Wednesday, December 9, 2015

யாசகம் - கவிதைமணியில்


இரவலரும் புரவலரும் இருந்தனர்
மன்னராட்சியில்
கொடை வள்ளலாய் இருந்தனர்
மன்னர்களும்
கேட்க நன்றாகத் தானிருக்கிறது

காலமும் மாறித்தான்விட்டது
இன்று குடியாட்சி மக்களே
குடியாட்சி!
நமக்காக, நம் ஆட்சி!
யாசகம் எதற்கு?
கொடையும் எதற்கு?
யார் போடும் பிச்சையும் எதற்கு?
நம் உரிமைகளை
எதற்கு யாசிக்க வேண்டும்?
யாரிடம் யாசிக்க வேண்டும்?
யோசிக்க மட்டும் வேண்டும்
யோசித்துச் செயல்பட வேண்டும்!


தினமணி கவிதைமணியில்


இதுவரை யோசிக்காவிட்டாலும் இப்பொழுதாவது, இனிமேலாவது யோசிக்க வேண்டும்!!!

39 comments:

 1. அருமை.

  தினமணி கவிதைமணியில் வந்திருப்பதற்கும் பாராட்டுகள்.

  தம +1

  ReplyDelete
 2. வாழ்த்துகள் வெளிவந்தமைக்கு, நன்றி பகிர்ந்தமைக்கு.

  ReplyDelete

 3. நமக்காக நாம் ஆளும் ஆட்சி என்று சொல்லி தவறான தலைவர்களை தேர்ந்தெடுத்து அவர்களிடம் யாசகம் கேட்டு கையேந்தி நிற்கிறோம்.... நமக்கா நாம் என்று சொல்லுவதைவிட அவர்களுக்காக நாம் என்று சொல்லி அடிமைகளாக நிற்கிறோம்

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் சகோ..ஒவ்வொருவரும் தானாக சிந்தித்து வாக்கிடும் வரை இந்நிலை தான்..வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ

   Delete
 4. கவிதை அருமை வாழ்த்துகள் சகோ
  தமிழ் மணம் 2

  ReplyDelete
 5. நல்ல
  யோசனை....
  கவியிலும்
  மதுரத்தமிழ் வாசனை...

  தூரத்திலிருந்து
  அடைகாக்கின்றீர்கள்...
  அன்னை
  நிலத்தில்
  அக்கினிக்குஞ்சுகள்
  பிறக்கும் அம்மா...
  இன்னும் எழுதுங்கள்..
  மரத்துப்போய்
  இருக்கிறோம்.

  ReplyDelete
 6. அருமை.

  தினமணியில் வெளி வந்தமைக்கு வாழ்த்துகள்.

  ReplyDelete
 7. கலக்குங்க ..செம்ம :)

  ReplyDelete
 8. வாழ்த்துகள்

  ReplyDelete
 9. இந்தச் சமூகத்தில் கொடையாளி என்பவன் ஏற்கெனவே கொள்ளையடித்தவன் என்பார்கள். இலவசமாக எதையாவது வாங்குகிறவன், அதைவிடப் பெரிதாக எதையோ இழக்கப்போகிறான் என்றும் சொல்வார்கள். இதெல்லாம் நம்ம மக்களுக்கு எப்பத்தான் புரியப்போகிறதோ? மணிமதுரத் தமிழாகிவிட்டாய். அப்படியே மற்ற -தமிழ்நாட்டின் இதர- இதழ்களுக்கும் குறிப்பாக ஆனந்த விகடன் சொல்வனம் பகுதிக்கும் அனுப்பிப் பாரேன்...வாழ்த்துகள் பா.

  ReplyDelete
  Replies
  1. புரியும்போதுதான் நல்லது பிறக்கும் அண்ணா..தளராமல் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும், இல்லையா அண்ணா? எல்லாம் உங்கள் ஊக்கமும் ஆலோசனையும் தான் அண்ணா..மனம் நிறைந்த நன்றிகள்.
   கண்டிப்பாக அனுப்புகிறேன் அண்ணா

   Delete
 10. வாழ்த்துக்கள் சகோதரியாரே
  வாழ்த்துக்கள்
  தம +1

  ReplyDelete
 11. அருமையான வரிகள் கிரேஸ். கவிமணியில் வெளியானமைக்கு வாழ்த்துகள். இலவசத்தால் விலைபோகும் மக்களை யோசிக்கவைக்க நம்மாலான முயற்சிகளை எல்லாவகையிலும் கையிலெடுப்போம்.. விழிப்புணர்வை உண்டாக்குவோம்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி கீதமஞ்சரி. ஆமாம், நம்மால் ஆனவகையில் விழிப்புணர்வை உண்டாக்குவோம்

   Delete
 12. நான்தான் எல்லாம் என்று இருந்தவர்களையும் யாசிக்க வைத்து விட்டது இயற்கையின் சீற்றம். யோசிக்க வேண்டிய கவிதை.

  ReplyDelete
 13. வணக்கம்
  சகோதரி
  தினமணியில் வெளிவந்தமைக்கு வாழ்த்துக்கள் த.ம 6
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 14. அருமையான வரிகள், வாழ்த்துக்கள்,

  ReplyDelete
 15. வாழ்த்துகள் க்ரேஸ் சகோ! அருமையான கவிதை.

  நாம்தானே தேர்ந்தெடுத்தோம். நமக்கு என்று சொல்லிக் கொண்டு. அவர்கள் என்ன அவர்களது பணத்திலிருந்தா வாரி வழங்குகின்றார்கள். எல்லாம் நம்மிடம் அடித்தக் கொள்ளைதானே. அதுவும் வருகின்றதா என்ன? மக்கள் திருந்த வேண்டும். பார்ப்போம்..

  ReplyDelete
  Replies
  1. நன்றி அண்ணா. உண்மைதான்..இனியாவது மாற்றம் வருகிறதா பார்ப்போம்.

   Delete
 16. யோசிக்க மறந்த,இல்லை மறுத்த காரணமே இன்று நடுத்தர குடும்பங்கள் நடுத் தெருவுக்கு வந்து விட்டன!கவிதை அருமை!

  ReplyDelete
  Replies
  1. உண்மை ஐயா..நலம்தானே?
   வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஐயா

   Delete
 17. வணக்கம் ஆண்ட்டி...என் வருகையை பதிவு செய்யவே இது...வாழ்த்துக்கள்

  ReplyDelete

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...