கட்டுரை எழுதப் போறேன், காசு வாங்க போறேன்


இதனால் நம் அன்புத் தமிழ் வலைப்பதிவர்களுக்குச் சொல்ல விரும்புவது என்னவென்றால்... திருமயக்கோட்டை நாட்டுக்காரங்க , அதாகப் பட்டது புதுக்கோட்டைப் பதிவர்கள், பதிவர் திருவிழாவிற்கு நம்மை எல்லாம் அழைத்திருக்கிறார்கள். இது நாம் அறிந்ததே! இப்போ நம்ம வலைத்தளத் தமிழ் திறமையைச் சோதிக்கப் போட்டி வைக்கிறாங்களாம். கட்டுரையாம், கவிதையாம்...பரிசு..ஒன்றல்ல! இரண்டல்ல! ஐம்பதாயிரம்! ஐம்பதாயிரம்! யாருக்கோ இல்லை, நமக்கே நமக்குத் தான்.

அதனால் பதிவர்களைக் கேட்டுக் கொள்வது என்னவென்றால் ஒவ்வொருவரும் உங்கள் ஆயுதங்களைக் கையில் எடுங்கள். மேசைக் கணினியோ, மடிக் கணினியோ, டேப்லட்டோ, ஐபாடோ (கண்டிப்பாப் பெரும்பாடு இல்லை ), ஐபோனோ கையில் எடுத்துத் தீந்தமிழ் சொற்களைக் கோர்க்கத் துவங்குங்கள். அப்படிக் கோர்த்தக் கவிதைகளையும் கட்டுரைகளையும் உங்கள் தளத்தில் பதிவிட்டு இணைப்பை bloggersmeet2015@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். வலைத்தளம் இல்லையென்று யாரும் கவலைப்பட வேண்டாம்.உடனே ஒன்றைத் திறந்துப் பதிவிடுங்கள்.

“வலைப்பதிவர் திருவிழா-2015-புதுக்கோட்டை”
“தமிழ் இணையக் கல்விக் கழகம்”
...இணைந்து நடத்தும்...
உலகளாவிய மின்தமிழ் இலக்கியப் போட்டிகள்!
மொத்தப் பரிசுத் தொகை ரூ.50,000!
ஐந்துவகைப் போட்டிகள்! – வகைக்கு மூன்று பரிசுகள்!
முதல் பரிசு ரூ.5,000
இரண்டாம் பரிசு ரூ.3,000
மூன்றாம் பரிசு ரூ.2,000
ஒவ்வொரு பரிசுடனும்
“தமிழ்க்களஞ்சியம்” இணையம் வழங்கும்
மதிப்புமிகு வெற்றிக் கேடயம்!
இவ்வாறாக   ஐந்து போட்டிகளுக்குமான
மொத்தப் பரிசுத் தொகை ரூ.50,000!
------------------------------------
வகை-(1)  கணினியில் தமிழ்வளர்ச்சி - கட்டுரைப் போட்டிகணினியில் தமிழ்வளர்ச்சி குறித்த ஆதாரத் தகவல்கள், ஆக்கபூர்வ யோசனைகள்  -ஏ4 பக்க அளவில் 4பக்கம்.  இலக்கிய நயமான தலைப்பும் தருதல் வேண்டும்
வகை-(2)   சுற்றுச்சூழல் விழிப்புணர்வு - கட்டுரைப் போட்டி - சுற்றுச்சூழல் அறியாமை தரும் ஆபத்து, விழிப்புணர்வுக்கு ஆக்கபூர்வ யோசனைகள் - ஏ4 பக்க அளவில் 4பக்கம் பொருத்தமான தலைப்பும் தருதல் வேண்டும்
வகை-(3)    பெண்கள் முன்னேற்றம் - கட்டுரைப் போட்டி - பெண்களை சமூகம் நடத்தும் விதம், பெண் முன்னேற்றம் குறித்த யோசனைகள், - ஏ4 பக்க அளவில் 4பக்கம், தலைப்பும் பொருத்தமாகத் தருதல் வேண்டும் 
வகை-(4)    புதுக்கவிதைப் போட்டி- முன்னேறிய உலகில் பண்பாட்டின் தேவை குறித்த புதுக்கவிதை - 25வரி அழகியல் மிளிரும் தலைப்போடு
வகை-(5)    மரபுக்கவிதைப் போட்டி-  இளைய சமூகத்திற்கு நம்பிக்கை யூட்டும் வீறார்ந்த எளிய-மரபுக் கவிதை 24வரி. அழகியல் ஒளிரும் தலைப்போடு

மற்ற விவரங்களுக்கு இங்கே சென்று  பாருங்கள்.

