். உடனே பெரும் மாற்றங்கள் நிகழ்ந்தன. தெருவெங்கும் சீருடை அணிந்த படைவீரர்கள் அணிவகுத்தார்கள். கடுமையான சட்டதிட்டங்கள் அமலாக்கப்பட்டன. ஒரு நாள் கடைக்குச் சென்ற என் தந்தை திரும்பிவரவில்லை. நானும் என் தாயும் பரிதவித்துத் தேடினோம், பயனில்லை. மூன்று நாட்கள் கழித்து என் தந்தை வந்தார். கடையில் அரசுக்கு எதிராக அவர் ஏதோ சொன்னதால் படைவிரர்கள் பிடித்துச் சென்று சிறையில் அடைத்துவிட்டார்களாம். மீண்டும் அவ்வாறு பேசினால் கான்சென்ட்ரேசன் காம்ப்பிற்கு அனுப்பிவிடுவதாக எச்சரித்து அனுப்பினார்களாம்."

               ஆட்சிக்கு வந்த ஆறே மாதத்தில் கான்சென்ட்ரேசன் காம்ப்புகள் அமைக்கத் துவங்கிவிட்டார்களாம் நாசிப் படையினர். யூத இனத்தவருக்கு என்று இல்லாமல் அரசை எதிர்த்துப் பேசும் எவருக்கும் கான்சென்ட்ரேசன் காம்ப் என்றுதான் துவங்கியதாம்.

              யூத மக்களை நசுக்கும் விதமாக முதலில் யூத கடைகளுக்கு மக்கள் போகக் கூடாதென்று சொன்னார்களாம். மீறிச்சென்றவர்கள் சுடப்பட்டனர். இப்படி யூதர்களின் வாழ்வாதாரங்கள் அழிக்கப்பட்டன.

மியூசியத்தில் இருக்கும் தூண். பின்புறம் பெரிய சன்னல்கள் இருப்பதைப் பாருங்கள். படங்களைச் சொடுக்கிப் பார்க்கவும்.
               "நாசி அதிகாரத்தில் மக்கள் ஒருவரை ஒருவரை வெறுக்கக் கற்றுக்கொடுக்கப்பட்டார்கள். கொலை செய்யக் கற்றுக்கொடுக்கப்பட்டார்கள். யூதமக்கள் வீடுகளை விட்டுத் துரத்தப்பட்டார்கள். எதிர்த்துப் பேசியவர்கள் கேள்வியின்றி விசாரனையின்றிக் கொல்லப்பட்டார்கள். ஆனால் ஜெர்மன் மக்களிலும் நல்லவர்கள் இருந்தார்கள். எங்குமே நல்லவர்களும் கெட்டவர்களும் சேர்ந்துதான் இருப்பார்கள். பொதுவாகக் குறைகூறிவிட முடியாது" என்கிறார் ஹென்றி.

              ஜெர்மனியில் நாசி அதிகாரத்தில் இப்படி அச்சுறுத்தப்பட்டு அங்கிருந்து தப்பி அமெரிக்கா சென்ற சிறுவர்களைத் சமூக ஆர்வலர்கள் தத்தெடுத்துச் சென்று விடுதிகளில் வளர்த்தார்களாம். ஹென்றி அவ்வாறு அலபாமாவில் இருந்த விடுதிக்கு அழைத்துச் செல்லப் பட்டிருக்கிறார். அங்கும் வாழ்க்கை அவருக்கு எளிதாக இல்லை. நிறவெறி பிடித்த வெள்ளையருக்கு யூத இனத்தவரையும் பிடிக்கவில்லை. மேலும் ஜெர்மன் மற்றும் ஜப்பானியப் பாஸ்போர்ட் வைத்திருந்தவர்களைச்  சந்தேகத்துடனே எதிரியாகத்தான் பார்த்தார்களாம். அருகிருந்த தபால் அலுவலகத்தில் மாதமொருமுறை சென்று கையெழுத்திட வேண்டுமாம்.

