Wednesday, November 11, 2015

படைவீரர் நாள் Veterans Day

இன்று, நவம்பர் 11ஆம் நாள், Veterans Day! தேசப்பாதுகாப்பிற்காகத் தங்களை அர்ப்பணித்த வீரர்களை நினைவுகூர்ந்து நம் நன்றியைத் தெரிவிக்கக் கொண்டாடப்படுவது. 

முதலாம் உலகப் போர் அதிகாரப்பூர்வமாக ஜூன் 28, 1919 இல் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அதற்கு ஏழு மாதங்களுக்கு முன்னர் நவம்பர் 11 ஆம் நாள் பதினோறாவது மணிநேரத்தில் கூட்டுப் படைகளுக்கும் ஜெர்மன் படைகளுக்கும் இடையே தற்காலிக போர்நிறுத்தம் ஒப்புக்கொள்ளப்பட்டு நடைமுறைப் படுத்தப்பட்டது.
அதனால் 'அனைத்துப் போர்களின் முடிவு' என்று நவம்பர் 11ஆம் நாள் 'ஆர்மிஸ்டிஸ் டே' என்று முதன் முதலாக நவம்பர் 11, 1919 இல் அப்போதைய அமெரிக்க அதிபர் திருமிகு.வில்சன் அவர்களால் அறிவிக்கப்பட்டது.
முதலில் முதலாம் உலகப் போரில் பணியாற்றியவர்களை மரியாதை செய்யும்வகையில் கொண்டாடப்பட்ட 'ஆர்மிஸ்டிஸ் டே' பின்னர் அனைத்து அமெரிக்கப் படைவீரர்களையும் கொண்டாடும் வகையில் 'வெடரன்ஸ் டே' என்று ஜுன் 1,1954 அன்று மாற்றப்பட்டது. 
அதன் பிறகு சட்டங்கள் மூலம் பல மாற்றங்கள் வந்தாலும் நவம்பர் 11ஆம் நாள் வாரத்தின் எந்த நாளில் வந்தாலும் கொண்டாடப்படுகிறது. வீரர்களின் நாட்டுப்பற்றையும் சேவையையும் மக்கள் உணர்ந்து பாராட்டி நன்றி தெரிவிக்கும்விதமாகக் கொண்டாடப்படுகிறது.

வீரர்களுக்காகப் பள்ளியிலும் தேவாலயத்திலும் குழந்தைகள் நன்றி அட்டைகளை எழுதினார்கள். அவை ஆங்காங்கே வீரர்களுக்கு அனுப்பப்படும். வீரர்களை மரியாதை செய்யும் வகையில் பல நிகழ்ச்சிகள் நடக்கின்றன. தேவாலயத்தில் சிறப்பு வழிபாடு இருந்தது. 

சில நாட்களாக இதைப் பற்றிதான் பள்ளியிலும் பாடங்கள்! 
கிண்டர்கார்டென் குழந்தைகள் கூட இதன் முக்கியத்துவத்தை அறிந்துகொள்கிறார்கள். சிறுவயதிலிருந்தே வரலாற்றை நன்கு கற்றுக்கொடுத்து நாட்டுப்பற்றை மனதில் விதைப்பதை இங்கு காண்கிறேன். அமெரிக்க வரலாற்றைப் பற்றி முதலாம் வகுப்புக் குழந்தைக்குத் தெரிந்திருக்கும் அளவிற்கு இந்தியவரலாறு எனக்கேத் தெரியாது என்பதை வெட்கத்துடன் ஒப்புக்கொள்ள வேண்டியிருக்கிறது. தொன்மையானது, பல ஆயிரம் ஆண்டு வரலாறு, பரந்துபட்ட வரலாறு என்று என்ன காரணம் சொன்னாலும்!

 சரி, வெடரன்ஸ் டேக்கு வருகிறேன். பள்ளியில் இன்று குழந்தைகள் சிவப்பு, வெள்ளை மற்றும் நீல நிற ( அமெரிக்க தேசியக்கொடியின் வண்ணங்கள்) உடையணிந்து வரச்சொன்னார்கள். ஒவ்வொரு வகுப்பிற்கும் ஒரு நிறம் என்று தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். பள்ளியின் பாடல் குழுவும் மூவண்ண உடையில் தேசப்பற்று பாடல்கள் பாடுவார்கள். என் மகனும் பாடல் குழுவில் இருக்கிறான். அதனால் அவன் சிவப்பு அணிந்து சென்றிருக்கிறான். படையில் பணியாற்றிய உறவினர்கள் நண்பர்கள்  பள்ளிக்கு அழைக்கப்பட்டுள்ளனர். 

