வீரச்சுதந்திரப் பெண்கள்

அடக்குமுறைகள் தாண்டி
ஆதிக்கவெறிகள் தகர்த்து
வீறுகொண்டு எழுந்தோம்
ஆண்களைச் சாடவில்லை
ஆதிக்கவெறி எமக்கில்லை
பாரதிகண்ட 
புதுமைப்பெண்கள் நாங்கள் 







மகுடம் எதிர்பார்க்கவில்லை
மிதியடியாகும் எண்ணமுமில்லை
யாருக்கும் அஞ்சுவதில்லை
மிதிக்கும் காலை
உடைக்காமல் விடப்போவதில்லை
இனியொரு விதிசெய்வோம்
செம்மை மாதர் நாங்கள்

இழிசொல் கேட்டு
முடங்கும் எண்ணமும்
எமக்கில்லை
இழிந்தவனை  இகழாமல்
விடப்போவதுமில்லை
ஈனப்பேச்சு மூடரை அழிப்போம்
வீரச்சுதந்திரப் பெண்கள் நாங்கள் 


எதிர்த்திடுவோம் ஈனப்பிறவிகளை! வாரீர்! வாரீர்! புதுகை திலகர் திடலுக்கு, நாளை 18-12-2015 மாலை 6 மணிக்கு!


33 கருத்துகள்:

  1. புதுகையின்
    ஆர்ப்பாட்ட போர்ப்பாட்டு வெல்லட்டும்
    ஈனப் பிறவிகள் முகத்தில் காறி உமிழட்டும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அண்ணா..இத்துடன் பெண்களை இழிவுசெய்யும் பாடல்கள் முற்றுபெற வேண்டும்.

      உடனடி வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அண்ணா

      நீக்கு
  2. அருமை சகோ உணச்சியூட்டும் வீர வரிகள் இந்த எண்ணம் ஒருவொரு தமிழ் இனப்பெண்களுக்கும் கண்டிப்பாக கடைசிவரை இருக்க வேண்டும்
    துரோகிகள் யாராயினும் தண்டிக்கப்படல் வேண்டும்
    தமிழ் மணம் 1

    பதிலளிநீக்கு
  3. பதில்கள்
    1. பெண்களை இழிவுசெய்யும் ஒவ்வொரு பாடலுக்கும் விசயத்துக்கும் உணர்வது சகோ.
      உடனடி வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

      நீக்கு
  4. வணக்கம்.

    கால முண்ட கண்மணிப் பூக்களின்
    கண்ட கனவுகள் கருகிய பேழையுள்
    ஓலமிட் டழும் பெண்மையின் கூக்குரல்
    ஓங்கி யதிர்ந்தெதி ரொலித்திடக் கேட்கிறேன்!


    கள்ளிப் பாலிலும் நெல்மணி யூட்டியும்
    கரைந்த பெண்சிசு கண்ணீர் பெருகிட
    முள்ளாய் முகிழ்த்த ஆண்மரத் தோப்பினை
    மூட்டி யழித்துதீ முகிழ்த்திடக் காண்கிறேன்!

    வேட்டை யாடும் விலங்குக ளாகியே
    வெற்றுச் சதையெனப் பெண்மை நினைந்தவர்
    ஓட்ட மெடுத்திட ஓங்கு மறிவினில்
    ஒளிநு தலினள் வளருதல் காண்கிறேன்!

    அச்சத் தளைகளில் அடிமைக ளாக்கியே
    ஆயி ரம்பல வாயிர மாண்டுகள்
    துச்ச மென்றே தூற்றியோர் சிந்தனை
    தூக்கி லேற்றுவோர் துடித்தெழக் காண்கிறேன்!

    அடுப்புக் கரிமுகம் ஆணினச் சாட்டையில்
    அடிப டத்துடித் தடங்கிய பெண்மையுள்
    வெடிப்பு றுங்கவிச் சூரியன் தோன்றியே
    விடியல் காட்டவோர் விழிசெயக் காண்கிறேன்!

    உள்ளக் கல்லறை உலரவோர் மூலையை
    உலக மென்று காட்டுவார் ஊமையாய்த்
    தள்ளி வைத்துநீ தகவிலாள் என்றதைத்
    தகர்த்தெ ழுந்துபெண் முகிழ்த்திடக் காண்கிறேன்!

    வீட்டு வேலையில் வெந்து கருகுதல்
    விதியெ னத்தமை விற்ற வாழ்க்கையை
    ஓட்டுங் கல்வியால் ஓங்கு வாளெனெ
    ஒளிந்த பெண்ணினம் ஒளிருதல் காண்கிறேன்!