மியூசியத்தில்- சன்னல்கள் சிறிதாகிவிட்டன
             ஹென்றி அவர்கள் 1944இல் அமெரிக்கப் படையில் சேர்ந்து இரண்டாம் உலகப் போரில் மீண்டும் ஜெர்மனி சென்று அங்கு நடந்த கொடுமைகளை நேரில் பார்த்திருக்கிறார். "1945இல் நார்மண்டி படையெடுப்பில் (Normandy invasion) வெற்றியடைந்து ஜெர்மனி உள்ளே முன்னேறிச் சென்ற நாங்கள் ஒரு புகைவண்டிப் பெட்டியைப் பார்த்தோம். அதில் 60-70 யூத மக்களின் உடல்கள் இருந்தன. மனித உடல்கள் என்றே சொல்ல முடியாத அளவிற்கு எழும்பும் தோலுமாக இருந்தன. ஒன்றும் செய்யமுடியவில்லையே என்ற இயலாமை நெஞ்சை அடைத்தது.  இரண்டு நாட்கள் கழித்து சாலையோரம் பல மைல்கள் தூரத்திற்கு யூதமக்களின் சடலங்கள் குவிந்து கிடந்தன. தோற்கப் போகிறோம் என்ற நிலையில் சாலையோரம் நிற்கவைத்துச் சுட்டுத்தள்ளியிருக்கிறார்கள்" என்று சொன்ன ஹென்றி அவர்களின் குரலில் இன்றும் வேதனை தெரிகிறது. எப்பொழுதும் நீங்காத வேதனை!

மியூசியத்தில் - சன்னல்கள் மேலும் சிறிதாகிக் கடைசியில் சுவர்மட்டும்               மியூசியத்தை வடிவமைத்தக்    கட்டிடக்கலைஞர் அன்று ஜெர்மனியில் இருந்த நிலையைக் காண்பிக்கும் விதமாகச் செய்திருக்கிறார். "நாசி அதிகாரத் துவக்கத்தில் ஜெர்மனியில் இருந்து தப்பிச்செல்வதற்கு வழிகள் இருந்தன. ஆனால் ஏற்றுக் கொள்ளத்தான் நாடுகள் தயாராக இல்லை" என்கிறார் ஹென்றி. போகப் போக வழிகள் அடைக்கப்பட்டு இறுதியில் தப்பிச்செல்லவே முடியாதபடி ஆகிவிட்டது. அதைச் சொல்லும் விதமாக மியூசியத்தில் சன்னல்கள் படிப்படியாகக் குறைந்து அமைக்கப்பட்டுள்ளது.

               "2005இல் கனடாவில் இரண்டாம் உலகப் போரில் இருந்த ஜெர்மானியப் படைவீரரைச் சந்தித்தேன். அவர் விமானப் படையில் இருந்திருக்கிறார். எங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டோம். அப்பொழுது அவர் ஹோலோகாஸ்ட் என்று ஒன்று நடக்கவே இல்லை என்று சொன்னார். நேரில் பார்த்து நொறுங்கிய என்னிடமே இப்படிச் சொல்வார்களேயானால் நாளை என்ன ஆகும்?" என்கிறார் ஹென்றி.

                கடைசிப்படத்தில் உள்ளச் சுவற்றில் ஓட்டை தெரிகிறதல்லவா? யூத மக்கள் போதிய உணவின்றி அடைக்கப் பட்டிருந்த இடங்களில் இருந்து சிறுவர்கள் உயிரைப் பணயம் வைத்து, சுவரில் துளையிட்டுச் சென்று சாக்கடை வழியாகச் சென்று எங்காவது உணவு கிடைத்தால் எடுத்துவருவார்களாம். நாசிப் படையினர் கண்ணில் பட்டுவிட்டால் தோட்டா தான்.

மியூசியத்திலிருந்த படம்
               நாசி எதிர்ப்பாளரான ஜெர்மானியர் ரெவ்.மார்டின் நிமோலர் (Rev.Martin Niemoller, Anti-Nazist) அவர்களின் அதிகம் மேற்கோள் காட்டப்படும்  புகழ்பெற்ற வரிகள்:
"முதலில் பொதுவுடைமைவாதிகளுக்கு எதிராக வந்தனர். அப்பொழுது நான் எதிர்த்துப் பேசவில்லை, ஏனென்றால் நான் பொதுவுடைமைவாதியல்ல.

அடுத்தது, வணிகச்சங்கத்தைச் சார்ந்தவர்களைப் பிடித்தனர். அப்பொழுதும் நான் பேசவில்லை. ஏனென்றால் நான் வணிகச்சங்கத்தவன் அல்ல.