நான் கட்டுரை எழுதப் போறேன், காசு வாங்கப் போறேன்...லலலா ...நான் கவிதை எழுதப் போறேன், காசு வாங்கப் போறேன் .....லலலா ...
நீங்களும் வந்துடுங்க, சரியா?

45 கருத்துகள்:

  1. ஆஹா!! கிரேஸ் போட்டி கடினமாகி கொண்டே போகிறது! சீக்கிரம் போட்டிக் கவிதை, கட்டுரைகள் பதிவிடுங்க டியர்!

    பதிலளிநீக்கு
  2. வாழ்த்துக்கள் சகோதரியாரே
    பரிசு உங்களுக்கே
    நன்றி சகோதரியாரே
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா! இதுவே பரிசு அண்ணா, நன்றி!
      நீங்களும் எழுதுவீர்கள் என்று நம்புகிறேன்

      நீக்கு
  3. வாழ்த்துக்கள்... கண்டிப்பாக பரிசு உங்களுக்கே....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹை! இப்படிச் சொன்னா எப்படி? நானும் எழுதப் போறேன், பாத்துடலாம்! அப்படிச் சொல்லுங்க :)
      நன்றி சரவணன்

      நீக்கு
  4. நன்றிகள் பல...

    தங்களின் படைப்புகளை வாசிக்க காத்திருக்கிறோம் சகோதரி...

    பதிலளிநீக்கு
  5. காட்டுல மழை தான்.. கரும்பு தின்னக் காசு!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா! நிறையத் திறமைசாலிகள் இருக்கிறார்கள் ஐயா , அவர்களுக்குக் கிடைக்கட்டும் பரிசு!
      நன்றி

      நீக்கு
  6. போட்டியில் கலந்து கொள்ளப் போகும் அனைவருக்கும் வாழ்த்துகள்....

    வெற்றி உங்களுடையதாகட்டும்.....

    பதிலளிநீக்கு
  7. பதில்கள்
    1. முதல் வருகையும் கருத்தும் கண்டு மிகுந்த மகிழ்ச்சி அபிநயா. மிக்க நன்றி
      நீங்களும் கலந்து கொள்ளலாமே?

      நீக்கு
  8. வாழ்த்துக்கள்,
    எனக்கே எனக்கே,,,,,,,,
    நக்கீரர் மாதிரி புலம்ப விட்டுட்டாங்களே,,,,,,
    வெற்றி பெற வாழ்த்துக்கள் ,
    பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா ஆமாம் :)
      உங்கள் பங்களிப்பும் உண்டு தானே சகோதரி?
      வாருங்கள், நம் அனைவருக்கும் வெற்றி தான். நன்றி

      நீக்கு
  9. நான் கட்டுரை எழுதப் போறேன்,
    காசு வாங்கப் போறேன்... லலலா...
    நான் கவிதை எழுதப் போறேன்,
    காசு வாங்கப் போறேன்... லலலா...
    என்றவாறு
    போட்டியில் பங்குபற்றுவோர் பெருகட்டும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதே தான் ஐயா, அதற்குத் தான் இப்படி எழுதினேன்...ஆனா என்னை வாழ்த்தித் தப்பிக்கப் பாக்கிறாங்களே :)
      பலர் பங்குகொண்டால் அருமையாய் இருக்கும்.
      கருத்திற்கு நன்றி ஐயா

      நீக்கு
  10. நல்லதே நடக்கட்டும் தோழி!

    வெற்றிபெற வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி தோழி. உங்கள் கவிதைகள் உண்டு தானே? ஆவலாய் இருக்கிறோம்.

      நீக்கு
  11. பதில்கள்
    1. உங்கள் கட்டுரைகள் உண்டுதானே கீதமஞ்சரி? உங்கள் அருமையான ஆக்கங்களை வாசிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.
      நன்றி

      நீக்கு
  12. போட்டியில் கலந்து கொள்ளப்போகும் அனைவருக்கும் வாழ்த்துகள்!

    தங்களுக்கும் வாழ்த்துகள்! வெற்றி வந்து உங்களைச் சேரும்!!!!

    எங்களுக்கும் கவிதைக்கும் பங்காளி உறவு...ஒருத்தருக்கொருத்தர் பாத்துக்க மாட்டோம் ..ஹஹஹ்..