    தொடர்கிறேன்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அண்ணா.
      ஆஹா!! அடக்கப்பட்டு அழிக்கப்பட்ட பெண்ணினம் முகிழ்க்கக் கண்டது மகிழ்ச்சி..இன்னும் இருக்கும் தடைகளும் பொசுக்கும் பொறி தந்தீர் தாங்கள்! உங்கள் இனிய கவிமழை பெண்ணினத்தை இன்னும் வீறுகொண்டு ஒளிரச் செய்யும். இக்கவிதையை பல முறை வாசித்தேன் அண்ணா...இதைப் பகிரப் போகிறேன் தோழியருடன். மனம் நிறைந்த நன்றிகள் அண்ணா.
      வருகைக்கு மகிழும் எனக்கு பல மடங்கு போனஸ் - உங்கள் கவிதை :) மிக்க நன்றி அண்ணா

      நீக்கு
  5. மாதர் தம்மை இழிவு செய்யும் மடைமைமையைக் கொளுத்துவோம்.

    பதிலளிநீக்கு
  6. போராட்டம் வெல்லட்டும். சகோ கவிதை வீறுகொண்ட சிறுத்தை பாயுது! கைகொடுப்போம்

    பதிலளிநீக்கு
  7. க்ரேஸ் சான்ஃப்ரான்சிஸ்கோவில் கைதாகியிருக்கும் நிக்கோல் எல்லிஸும் இந்த லிஸ்டில் சேர்த்துக் கொள்ளலாமோ. இன்னும் அதி பயங்கரமாக அதுவும் ஒரு பெண்ணே இப்படிச் செய்திருக்கின்றாளே...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கீதா, பெண்களோ ஆண்களோ இழிந்தோர் யாவரும் ஒழிய வேண்டும்.
      பெண்மை போற்றும் ஆண்களும் உண்டு :), மனிதம் போற்றா பெண்களும் உண்டு- இப்படி! :( அதுவும் அந்த UK பெற்றோர்கள், இல்லை இல்லை பேய்கள் இருக்கிறார்களே...அவர்களை!!!

      கொடுமை, கீதா!

      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

      நீக்கு
  8. வணக்கம்
    சகோதரி

    வீர வரிகள்.. உணர்ச்சி மிக்கவை ....இரசித்தேன் த.ம 3

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  9. உணர்ச்சி மிகுந்த ஒரு படைப்பை படைத்து மக்களை தட்டி எழுப்பிவிட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
  10. யார் என்ன பேசினால் நமக்கெதற்கு வம்பு என ஒதுங்கிச் செல்லாமல் தனக்கென்று
    இல்லாமல் அனைத்து பெண்டிருக்குமாய் ஊக்கத்தோடு வீரத்தையும் சேர்த்து ஊட்டும் வகையில் இருக்கிறது.. அருமை தோழி!

    பதிலளிநீக்கு
  11. நன்றி டா என்று வார்த்தைகளில் சொல்வது போதாதுதான்.
    உன் உடனடிப் பதிவுக்குத் தாமதமான பின்னூட்டம்தான் எனினும் இன்றைய ஆர்ப்பாட்டத்தை முடித்துவிட்டு ஒரு பதிவு போடுவேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் உழைப்பும் வேகமும் வழிநடத்துதலும் அறியாததா அண்ணா... போராட்டம் வெற்றிபெற வேண்டும், வாழ்த்துகள்!

      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அண்ணா.

      நீக்கு
    2. நிகழ்ச்சி சிறப்பாக நடந்ததும்மா. உன் கவிதை உட்படப் பல்வேறு பெண்ணுரிமைக் கவிதைகளையும் பதாகைகளில் எழுதிப் பயன்படுத்திக் கொண்டோம். அதுபற்றிய என்பதிவு பார். நன்றிம்மா

      நீக்கு
  12. கொடுக்கப்படும் சாட்டையடி பாடமாக அமையட்டும்.

    பதிலளிநீக்கு
  13. போர் வெல்லட்டும் - நல்ல
    பா தேர் ஓட

    பீப் ஒலி - பலருக்கு
    எச்சரிக்கை ஒலி

    http://www.ypvnpubs.com/

    பதிலளிநீக்கு
  14. உணர்ச்சி புயலின் வேகம் தெரிகிறது

    பதிலளிநீக்கு
  15. என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்மா ...!

    பதிலளிநீக்கு
  16. இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!
    இனிய 2016 இல் எல்லாம் சிறப்பாக அமைய எனது வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  17. தங்களனைவருக்கும் -
    அன்பின் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..
    எல்லா வளமும் பெற்று வாழ்க நலமுடன்!..

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...