அடுத்தது யூதருக்கு எதிராக வந்தபொழுதும் நான் யூதர் அல்லவென்று வாய் மூடி இருந்தேன்.

கடைசியில் எனக்கு எதிராக வந்தபொழுது எனக்காகப் பேச ஒருவரும் இல்லை"

(இந்த மேற்கோள் பல எண்ண அலைகளை உருவாக்குகிறது)

தகவலுக்கு ஒரு இணைப்பு:

Sunday, April 3, 2016

கவிப்பேராசான் மீரா விருது 2015

என் முதல் விருது! என் பெருமை! என் மகிழ்ச்சி!
'துளிர் விடும் விதைகள்'
செழிக்கப் பெய்த மழை
'கவிப்பேராசான் மீரா' விருது!
கடலின் ஒரு துளி நீராய்
உள்ளத்து உவகையின்
துளியாய் இப்பதிவு!

Thursday, March 17, 2016

காதலே உன்னைக் காதலிக்கிறேன்


என்னைப் புரியாமல்
உணராமல்
தூற்றுகிறார்களே
என்று கலங்கும்
காதலே
உன்னைக் காதலிக்கிறேன்
கலங்காதே!

Wednesday, March 16, 2016

நிமிர்ந்தோங்கி வாழ்ந்திடவேதந்தையுடன் தானும் மதித்தேத்தும் மாண்புகளைச் 
சிந்தைதனில் ஊன்றிச் சிறந்திடவே - எந்நாளும் 
நிந்தை விலக்கி நிமிர்ந்தோங்கி வாழ்ந்திடவே 
தந்துலகில் எண்பிப்பாள் தாய்

திருமிகு.பாரதிதாசன் ஐயா அவர்களின் பாவலர் பயிலரங்கம் முகநூல் பக்கத்திற்காக எழுதியது. வெண்பா எழுதக் கற்றுக்கொள்ளும் தளம் அமைத்திருக்கும் ஐயா அவர்களுக்கு நன்றி.

Monday, March 14, 2016

போதை மருந்து..பள்ளிகள்..பலிகள்

               ஹெரோயின் போதை மருந்து தாராளமாகப் புழங்கி வந்ததும் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் அடிமையானதும், பல இளைஞர்கள் இதனால் உயிர் இழந்திருப்பதும் வெளிவந்திருக்கிறது. கடந்த ஐந்து வருடங்களில் போதை மருந்தினால் ஏற்படும் உயிர் இழப்புகள் ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளன என்கிறார்கள் இதை வெளிகொணர்ந்துள்ள செய்தியாளர்கள், 4000% அதிகரித்திருக்கிறதாம்!! கற்பனை செய்ய முடிகிறதா? ஒரு முக்கோணப் பகுதியில் (மிகுந்திருக்கும் போதை மருந்து புழக்கம் பற்றிய செய்திகள் தற்பொழுது வெளிவந்து பெற்றோரைப் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கின்றன.

Sunday, March 13, 2016

கேலியாய்ப் பறக்கிறாய்


எனக்காகப்  பாடுகிறாய்
என்றெண்ணி
ரசித்திருந்த வேளையில்
கேலியாய்ப் பறக்கிறாய்
கூடவந்த இணையுடன்!Friday, March 11, 2016

தொடரும் தொடர் பதிவர்கள்

பதிவர்கள் பல விதம்! ஒவ்வொருவரும் ஒரு தனித்துவம்! சிலரைத் தொடரலாம், பலரை அறியாமல் இருக்கலாம். நாம் அறிந்தவரை பலரை  அறியாதவர்களுக்கு அறிமுகப் படுத்தினால் பலரை அறியாமல் இருப்பது சிலரை அறியாமல் இருப்பதாகக் குறையும் அல்லவா? குழப்ப வேண்டும் என்று நினைத்துக் குழப்பவில்லை, குழப்பவில்லை என்று சொல்லிக் குழப்பவும் இல்லை. குழம்பிக் கிளம்பிப் போய்விடாமல் தொடர்ந்து  வாசிக்க வேண்டும் என்று விழைந்து விளம்புகிறேன். வாசியுங்கள், நான் குழப்பாமல் கிளம்புகிறேன்.