இந்த நேரத்தில் எனக்குத் தோன்றியது, நம் நாட்டு வீரர்களையும் நன்றியுடன் நினைப்போமே! நம் பாதுகாப்பிற்காக , நம் மகிழ்ச்சிக்காக எங்கோ ஒரு இடத்தில் உயிரைப் பணயம் வைத்து, குளிரையும் வெயிலையும் பனியையும் பாராமல் நம் தேசத்தைக் காக்கின்றனரே! அவர்கள் ஒவ்வொருவருக்கும் சிரம் தாழ்ந்த வணக்கங்களும் நன்றிகளும்!

பதிவுலகில் தேசப் பாதுகாப்புப் படையில் இருப்பவர் என்று எனக்குத் தெரிந்த, சதீஸ் செல்லத்துரை சகோவிற்கு வணக்கத்துடன் மனம் கனிந்த நன்றிகள்!

உசாத்துணை: http://www.va.gov/opa/vetsday/vetdayhistory.asp

32 comments:

 1. படை வீரர நாளில் பெருமை செய்துட்டிங்க...மிக்க நன்றி!! இவ்வளவு நியாபகமாக வைத்திருந்ததுக்கு நெகிழ்வான நன்றிகள்! தினம் தினம் போராடி வாழும் பல கோடி மக்கள் முன் நாங்க எம்மாத்திரம்!

  ReplyDelete
  Replies
  1. ஸ்பேமில் இருந்த கருத்துகளை இன்றுதான் பார்த்தேன்..தாமதமாய் வெளியிடுவதற்கு மன்னிக்கவும். போராடியோ இல்லையோ மக்கள் வாழ வழிவகுப்பவர் படைவீரர்கள் தானே!
   மிக்க நன்றி.

   Delete
 2. அனானியா கமெண்ட் போட வேண்டிய சூழ்நிலை :-) :-) -சதிஷ் செல்லத்துரை

  ReplyDelete
 3. வணக்கம் சகோதரி...

  இங்கு பிரான்சிலும் இன்று படைவீரர் நாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது ! ஜெர்மனியின் பிடியிலிருந்து பிரான்ஸை மீட்டதில் அமெரிக்காவின் பங்கு அதிகம்.

  இந்திய வீரர்களை நானும் உங்களுடன் சேர்ந்து நன்றியுடன் வணங்குகிறேன்.

  நன்றி
  சாமானியன்

  எனது புதிய பதிவு : " க்ளிஷே ! "
  http://saamaaniyan.blogspot.fr/2015/11/blog-post.html
  தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் கருத்தினை பதியுங்கள். நன்றி

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோ.
   ஆமாம், கொஞ்சம் வரலாறு படித்திருக்கிறேன் :)
   //இந்திய வீரர்களை நானும் உங்களுடன் சேர்ந்து நன்றியுடன் வணங்குகிறேன்// மனமார்ந்த நன்றி சகோ.

   வருகைக்கும் கருத்திற்கும் நன்றி. உங்கள் தளம் வருகிறேன், பகிர்விற்கு நன்றி.

   Delete
 4. அருமையான பதிவு கிரேஸ். நம் சுதந்திர காற்றை சுவாசிக்க தன் சுவாசத்தை தியாக செய்த செய்ய துணிந்த இந்த வீரர்களை நினைக்கும் நாள்.
  மற்றும், நாட்டின் வரலாறு பிள்ளைகளுக்கு தெரிவதை பற்றியும் சொல்லி இருந்தீர்கள். முற்றிலும் உண்மைகள். இங்கே வரலாற்று விதையை அருமையாக விதைகின்றார்கள்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி விசு.

   Delete
 5. தேசம் காக்கும் நேசத்திற்குரிய
  படைவீரர்களைப் போற்றுவோம்
  நன்றி சகோதரியாரே
  தம +1

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அண்ணா

   Delete
 6. நமக்காகத் தம்மைத் தந்தவர்களை நினைவுகூறும் நாளைப் பற்றிய பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஐயா

   Delete
 7. சிறப்பான பகிர்வு. நமது தேசத்திற்காக உழைக்கும் எத்தனை எத்தனை படைவீரர்கள்....

  நானும் அவர்களை வணங்குகிறேன்.....

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அண்ணா

   Delete
 8. நன்றியுடன் வணங்குகிறேன் - என்றும்...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அண்ணா

   Delete
 9. நல்ல தகவல் தோழி....இப்போதெல்லாம் கொஞ்சம் குறும்பாகவும் இருக்கிறது உங்கள் பதிவுகள் முகநூலிலும் ரசிக்கிறோம்...

  ReplyDelete
  Replies
  1. நன்றி சகோ.
   ஆஹா! அப்படியா :))
   தளத்திலும் முகநூலிலும் ஊக்குவிப்பதற்கு மிக்க நன்றி

   Delete
 10. ஒருநாள் லேட்டா தெரிஞ்சுக்கிட்டு நாம் சுகமாய் இருக்க இன்னுயிரை ஈந்தவர்களை வணங்குகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. லேட்டானா என்ன ராஜி? அவர்தம் சேவைக்கு வணங்குதல் தானே முக்கியம்
   வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

   Delete
 11. வணக்கம்
  சகோதரி

  பேற்ற வேண்டிய தெய்வங்கள்.. நினைவு படுத்தி வெளியிட்டமைக்கு நன்றி த.ம 6
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 12. சிறப்பான நாளைப் பற்றிய அழகான பதிவு.