    மீண்டும் மனமார்ந்த வாழ்த்துகள்!! அக்டோபர் 11 அன்றும் நீங்கள் லலலலல பாடுவீங்க பாருங்க!!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி அண்ணா. கலந்து கொள்வதே பரிசு தானே :)

      //எங்களுக்கும் கவிதைக்கும் பங்காளி உறவு...ஒருத்தருக்கொருத்தர் பாத்துக்க மாட்டோம் ..ஹஹஹ்..// ஹாஹா அண்ணா, கட்டுரை எழுதுங்க , நீங்களும் கீதாவும்.

      உங்கள் வாழ்த்திற்கு மிக்க நன்றி அண்ணா, இது கிடைத்ததற்கப்புறம் இப்பொழுதே லலலா தான் அண்ணா.

      நீக்கு
  13. வெற்றிமீதுவெற்றிவந்து உம்மைச்சேரும்ம்ம்ம்ம்ம்......
    வாழ்த்துக்கள்யா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா! நன்றிங்க மாலதி..

      நிறைய பேர் பங்கு கொள்ள வேண்டும் என்பதே என் விருப்பம், அதுதான் பரிசு.
      தலைப்பு சும்மா ஈர்ப்பதற்கு :)

      நீக்கு
  14. அப்போ நாங்கெல்லாம் காசியப்பன் பாத்திரக் கடையில சொந்த செலவுல தான் கப் வாங்கிக்கணும் போல...!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோ, முதல் வருகைக்கு நன்றி.

      இப்படிச் சொன்னா எப்படி? நான் ஏதோ என் பங்களிப்புக்குக் கட்டுரை எழுதப் போறேன். திறமையானவர்கள் எத்தனைப் பேர் இருக்கிறீர்கள்..

      நீக்கு
  15. வாழ்த்துகள் தோழி. போட்டிகளில் கலந்து கொண்டு, வெற்றி உங்கள் வசமாக இனிய நல்வாழ்த்துகள் தோழி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்களும் கலந்து கொள்கிறீர்கள் தானே? வெற்றி பெற வாழ்த்துகள் தோழி

      நீக்கு
  16. போடியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  17. வணக்கம் சகோ !

    அடி தூள் பதிவு அசத்தல் !வெற்றி உமதே வெற்றி உமதே வாழ்க நலம் !


    எண்ணம் இனிக்க எழுத்தாணி வாய்பேச
    வண்ணக் கவிகள் வழங்கு !

    வாழ்க வளமுடன்
    தம +1


    பதிலளிநீக்கு
  18. மிகச் சரியாக திட்டமிட்டு அனைத்துப் போட்டிகளிலயும் கலந்துகொள்ளவும் ...
    ஆய்வுகள் அவசியம்
    கவிதைக்குள் மட்டும் சுருங்க வேண்டாம்..
    பரப்பை விரிவு செய்லாமே..
    பிடித்த கவிதையை முதலில் முடித்து விட்டு ஏனைய பதிவுகளுக்கு செல்லலாம்...
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படித்தான் அண்ணா நினைத்திருக்கிறேன், நீங்களும் சொல்லிவிட்டீர்கள்.
      முதலில் கட்டுரை தான் எழுதிக் கொண்டிருக்கிறேன். :)
      நன்றி அண்ணா

      நீக்கு
  19. அன்புள்ள சகோதரி,

    போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற வாழ்த்துகள்.

    நன்றி.
    தமிழ் மணம் எட்டும்.

    பதிலளிநீக்கு
  20. ஒவ்வொருவரும் உங்கள் ஆயுதங்களைக் கையில் எடுங்கள். மேசைக் கணினியோ, மடிக் கணினியோ, டேப்லட்டோ, ஐபாடோ (கண்டிப்பாப் பெரும்பாடு இல்லை ), ஐபோனோ கையில் எடுத்துத் தீந்தமிழ் சொற்களைக் கோர்க்கத் துவங்குங்கள்.

    இந்த கடைசி பத்திய யாரோ காப்பி அடிச்ச மாதிரி தெரியுதே. காப்பி அடிச்சா மாட்டிக்குவீங்க அப்டின்னு ஒரு வரி சேத்திருக்கலாமோ!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இங்கிருந்து யாராவது காப்பி அடித்துவிட்டார்களா? இல்லை எனக்கு முன் யாரேனும் இப்படி எழுதியிருக்கிறார்களா என்று தேடித் பார்த்தேன்,மதுரைத் தமிழன் சகோவின் பதிவில்தான் இருக்கிறது. போட்டி பற்றிய விவரங்களை அவர் இங்கிருந்து எடுத்திருக்கிறார் போல ..
      தகவலுக்கு நன்றி.

      வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி

      நீக்கு

உங்கள் கருத்தை வரவேற்கிறேன்...

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...