Thursday, March 10, 2016

தேர்வின் மதிப்பெண்களில் நசுக்கப்படும் திறமைகள்

Image: thanks Internet
" ஒவ்வொருவரும் மேதைதான். ஆனால் மரம் ஏறும் அளவுகோலை வைத்து ஒரு மீனை மதிப்பிடுவீர்களேயானால், அந்த மீன் தன் வாழ்க்கை முழுவதும் தான் ஒரு முட்டாள் என்றே நினைக்கும்." - ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

Tuesday, March 8, 2016

கணினியின் முன்னோடிப் பெண்களைத் தெரியுமா? - உலக மகளிர் தினம் 2016

              மார்ச் 8 - சர்வதேச மகளிர் தினம்! இவ்வாண்டின் கருப்பொருள் 'சரிசமநிலைக்கு உறுதி எடுப்போம்'! பெண்களின் முன்னேற்றத்திற்கும் சம உரிமைக்கும் சர்வதேச பெண்கள் ஒருங்கிணைந்து போராட வேண்டும் என்ற நோக்கில் கொண்டாடப்படும் நாள். பெண்களை மதிக்கும் சமமாகப் பாவிக்கும் சமூகம் முழுவதுமாக அமையவில்லை என்பது மிகவும் வேதனையான விசயம். நிறுவனங்களில் உயர்பதவிகளில் பெண்கள் இருப்பது குறைவாகவே இருக்கிறது. இதற்குப் பல காரணங்கள், அவற்றை அலசி ஆராய்ந்தால் பெண் சமூகம் போராட வேண்டியிருப்பது அதிகம் என்று புரியும். முன்னோடிகளாயிருந்து வரலாற்றில் புதையுண்ட சில பெண்மணிகளைப் பற்றி பகிர்வதே இப்பதிவின் நோக்கம். அவர்களுக்கும் அனைத்து மகளிருக்கும் என்னுடைய மகளிர் தின அர்ப்பணிப்பாகவும்  சிந்தனை தூண்டும் சிறு தீபமாகவும் இப்பதிவை சமர்ப்பிக்கிறேன்.

Sunday, March 6, 2016

விடுதலைப் பயணம் Freedom March

முந்தையப் பதிவுகளின் இணைப்புகள்
1.செல்மா 
2.மாரியன் 
3.ஜிம்மி லீ ஜாக்சன் 
4. ஜான் லூயிஸ் 
5. செங்குருதி ஞாயிறு


Image:thanks Google

         மகாத்மா காந்தியின் அகிம்சை வழியிலான போராட்டம் மக்களை ஈர்த்து ஆங்கிலேயரை ஆட்டம்காணச் செய்தது அல்லவா? அது போல செங்குருதி ஞாயிறும் அமெரிக்க மக்களின் உணர்ச்சிகளைத் தொட்டு அமெரிக்காவில் நிலவிவந்த வேற்றுமை வியாதியை நிலைகுலையச் செய்தது. அமைதியாக ஊர்வலம் சென்ற மக்கள் மேல் தடியடி நடத்துவதா? புகைக் குண்டுகள் வீசுவதா என்று அமெரிக்க மக்கள்  வெகுண்டனர். ஆமாம், அனைவரும் நிறவெறி பிடித்தவர்கள் அல்லவே!
         செங்குருதி ஞாயிற்றின் பலனாக மார்ச் 15ஆம் தேதி அப்போதைய அதிபர் திருமிகு.லிண்டன் பி.ஜான்சன் காங்கிரஸ் கூட்டத்தில் குடியுரிமை அமல்படுத்துவது பற்றி பேசினார்.

Tuesday, February 23, 2016

Monday, February 22, 2016

ஏழ்மையின் எதிர்பார்ப்புவான்மழை பொய்க்காமல்  வள்ளன்மை  காட்டுமா?
கான்செழித்து மண்ணின் கலக்கத்தை நீக்குமா?

Wednesday, February 17, 2016

காதல் ஓய்வதில்லை

Image: thanks Google

ஊற்றெடுக்கும் கவிதைகளை
ஒவ்வொன்றாய் அனுப்புகிறேன்
மூச்சடைக்கும் என்பதால்

Tuesday, February 16, 2016

காதல் எனும் ஒரு வழிப்பாதை
உன்னில் நானும்
என்னில் நீயும்
உயிரில் ஒன்றானபின்
உவக்கும் வாழ்வு அது
ஒரு வழிப்பாதை
காதல் எனும் ஒரு வழிப்பாதை