  இந்த நேரத்தில் எனக்குத் தோன்றியது, நம் நாட்டு வீரர்களையும் நன்றியுடன் நினைப்போமே! நம் பாதுகாப்பிற்காக , நம் மகிழ்ச்சிக்காக எங்கோ ஒரு இடத்தில் உயிரைப் பணயம் வைத்து, குளிரையும் வெயிலையும் பனியையும் பாராமல் நம் தேசத்தைக் காக்கின்றனரே! அவர்கள் ஒவ்வொருவருக்கும் சிரம் தாழ்ந்த வணக்கங்களும் நன்றிகளும்!

  பதிவுலகில் தேசப் பாதுகாப்புப் படையில் இருப்பவர் என்று எனக்குத் தெரிந்த, சதீஸ் செல்லத்துரை சகோவிற்கு வணக்கத்துடன் மனம் கனிந்த நன்றிகள்!///

  யெஸ் நன்றியுடன் நாமும் சிரம்தான்ழ்ந்து வணங்குவோம் நம் வீரர்களுக்கும், உலகம் முழுவதுமான வீரார்களுக்கும். நம் சகோ சதீஸ் செல்லதுரைக்கு நம் வாழ்த்துகளைச் சொல்லுவோம்....

  ReplyDelete
 13. நல்லதொரு பழக்கம்! நம்ம ஊரிலும் கொடிநாள் என்றொரு தினம் கடைபிடிப்பதுண்டு. நான் படிக்கும் காலத்தில் சிறு கொடியை அச்சிட்டு வழங்கி கொடிநாள் நிதி சேகரிப்பார்கள் . தலைவர்கள் சில ஆயிரங்களை கொடிநாள் நிதியாக வழங்கி பப்ளிசிட்டி செய்து கொள்வார்கள். இப்போது அது கூட காணாமல் போய்விட்டது. உண்மையில் நமது நாட்டைக் காக்கும் வீரர்கள்தான் நமது கடவுள்கள் என்ற எண்ணம் அனைவருக்கும் வரவேண்டும். அது பள்ளி வயதிலேயே உருவாக்கப்படவேண்டும். நம் பதிவுலக ஆசிரியர்கள் குழந்தைகளிடம் இந்த பண்பை வளர்க்க முயற்சிக்க வேண்டும். சில நூறு குழந்தைகளிடம் தூவப்படும் இந்த விதை விருட்சமாக மாறும்.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் சகோ, பள்ளியில் இருக்கும்போது கடைபிடித்தது எனக்கும் நினைவிருக்கிறது. இப்போது யார் இதற்கெல்லாம் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்? வருத்தம்தான் சகோ.
   // நம் பதிவுலக ஆசிரியர்கள் குழந்தைகளிடம் இந்த பண்பை வளர்க்க முயற்சிக்க வேண்டும். சில நூறு குழந்தைகளிடம் தூவப்படும் இந்த விதை விருட்சமாக மாறும்.// உண்மைதான் சகோ.
   வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

   Delete
 14. அருமையான பதிவு சகோ நான் இவர்களைப்பற்றி அடிக்கடி நினைத்துப் பார்ப்பேன் உலகில் உண்மையான கதாநாயகர்கள் இவர்களே...

  எல்லா மனிதர்களுமே பணத்திற்காகத்தான் வேலை செய்கிறோம் ஆனால் இவர்களின் வேலையில் தியாகமும் இருக்கின்றதே...
  இது தெரியாத பல மடையர்கள் ரசிகர் மன்றம் வைத்து சினிமாக்காரனை தூக்கி வைத்து ஆடுகின்றார்கள் இந்ச நாளில் அவர்களை நினைவு கூர்வதில் பெருமை கொள்வோம்

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் சகோ, ஆனால் இவர்களுக்கு நான் உரிய மதிப்பைக் கொடுப்பதில்லை.
   வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ

   Delete
 15. அன்பு சகோவுக்கு வணக்கம்
  தங்களை தொடர் பதிவு ஒன்றில் இணைத்திருக்கிறேன் எனது தளம் வருகை தந்து விபரம் அறிய அழைக்கின்றேன்.
  முகவரி -
  http://www.killergee.blogspot.ae/2015/11/1.html
  அன்புடன்
  தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி
  12.11.2015
  U.A.E. Time: 03.43 pm

  ReplyDelete
  Replies
  1. ஆஹா.....!! :)
   பார்க்கிறேன் சகோ, நன்றி

   Delete

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...