Monday, February 15, 2016

சட்னி சாட்சி


அவசர வேளையில் அனுமதியின்றியே 
அத்துமீறி நுழையும் 
இலவச அடுமனை ஆச்சரியங்கள்!!
Image:thanks Google

Sunday, February 14, 2016

செங்குருதி ஞாயிறு


 முந்தையப் பதிவுகளின் இணைப்புகள்
1.செல்மா 
2.மாரியன் 
3.ஜிம்மி லீ ஜாக்சன் 
4. ஜான் லூயிஸ் 

 எட்மன்ட் பெட்டஸ் பாலத்தின் மேற்பகுதியை அடைந்த ஜான் லூயிசும் வில்லியம்சும் திடிரென்று நின்றனர். அங்கே பாலமிறங்கும் இடத்தில் நீலவானம் இறங்கி வந்திருக்கிறதோ என்று ஐயுறும் வகையில் ஒரு தோற்றம்! ஆம்! நீலத்  தலைக்கவசமும் நீலச் சீருடையும் அணிந்த அலபாமா மாநிலப் படையினர் நெடுஞ்சாலை 80இன் ஒரு புறமிருந்து மறுபுறம்வரைத் திரண்டிருந்தனர். அவர்களோடு இணைந்து நிறவெறிபிடித்த வெள்ளைப் பொதுமக்களும் எள்ளி நகையாடிக் கான்பெடரேட் (Confederate) கொடிகளை அசைத்துக்கொண்டு! செல்மாவின் செரிப் ஜிம் கிளார்க் நியமனம் செய்திருந்த வெள்ளைப் பிரதிநிதிகளும் தடிகளோடும் சாட்டைகளோடும் குழுமியிருந்தனர். முட்கம்பிகள் பொருத்தப்பட்ட ரப்பர் பைப்பைச் சுழற்றிக்காட்டியதாகவும் குறிப்புகள் சொல்கின்றன.  


அன்பின் தினம்Friday, February 12, 2016

ஜான் லூயிஸ் - குடியுரிமைப் போராட்டம்


முந்தையப் பதிவுகளின் இணைப்புகள்
1.செல்மா 
2.மாரியன் 
3.ஜிம்மி லீ ஜாக்சன் 

ஜிம்மி லீ ஜாக்சனின் மரணம் அதிர்வலைகளை ஏற்படுத்தி  சம உரிமை வேண்டும் போராட்டம் மேலும்  எழுச்சிபெறச் செய்தது. ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் நிகழ்ந்த அநீதியைக் கண்டுக் குமுறினர், நிறம் கறுத்த எம்முயிர் துச்சமா என்று வெகுண்டு எழுந்தனர். குடியுரிமை பெற்று ஜிம்மியின் மனவிருப்பம் நிறைவேற்றுவோம் என்று வீறு கொண்டனர்.


Tuesday, February 9, 2016

உணர்ந்துநீ பிழை


கூரை கழுவியபின்
வீதி சேரும் மழை;
கூட்டிப் பெருக்கும் குப்பை
வீதி முனையில் குவியும்;
வாய்ப்பிருந்தால் அதுவும்
ஆயாசமின்றி அண்டை நிலத்தில்!

Sunday, February 7, 2016

பாவம் சிறுத்தை


Image: thanks Google
காடழித்துக்  கற்கும்
பாடம் என்னவென்று
பார்க்க வந்ததோ

Wednesday, February 3, 2016

ஜிம்மி லீ ஜாக்சன்

முந்தையப் பதிவுகளின் இணைப்புகள்
1.செல்மா 
2.மாரியன் 


         விவியன் அவர்கள் சென்றவுடன், ஆல்பர்ட் டர்னர் அங்கிருந்த மக்களுடன் விடுதலைப் பாடல்களைப் பாடிக்கொண்டு சிறைச்சாலை வரை ஒரு ஊர்வலம் செல்ல ஏற்பாடு செய்தார். மக்களும் பாடிக்கொண்டு அமைதியான முறையில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அமைதியான போராட்டம் என்றாலும் இரவின் போர்வையில் மிகப்பெரிய கொடுமை அரங்கேறியது.

Tuesday, February 2, 2016

இயந்திரங்களுக்கே

கூட்டமாய்க் கட்டிடங்கள்
கூடிப்பேச மனிதரில்லை
நகர மயமாக்கல்
தண்ணீர் சூழாத் தீவுகள்!


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...